Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " எங்கமுத்து சாமிமன்னா "

 



அறுசுவை இல்லாமல் வாழ முடியும். ஆனால், நகைச்சுவை இல்லாமல் வாழ முடியாது. அறுசுவை என்பது வாய்க்கு விருந்தாகும். நகைச்சுவை என்பது வாழ்க்கையில் வரும் பல்வேறு நோய்க்கு  மருந்தாகும். தமிழ் இலக்கியத்தில் எல்லாச் சுவையும் உண்டு . நகைச்சுவையும் உண்டு. நல்ல நகைச்சுவை உள்ள ஒரு தமிழ்ப் பாடலை இங்குக் காண்போம்.


" எங்கமுத்து சாமிமன்னா இங்கே ஒருவன்மிரு 

தங்கமதை ஓயாமல் தட்டினான் - அங்கங்கே 

கூடிநின்ற பெண்கள்எருக் கொள்வதற்குக் கூடைஎடுத்து 

ஓடிவந்தார் நீபார்த்தா யோ.


பெண்கள் பலர்  ஒன்று கூடி ஓடி வந்தார்கள். என்னவென்று கேட்டேன். "யாரோ சாணி தட்டுகிற ஓசை கேட்டது.  

வரட்டி வாங்கி வரலாம் என்று கூடையுடன்  நாங்கள் அனைவரும் ஓடி வந்தோம் " என்றார்கள். சரி என்று சொல்லி விட்டு நானும் அவர்களோடு சேர்ந்து  ஓசை வரும் இடம் நோக்கிச் சென்றேன். அங்கே  போய் பார்த்தால் ஒருவன் மத்தளம் வாசித்துக் கொண்டிருக்கிறான். 


வடமொழியில் "மிருதங்கம்" என்பார்கள். தமிழில் "மத்தளம் " என்றும், " தண்ணுமை " என்றும் அழைப்பார்கள். மத்தளம் வாசிக்கத் தெரியாத ஒருவன் மத்தளம் வாசிக்கிறான். அது சாணி தட்டுவது போல இருப்பதாக புலவர் ஒருவர்  கிண்டலடித்துப்  பாடிய பாடல்தான் இது. 


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) ..

கருத்துரையிடுக

0 கருத்துகள்