Ad Code

Ticker

6/recent/ticker-posts

1 - 8 ஆம் வகுப்பு வரை ஆல்பாஸ் ரத்து - மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

 


ஆல்பாஸ் திட்டதால் இந்தியாவில் தொடக்கக் கல்வி தரம் குறைவாகி வருவதால் ஆல்பாஸ் தேர்ச்சி முறை ரத்து.


RTE சட்டத்தின் படி 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டாலும், தேர்வு எழுதாவிட்டாலும் ஆல் பாஸ் தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது - அரசு இதழில் வெளியீடு.

  அரசுஇதழ் Download pdf 



மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம்


*பள்ளிகளில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.*


தற்போதுள்ள எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இறுதித் தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு பின் மறு தேர்வு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது


மறு தேர்வில் மீண்டும் தோல்வி அடைந்தால் அவர்கள் அடுத்த வகுப்புக்கு செல்ல முடியாது ...

என்றாலும் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை பள்ளியை விட்டு வெளியேற்றக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது ... 

தற்போது 8-ம் வகுப்பு வரை எந்த மாணவரையும் பெயில் என அறிவித்து படித்த வகுப்பிலேயே மீண்டும் படிக்க வைக்கும் முறை இல்லை...

ஆனால், இந்த சட்டப்படி 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் ஆண்டு இறுதியில் நடைபெறும் தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மறுதேர்வு வாய்ப்பு ஒன்று வழங்கப்படும்.


அதிலும் தேர்ச்சி அடையாவிட்டால் அதே வகுப்பிலேயே மீண்டும் படிக்க வேண்டும். அதேநேரம் இந்த விவகாரத்தில் *மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம்* என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்