Ad Code

Ticker

6/recent/ticker-posts

கதைகள் வழி திருக்குறள் |உண்மை பேசும் திருடன்

 


மருதமலையை நேர்மையான அரச ஒருவர் ஆண்டு வந்தார்.மாறுவேடத்தில் அவர் நகரத்தை சுற்றிப் பார்க்க புறப்பட்டார். இரவு நேரம், இளைஞன் ஒருவன் அரண்மனையை நோக்கி வருவதை பார்த்தார். "தம்பி !நீ யார்? இந்த நள்ளிரவு நேரத்தில் அரண்மனைக்கு எதற்காக செல்கிறாய்?" என்று கேட்டார்.  திருட செல்கிறேன் என்றான் அவன் அதிர்ச்சி அடைந்த அவர் திருடுபவன் எவனாவது உண்மையை சொல்வானா? அப்படி சொன்னால் சிக்கிக் கொள்ள மாட்டானா? என்று கேட்டார்.

 திருடனான என்னிடம் எல்லா தீய பழக்கங்களும் இருந்தன. என் தாய் என்னை திருத்த முயற்சி செய்தார் அவரால் முடியவில்லை. சாகும் நிலையில் இருந்த அவர் என்னை அழைத்தார் எப்போதும் உண்மையே பேச வேண்டும் என்று என்னிடம் வாக்குறுதி வாங்கினார். அவரின் நினைவாக அந்த வாக்குறுதியை காப்பாற்றி வருகிறேன் என்றான் அவன்.

" தம்பி! நீ அரண்மனையில் திருட நான் உதவி செய்கிறேன். கிடைப்பதில் பாதி பங்கு தருவேன் என்றார் அவர் அவனும் ஒப்புக் கொண்டான். அரண்மனை கருவூலத்திற்குள் எப்படி நுழைவது என்று சொல்லித் தந்தார் கருவூலத்திற்குள் சென்று அவன் இரண்டு வைரங்களுடன் வந்தார் கருவூலத்தில் மூன்று வைரங்கள் இருந்தன மூன்றையும் இழந்தால் அரசர் வருந்துவார் அதனால் ஒன்றை அங்கேயே வைத்துவிட்டு இரண்டை எடுத்து வந்தேன். உன் பங்கிற்கு ஒன்று என்று வைரத்தை அரசரிடம் தந்தான்.


 மறுநாள் அரியணையில் வீற்றிருந்தார் அரசர் பரப்புடன் அங்கே வந்த அமைச்சர் அரசு கருவூலத்தில் இருந்த வைரங்கள் மூன்று திருடப் போய்விட்டன என்றார். மூன்று வைரங்களமாக திருடு போய்விட்டன என்று கேட்டார் அவர் ஆமாம் அரசே என்றார் அமைச்சர் திருடன் பொய் சொல்லி இருக்க மாட்டான் எஞ்சிய ஒரு வைரத்தை இவர்தான் திருடியிருக்க வேண்டும் என்று நினைத்தார் அவர். வீரர்களை அழைத்தவர் அமைச்சரை சோதனை இடுங்கள் என்று கட்டளையிட்டார் வீரர்கள் அவரிடத்தில் ஒழித்து வைத்திருந்த வைரத்தை எடுத்தார்கள்.

 வீரர்களே! இன்ன இடத்தில் இன்ன பெயருடன் இளைஞன் இருப்பான் அவனை அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டார். அவர்களும் அவனை அழைத்து வந்தார்கள். அரியணையில் அமர்ந்திருந்தவரை பார்த்தான்  அவன் நேற்று இரவு தன்னை சந்தித்தவர் அவர் என்பதை அறிந்தான் என்ன தண்டனை கிடைக்கப் போகிறதோ என்று நடுங்கினான். அமைச்சரே!இவன் திருடனாக இருந்தும் உண்மை பேசினான். நேர்மையாக நடந்து கொண்டான் நீர் அமைச்சராக இருந்தும் திருடினீர் பொய் சொன்னீர் அதற்காக உம்மை சிறையில் அடைக்கிறேன். இளைஞனே! திருட மாட்டேன் என்று வாக்குறுதி கொடு உன்னை அமைச்சராக நியமிக்கிறேன் என்றார் அவர்.அரசே வறுமையில் வாடியதால் திருடினேன் இனி திருட மாட்டேன் என்றான் அவன் அவனை அந்நாட்டின் அமைச்சராக நியமித்தார் அவர்.

குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்


ஒருவனுடைய குணம் குற்றங்களை ஆராய்ந்து குணம் நிறைந்தவனை தேர்ந்து எடுக்க வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்