Ad Code

Ticker

6/recent/ticker-posts

முன்னோர் பின்பற்றிய இயற்கையான அழகு குறிப்புகள்

 யற்கையான முறையில் தயாரிக்கப்படும் அழகு பராமரிப்பு பொருட்கள் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்துள்ளது. நவீனத்துவத்தை விரும்பும் இளம் பெண்களும் அழகு மற்றும் ஆரோக்கியத்தை பொறுத்தவரை இயற்கையான பொருட்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த வகையில் பல தலைமுறைகளாக நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கையான அழகு பராமரிப்பு பொருட்களும் அவற்றை உபயோகிக்கும் முறைகளும் இதோ.....

வேப்பிலை

முகப்பரு பிரச்சனையால் சிரமப்படுபவர்கள் ஒரு கைப்பிடி வேப்பிலையை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும்.பின்பு அதை ஆறவைத்து மிதமான சூட்டுக்கு கொண்டுவரவும். அந்த தண்ணீரில் பஞ்சை தோய்த்து முகம் முழுவதும் மென்மையாக அழுத்தி பூசவும்.இவ்வாறு தொடர்ச்சியாக செய்து வந்தால் நாளடைவில் முகப்பருக்கள் நீங்கும். வறண்ட சருமம் கொண்டவர்கள் வேப்பிலை பொடியுடன் திராட்சை விதை எண்ணை கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவவும். இதன் மூலம் சருமத்தின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். பொடுகு மற்றும் பேன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், வேப்ப எண்ணையை தலை முழுவதும் பூசி மென்மையாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும்.


தேன்

தீக்காயங்களுக்கு தேன் சிறந்த நிவாரணமாகும். தீப்புண்களில் தேனை தொடர்ச்சியாக பூசிவந்தால் காயம் விரைவாக ஆறுவதோடு காயத்தால் ஏற்படும் வடுவும் மறையும். சிறிதளவு தேனோடு, காய்ச்சிய பாலோடு, சந்தனம், கடலை மாவு, ரோஜா எண்ணெய், கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும் இந்த "பேஸ் பேக்" முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி பொளிவாக்கும்.

 நெல்லிக்காய்

 முடி உதிர்வு பிரச்சனையால் சிரமப்படுவர்களுக்கு நெல்லிக்காய் சிறந்த தீர்வாகும்.2 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடி அல்லது நெல்லிக்காய் சாறுடன், சம அளவு எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். இதை தலையில் பூசி சிறிது நேரம் கழித்து குளிக்கவும்.

காய்ந்த நெல்லிக்காய், புங்கங்கொட்டை, சீய்க்காய், இவை மூன்றையும் தேவையான அளவு எடுத்து ஒரு இரும்பு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும் பின்பு அடுப்பை அணைத்து அந்த கலவையை இரவு முழுவதும் அப்படியே வைக்கவும் அடுத்த நாள் காலையில் அந்த சாற்றை வடிகட்டி தலைக்கு தேய்த்து குளிக்கவும்.

 மஞ்சள்

ஸ்டிரெச் மார்க்குகள் இருப்பவர்கள் சிறிதளவு மஞ்சள் தூளுடன் கடலைமாவு மற்றும் தயிர் கலந்து அந்தப் பகுதியில் பூசவும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நாளடைவில் ஸ்டிரெச் மார்க்குகள் சருமத்தின் நிறத்திலேயே மாற ஆரம்பிக்கும். சிறிதளவு மஞ்சள் தூளுடன் அரிசி மாவு, தக்காளி சாறு காய்ச்சாத பால் கலந்து முகத்தில் பூசவும். இது நன்றாக உணர்ந்தவுடன் முகத்தை சுத்தப்படுத்தும் எவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும். பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு சிரமப்படுபவர்கள் சிறிதளவு மஞ்சள் தூளுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் கலந்து பாதங்களில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான  நீரில் பாதங்களை கழுவவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்