*இந்திய வானியற்பியலார் மேகநாத சாஃகா பிறந்த தினம். இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சித் துறைக்கு அடித்தளமிட்டவர்.
சாஹா அயனியாக்க சமன்பாடு என்ற புகழ்பெற்ற சமன்பாட்டைத் தருவித்தவர். இந்தச் சமன்பாடு விண்மீன்களின் புறநிலை மற்றும் வேதி இயல்புகளைப் பற்றி அறிய உதவுகிறது.
1927 இல் அவர் தருவித்த அயனியாக்க சமன்பாட்டை பெருமைப்படுத்தும் விதமாக இராயல் சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவரது பெயர் நோபல் பரிசுக்குப் (1935 – 36) பரிந்துரைக்கப்பட்டது.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக 1951-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கல்கத்தாவில் இவர் 1948-ல் தொடங்கிய ஆராய்ச்சி நிறுவனம் ‘சாஹா அணுக்கரு இயற்பியல் நிறுவனம்’ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. மேகநாத சாஃகா அக்டோபர் 06, 1893 ஆம் ஆண்டு இன்றைய வங்கதேசத்திலுள்ள சியோரடலி எனும் ஊரில் பிறந்தார்.
உலகப் புகழ்பெற்ற வானியல் விஞ்ஞானியான மேகநாத் சாஹா 63-வது வயதில் (1956) மறைந்தார்.
* இன்ஸ்ட்டாகிராம் தமிழில் படவரி அக்டோபர் 06 ம் தேதி 2010 ம் ஆண்டில் வெளியான ஓர் இலவச, ஒளிப்படங்கள் பகிர்ந்து கொள்ள உதவும் மென்பொருளாகும். பயனர்கள் ஒளிப்படம் எடுக்கவும் எண்ணிம ஒளிவடிகட்டியை செயல்படுத்தவும் இன்ஸ்ட்டாகிராமின் வலைத்தளம் உட்பட பல்வேறு சமூக வலைத்தளங்களில் பகிரவும் உதவுகிறது. நகர்பேசி ஒளிப்படக் கருவிகளில் வழக்கமாக இருக்கும் 4:3 உருவ விகிதம் போலன்றி இதில் சதுரமாக உள்ளது இதனை வேறுபடுத்தும் சிறப்பியல்பாகும் .
* வேறொரு சூரியனை சுற்றி வரும் 51 பெகாசி பி (51 Pegasi b) என்பது ஒரு புறக்கோள் ஆகும். இது தோரயமாக 50 ஒளியாண்டுகள் தூரத்தில் பெகாசசு என்ற விண்மீன் குழாமத்தில் உள்ளது. இந்தக் கோள் 51 பெகாசி என்ற விண்மீனைச் சுற்றி வருகிறது. சூரியனைப் போன்ற வீண்மீனைச் சுற்றி வரும் கோள்களில் 51 பெகாசி பி தான் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இது வானியல் ஆராய்ச்சியின் மைல்கல்லாகக் கருதப்பட்டது. 51 பெகாசி பி யின் வெப்பநிலை மிகவும் அதிகம். எனவே இது சூடான ஜுப்பிட்டர் வகைகளில் சேர்க்கப்படுகிறது.
* ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் அமெரிக்கத் தொழிலதிபரும், பொறியியலாளரும் ஆவார். இவர் தொடருந்துக் காற்றுத் தடுப்புக் கருவியை கண்டுபிடித்தவர். அத்துடன் மாறுதிசை மின்னோட்ட மின்சார நாற்காலி உட்பட மின்துறையில் பல கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெற்றார். தனது முதலாவது காப்புரிமத்தை தனது 19வது அகவையில் பெற்றார். வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் நிறுவனம் நிறுவனர். 1911 ல் ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் அவர்கட்கு ஐஇஇஇ இன் எடிசன் மெடல்' மாறுதிசை மின்னோட்டதில் அவருடைய மெச்சத்தக்க சாதனைகாக வழங்கபட்டது'.இவர் பிறந்த தினம் அக்டோபர் 06 ஆண்டு 1846.
*பரமசிவ சுப்பராயன் சென்னை மாகாணத்தின் மேனாள் பிரதமர் (முதல்வர்) ஆவார். திருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் கிராமத்தின் ஜமீன்தாராகிய இவர், தனது வாழ்நாளில் சென்னை மாகாணத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சர், கல்வி மற்றும் சட்ட அமைச்சர், உள்துறை அமைச்சர், சட்டமன்ற மேலவை உறுப்பினர், இந்தோனேசியாவிற்கான இந்தியத் தூதுவர், இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், மாநிலங்கவை உறுப்பினர், மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர், மகாராட்டிர மாநில ஆளுநர் போன்ற பல பதவிகளை வகித்துள்ளார். இவர் இறந்த தினம் அக்டோபர் 06 ஆண்டு 1962.
* ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப் ஒரு ஜெர்மானிய உயிரி வேதியலறிஞர் ஆவார். தசைத் திசுக்கள் ஆக்சிஜனை எவ்வாறு உறிஞ்சி அதை லேக்டிக் அமிலமாக மாற்றுகிறது என்ற இவரின் கண்டுபிடிப்பிற்காக 1922 இல் மருந்தியல் நோபல் பரிசு பெற்றார்.[4] தசைகள் சுருங்கும்போது கிளைகோஜன்கள் எவ்வாறு லாக்டிக் அமிலமாக மாறுகிறது என்பதைக் கண்டறிந்தார். இவர் இறந்த தினம் அக்டோபர் 06 ஆண்டு 1951.
0 கருத்துகள்