Ad Code

Ticker

6/recent/ticker-posts

அரசுப்பணி தேர்வுகளுக்கு பள்ளிப்பருவத்திலேயே தயார்படுத்தலாம்

 


ரசுப் பணியில் சேர்வது என்பது பலரது இலட்சிய கனவாகும். அதற்கான தகுதி தேர்வுகளுக்கு சிறுவயதிலிருந்தே தயார் படுத்தினால் எளிதாக வெற்றி பெற முடியும். அது குறித்த ஆலோசனைகள் இங்கே....


 குழந்தை பருவத்தில் நமது மூளையின் செயல்பாடு வேகமாகவும் அதிக ஆற்றலோடும் இருக்கும்.எனவே இந்த காலகட்டத்தில் வாழ்க்கைக்கு தேவையானவற்றை கற்றுக் கொடுத்தால் அது வருங்காலத்தில் அவர்கள் வெற்றி பெற உதவும். அரசுப் பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கும் இது பொருந்தும்.

 ங்களுடைய குழந்தைகளுக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்தால் அவர்களை அதில் ஈடுபடுவதற்கு ஊக்கம ளிங்கள். அவர்களுடைய திறமைகளை வெளிக்கொண்டுவரும் போட்டித் தலங்களுக்கு அனுப்புங்கள். பள்ளி கல்லூரிகளில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள சொல்லுங்கள். காவல் துறை போன்ற சில அரசு பணிகளுக்கு எழுத்து தேர்வில் மட்டுமில்லாமல் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவதும் அவசியமாகும். அந்த வகையில் சிறு வயதிலேயே விளையாட்டுகளில் ஈடுபட்டால் உங்கள் குழந்தைக்கு அரசுப் பணி தேர்வுகளை எதிர்கொள்வது எளிதாக இருக்கும்.


 ள்ளி பருவத்திலேயே நேரத்தை பயனுள்ளதாக மாற்றும் வகையில் சுருக்கெழுத்து, தட்டச்சு, கணினி வகுப்புகள் போன்ற விடுமுறை கால வகுப்புகள் அல்லது வார இறுதி வகுப்புகளில் உங்கள் குழந்தைகளை சேர்த்துவிடுங்கள். தொழில்நுட்ப அறிவு உள்ளவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது அதோடு தொழில்நுட்பக் கல்வியை கற்றுக் கொள்வதன் மூலம் தேர்வு எழுதுபவர்களின் தன்னம்பிக்கையும் தேர்வு மற்றும் நேர்காணலை எதிர்கொள்ளும் திறனும் அதிகரிக்கும்.


 த்திய மாநில அரசுகளின் கீழ் காவல்துறை, நீதித்துறை, பொதுப்பணித்துறை, கல்வித்துறை, ரயில்வேத்துறை என பல்வேறு துறைகளை இயங்கி வருகின்றன. ஒவ்வொரு துறைக்கும் ஏற்ப பணியிடங்களும் கல்வித்தகுதியும் நிர்ணயிக்கப்படுகின்றன. இதற்கான அடிப்படை தகுதிகள் இருந்தால் மட்டுமே தகுதி தேர்வு எழுத முடியும். அத்தகைய தகுதி வாய்ந்த அடிப்படை கல்வியை உங்கள் குழந்தைகளுக்கு வழங்குங்கள். உதாரணமாக இளங்கலை பட்டம் பெற்ற ஒருவர் தமிழக அரசின் டி.என்.பி.சி தேர்வு முதல் மத்திய அரசின் யு.பி.எஸ்.சி தேர்வு வரை எழுத முடியும்.


 தாய் மொழியோடு பிறமொழிகளும் கற்றுக் கொள்ள உங்கள் குழந்தைகளை ஊக்கிவியுங்கள். குறிப்பாக ஆங்கிலத்தில் சரளமாக பேசும்,எழுதவும் கற்றுக்கொள்ளும்போது உலகளாவிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். பல மொழிகள் தெரிந்திருப்பவர்கள் சிறந்த சமூகத்திறனை கொண்டிருப்பதோடு தன்னம்பிக்கையாகவும்  செயல்பட முடியும்.


 ள்ளிகளில் நடத்தபடும் கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி,பேச்சுப்போட்டி,விளையாட்டுபோட்டி,போன்றவற்றில் பங்கேற்க உங்கள் குழந்தைகளை ஊக்குவியுங்கள். போட்டிகளில் வெற்றி தோல்விகளை சந்திக்க நேர்வதால் மன உறுதியும் வெற்றி பெறுவதற்காக கடினமாக உழைக்கும் எண்ணமும் சிறு வயதிலேயே உங்களுக்கு உருவாகும். இது போட்டி தேர்வுகளில் பயமின்றி பங்கேற்க உதவும்.


 குழந்தைகளின் திறனை மேம்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்லுங்கள். அறிவியல் மையம்,புத்தக கண்காட்சி போன்றவற்றையும் இதில் அடங்கும். அதோடு, பள்ளிகளில் இயங்கும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், தேசிய பசுமைப்படை, தேசிய மாணவர் படை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றிலாவது இணைந்து செயலாற்று சொல்லுங்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்