பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான CUTE நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்ப பதிவு பிப். முதல் வாரத்தில் தொடங்குகிறது.CUET இளங்கலை தேர்வுகள் அடுத்த ஆண்டு மே 21 - 31-ம் தேதிகள் வரை நடைபெறும் என்றும் பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு எனப்படும் CUET தேர்வை மத்திய அரசு நடத்திவருகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான இளங்கலை படிப்புக்கான CUET நுழைவுத் தேர்வு தேதியை பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது.
அதன்படி, CUTE இளங்கலை தேர்வுகள் 2023 மே மாதம் 21 முதல் 31-ம் தேதி வரை நடைபெறும். இளநிலை படிப்புக்கான விண்ணப்ப பதிவு வருகிற பிப்ரவரி முதல் வாரம் தொடங்கும் என்றும் நுழைவுத் தேர்வு முடிவு அடுத்த ஆண்டு ஜூன் 3-ம் வாரத்தில் வெளியாகும் என தெரிவித்துள்ளது.CUTE முதுநிலை தேர்வுகள் ஜூன் மாதத்தில் நடைபெறும் என பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது.
மேலும் தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்துக்குள் வெளியிடப்படும் எனவும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்