Ad Code

Ticker

6/recent/ticker-posts

வேலைவாய்ப்பு செய்தி|தமிழ்நாடு|மத்திய பல்கலைக்கழகம்|பேராசிரியர் மற்றும் அலுவலக பணியாளர்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மற்றும் இதர அலுவலக காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பல்கலைக்கழக பணி விவரங்களை இதில் காண்போம்.

பணியின் விவரங்கள்:

பல்வேறு பாடப்பிரிவில் 22 பேராசிரியர் மற்றும் பேராசிரியர் அல்லாத இதர அலுவலக பிரிவில் 21 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பேராசிரியர் பணி விவரங்கள்:


பாடப்பிரிவு காலிப்பணியிடங்கள்
Applied Psychology 3
Economics 2
Education 1
Epidemiology & Public
Health 1
Geography 1
Geology 1
History 1
Horticulture 1
Law 1
Materials Science 1
Mathematics 1
Music 2
Social Work 2
Statistics and Applied 1
Mathematics 1
Tourism & Hospitality
Management 2
Physical Education and
Sports 1
மொத்தம் 22

 தேர்வு செய்யப்படும் முறை:


இப்பணிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கல்வித்தகுதி:

அனைத்து பாடப்பிரிவு பேராசிரியர் பணிகளுக்கும் பிரிவிற்கு ஏற்ப Ph.D.,தேர்ச்சி அவசியமாய் இருக்கிறது. இதர விவரங்களுக்கு அறிவிப்பைப் பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

பேராசிரியர் பணிகளுக்கு ஆன்லைனில் சமர்த் போர்டல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி வகுப்பினர் ரூ.500/- விண்ணப்பக்கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதர வகுப்பினர் ரூ.750/- கட்டணமாகச் செலுத்த வேண்டும்

முகவரி:https://cutnrec.samarth.edu.in/


விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 07.12.2022.

பேராசிரியர் அல்லாத பணிகளுக்கான விவரங்கள்:


பணியின் பெயர் காலிப்பணியிடங்கள்
Hindi Officer 1
Section Officer 1
Private Secretary 3
Senior Technical Assistant
(Laboratory) 1
Junior Engineer
(Electrical) 1
Assistant 1
Personal Assistant 1
Security Inspector 1
Statistical Assistant 1
Lower Division Clerk 5
Multi-Tasking Staff 2
Library Attendant 1
Laboratory Attendant 2
மொத்தம் 21

வயது வரம்பு:

ஹிந்தி அதிகாரி பதவிக்கு அதிகபட்ச வயது 40 ஆகும். இதரப் பணிகளுக்கு வயது அதிகபட்ச வயது 35 ஆகும்.


கல்வித்தகுதி:

இப்பணிகளுக்குத் தேவையான பிரிவுகளில் முதுகலை மற்றும் இளங்கலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Multi-Tasking Staff பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. அதே போல் Library Attendant பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Library Science சான்றிதழ் படிப்பு தேவை. Laboratory Attendant பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்குத் தகுதியானவர்கள் 2 நிலை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டுத் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு சமர்த் போர்டல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி வகுப்பினர் ரூ.500/- விண்ணப்பக்கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதர வகுப்பினர் ரூ.750/- கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முகவரி: https://cutnrec.samarth.edu.in/

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 07.12.2022

கருத்துரையிடுக

0 கருத்துகள்