பணத்தை சேமிப்பதற்கு பலரும் பலவிதமான முறைகளை கையாளுகிறார்கள். அத்தகைய சேமிப்பு முறைகள் திருப்திகரமான வகையில் பலன் அளிக்கிறதா என்பதையும் அவ்வப்போது ஆராய வேண்டும் குறுகியது நீண்ட காலம் என நீங்கள் பணத்தை சேமிக்க தேர்ந்தெடுக்கும் திட்டங்கள் எதுவாக இருக்கலாம். அதில் சில யுக்திகளையும் சேமிப்புக்கான அணுகு முறையில் சில மாற்றங்களையும் செய்ய வேண்டியது அவசியமாகும்.இதன் மூலம் சிறந்த முறையில் பணத்தை சேமித்து பயன்பெற முடியும்.
வைப்புநிதி திட்டத்தை பயன்படுத்துவர்கள் நீண்ட கால சேமிப்புக்கு பதிலாக குறுகிய கால சேமிப்பு வரம்பை தேர்ந்தெடுப்பது சிறந்தது. இது வைப்பு நிதி மற்றும் அதற்கான வட்டித் தொகையை விரைவில் பெறுவதற்கு உதவியாக இருக்கும். இந்த திட்டங்களில் முதல் மூன்று வருடங்களுக்கு மட்டுமே வட்டி தொகைக்கான சதவீதம் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறுகிய கால சேமிப்பு இலக்கை தேர்ந்தெடுப்பது அவசியமானது. ஒரு வருட காலத்துக்குள் குறிப்பிட்ட அளவு தொகையை சேமிக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயுங்கள். அதற்கான சேமிப்புத் திட்டங்களை தேர்ந்தெடுங்கள் உதாரணத்திற்கு தொடர் வைப்புநிதி திட்டத்தை வருடங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்காமல் மாதங்களின் அடிப்படையில் தேர்வு செய்யலாம் இது குறுகிய காலத்தில் உங்களுக்கு தேவையான தொகையை சேமிக்க உதவியாக இருக்கும்.
உங்களுடைய மாதாந்திர பட்ஜெட்டில் சேமிப்பையும் ஒரு பகுதியாக சேர்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதமும் ஒரு சேமிப்பு விகிதத்தை நிர்ணயித்து அதை தவறாமல் கடைபிடியுங்கள். குறுகியகால இடைக்கால மற்றும் நீண்ட கால நிதி இலக்கங்களை நிர்ணயம் செய்யுங்கள் இதன் மூலம் சேமிப்பு பற்றி தெளிவு கிடைக்கும் உங்களுடைய சேமிப்பு இலக்கை எளிதாக அடைய முடியும்.
சேமிப்புக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை எத்தகைய சூழ்நிலையிலும் எடுத்து செலவழிக்காதீர்கள் சரியான முறையில் பட்ஜெட் போட்டு அதை தொடர்ந்து பின்பற்றுங்கள். சேமிப்பு என்று தனியாக ஒரு வங்கி கணக்கை வைத்திருங்கள் சேமிப்புக்காக நீங்கள் ஒதுக்கும் எல்லா தொகையும் இந்த கணக்கில் செலுத்துங்கள் இதிலிருந்து உங்களுடைய வெவ்வேறு சேமித்திட்டங்களில் பணத்தை முதலீடு செய்யுங்கள் உங்களுடைய மாதாந்திர மற்றும் வருடாந்திர சேமித்திட்டங்களுக்கு வங்கி கணக்கு இருந்து தானாகவே பணம் செலுத்தப்படும் முறையே தேர்ந்தெடுங்கள் இதன் மூலம் சேமிப்பு தவணைகளை செலுத்துவதில் தாமதம் ஏற்படுவதை தடுக்க முடியும்.
நிலையான மாதா வருமானம் உள்ளவர்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாம் இது நீண்ட காலத்தின் அடிப்படையில் நல்ல சேமிப்பு முறையாகும். பல பெண்கள் பணத்தை சேமிப்பதற்கு சீட்டு கட்டும் முறையை தேர்ந்தெடுக்கிறார்கள் அவ்வாறு தேர்ந்தெடுக்கும் நிறுவனம் நம்பகமானதா என்பதை உறுதி செய்யக் கொண்ட பிறகு அதைப் பற்றி முடிவை எடுக்க வேண்டும்
0 கருத்துகள்