பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 சிறப்பு துணை தேர்வு ஜூன் 27ல் துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு, வரும் 23ல் துவங்குகிறது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 சிறப்பு துணை தேர்வு ஜூன் 27ல் துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு, வரும் 23ல் துவங்குகிறது.
இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, ஜூன் 27ல் துணை தேர்வு துவங்க உள்ளது. பிளஸ் 1க்கான துணை தேர்வு அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்புக்கு, ஜூன் 27; மொழி பாடம்; ஆங்கிலம் - ஜூன் 28; கணிதம் - ஜூன் 30; விருப்ப மொழி பாடம் - ஜூலை 1; அறிவியல் - ஜூலை 3 மற்றும் சமூக அறிவியல் - ஜூலை 4ல் நடக்கிறது.இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், வரும், 23ம் தேதி நண்பகல் 12:00 மணி முதல், வரும், 27ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த கால அவகாசத்தில் விண்ணப்பிக்க இயலாதவர்கள், தத்கல் சிறப்பு அனுமதி திட்டத்தில், இந்த மாதம், 30 மற்றும் 31ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்புக்கு சிறப்பு அனுமதி கட்டணம், 500 ரூபாயும்; பிளஸ் 1க்கு சிறப்பு அனுமதி கட்டணம், 1,000 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
1 கருத்துகள்
11th supplementary 2023 Time Table Government Order pdf updated PANUKA sir...🙏
பதிலளிநீக்கு