Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " விண்ணை ஆளும் தமிழ் "

 



செவ்வாய்க்கோளுக்கு  " பயனீர் - 3 " என்ற ஆளில்லா விண்கலனை ஆய்வுக்காக அனுப்பினார்கள் 

 " நாசா " அறிவியலாளர்கள்.  செவ்வாய்க்கோளில்  உயிரினங்கள் இருந்தால் அவர்கள்  பேசும் மொழியைப் பதிவு செய்யவும் , அவற்றுடன் உரையாடவும், குறிப்பிட்ட  ஒரு மொழியைப் பதிவு செய்து அவர்கள் அனுப்பினார்கள். அப்படி அவர்கள் பதிவு செய்து அனுப்பிய மொழி எது தெரியுமா?

நம்  தமிழ்மொழியே ஆகும். 


உலகிலேயே மிகத் தொன்மையான மொழியாகவும் , இயற்கை அமைப்பில் உருவான மொழியாகவும் தமிழ்மொழி  இருப்பதால் ,  ஒருவேளை  வேற்றுக் கோள்களில் எங்கேனும் மனிதர்கள் வாழ்வதாக இருந்தால் அவர்களும் தமிழ் பேசுபவர்களாகவே  இருப்பார்கள். அப்போது அவர்களை  எளிதாகத் தொடர்பு கொள்ளலாம் எனக் கருதியே  தமிழ் மொழியை ஒலிதம் ( ஆடியோ)  மூலமாக ஒலிப்பதிவு செய்து செவ்வாய்க் கோளுக்கு அனுப்பியதாக " நாசா " அறிவித்தது. உலகில் எந்தக் கோளில் மனிதன் தோன்றினாலும் அவன் பேசும் முதல் மொழியாக தமிழாகவே  இருக்கும் என்பதை அறிவியல் உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது என்பதற்கு இதுவே  நல்ல சான்றாகும் .


செவ்வாய்க்கோளில் மூன்று பெரிய  பாறைகளைக் கண்டறிந்தது நாசா . அவற்றில் ஒரு பாறைக்கு  " பொங்கல் " என்று பெயர் சூட்டியது நாசா.  தமிழர்கள்  கொண்டாடும் முதன்மை விழாவும் , உலகில் பழமை வாய்ந்த  இயற்கையைப் போற்றும்  விழாவான  " பொங்கல்  விழாவுக்கு " உரிய மதிப்பளிக்கும் வகையிலேதான், செவ்வாய்க் கோளில் கண்டறிந்த பாறை ஒன்றிற்குப்  "பொங்கல் " என்ற பெயரைச் சூட்டியதாகச் சொன்னது நாசா .


அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான " நாசா "  செவ்வாய்க்கோள் பற்றி ஆய்வு செய்ய பல விண்கலன்களை அனுப்பியுள்ளது. அதில் ஒரு விண்கலம் செவ்வாய்க் கோளில் உள்ள மலைகளைக் கண்டறிந்தது. அம்மலைகளில் ஒன்றிற்கு " நீலகிரி " என்ற பெயரைச் சூட்டியது "நாசா". உலகில்  உள்ள பழமையான மலைகளுள் ஒன்றுதான்  "நீலகிரி" .  

 பழமை வாய்ந்த  மலையான  நீலகிரியை பெருமைப்படுத்தவே செவ்வாய்க் கோளில் கண்டறிந்த மலைகளுல் ஒன்றிற்கு நீலகிரியின் பெயரைச் சூட்டியதாக அறிவித்தது  நாசா. 


மண்ணுலகில் வரலாறு படைத்த நம் தமிழ்மொழி,  இப்போது விண்ணுலகிலும் சாதனை படைக்கத் தொடங்கிவிட்டது .


இவண் 

ஆ.தி.பகலன்,  

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583)

கருத்துரையிடுக

0 கருத்துகள்