Ad Code

Ticker

6/recent/ticker-posts

கருவாட்டுக் குழம்பு

  ருவாட்டுக் குழம்பு இந்த வார்த்தை கேட்கும் போதே நாவில் எச்சை ஊறுகின்றது. கருவாட்டு குழம்பு செய்து அதை குழ குழவென  சாதத்தை வடித்து அதில் கருவாட்டுக் குழம்பு ஊற்றி சாப்பிட்டால் ருசியோ ருசி. அந்த கருவாட்டு குழம்பில் அவிச்ச முட்டை போட்டு ஊறவைத்து  சாப்பிட்டால் அதைவிட ருசியோ ருசி. சாதத்தோடு கருவாட்டு குழம்பு  பிசைந்து கருவாட்டை முள் தனியாய் எடுத்துவிட்டு அதன் சதைப்பற்றை அந்த சோற்று நடுவில் வைத்து கருவாட்டு குழம்பில் போட்ட முட்டையும் எடுத்து அதன் நடுவில் வைத்து சாப்பிட்டால் ருசியோ ருசி.


 இரவில் கருவாட்டுக் குழம்பு வைத்து அதை காலையில் எழுந்து பழைய  சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் இதன் சுவைக்கு இணையே இல்லை. கேழ்வரகு கலியுடன் கருவாட்டு குழம்பு இணைத்து சாப்பிடும் போது அதன்  சுவையை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. சுடச்சுட தோசையில் கருவாட்டு குழம்பை ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.  அட எங்கேபோரீங்க கருவாட்டு குழம்பு வைக்கவா? இதையும் கொஞ்சம் படிச்சிட்டு போங்க கருவாட்டு குழம்பு வைப்பது எப்படினு?.



தேவையான பொருட்கள் :


எண்ணெய்                    -      தேவையான அளவு

கடுகு                                -      1/2ஸ்பூன்

உளுத்தப்பருப்பு          -      1/2ஸ்பூன்

கருவேப்பிலை             -      சிறிது

கருவாடு                         -      50கிராம்

வெங்காயம்                  -     3

தக்காளி                          -     3

முருங்கக்காய்             -      1

கத்திரிக்காய்               -      3

வாழைக்காய்                -     1

மொச்சை                        -     50கிராம்

குழம்பு மிளகாய் தூள்-    3ஸ்பூன்

மஞ்சள்த்தூள்                -    1/2ஸ்பூன்

கொத்தமல்லி                -    சிறிது


வெங்காயம் -2 ,தக்காளி -3 இவற்றை அரைத்து கொள்ள வேண்டும் .

செய்முறை:

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு ,உளுத்தப்பருப்பு, கருவேப்பிலை,போட்டு தளித்த பின்பு வெங்காயம் போட்டு வதக்கி பிறகு அரைத்து வைத்த பொருட்களை போட வேண்டும் .பின் முருங்கக்காய் கத்திரிக்காய்,வாழைக்காய்,மொச்சை போட்டு பின்பு குழம்பு மிளகாய் தூள்,மஞ்சள்த்தூள் ,போட்டு வதக்க வேண்டும் .தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் . குழம்பு நன்கு கொதி வந்த பிறகு கருவாடு போட வேண்டும் . பின் நன்கு குழம்பு சுண்டி வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கவும் .

சுவையான கருவாடு குழம்பு ரெடி

"அட எங்கேபோரீங்க இருங்க கேரளா மாநிலத்தில் எப்படி கருவாட்டு குழம்பு வைக்கிறார்கள் எப்பதை  கொஞ்சம் படிச்சிட்டு போங்க"


கருவாட்டு குழம்பு (கேரளா ஸ்டைல் ) 


புளிக்கு பதில் மாங்காயினை புளிப்பிற்கேற்ப போட்டு செய்ய வேண்டும்.


தேவையான பொருட்கள்:


நெத்திலி கருவாடு -2 கைப்பிடி

வாழைக்காய்- 1

மாங்காய்- 1

நீர் -3 கப்

வரமிளகாய்த்தூள்- 2 டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய்- 2

மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய இஞ்சி- 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை- 1 கொத்து

சின்ன வெங்காயம்- 10

தேங்காய்த்துறுவல் -1/2 கப்

உப்பு- தேவைக்கு


தாளிக்க‌

கடுகு- 1/2 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்- 5

கறிவேப்பிலை- 1 கொத்து

தேங்காய் எண்ணெய்- 2 டீஸ்பூன்


செய்முறை


*வாழைக்காயினை தோல் சீவவும்.மாங்காய் மற்றும் வாழைக்காயினை அவியலுக்கு நறுக்குவதுபோல் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.


*தேங்காயினை மைய அரைத்து வைக்கவும்.


*கருவாட்டினை சுத்தம் செய்து 1/2 மணிநேரம் வெந்நீரில் ஊறவைக்கவும்.


*மண்சட்டியில் நீர்+உப்பு+மஞ்சள்தூள்+வரமிளகாய்த்தூள்+இஞ்சி+கீறிய பச்சை மிளகாய்+1 டீஸ்பூன் எண்ணெய்+நறுக்கிய சின்ன வெங்காயம்+சுத்தம் செய்த கருவாடு+நறுக்கிய வாழைக்காய் சேர்த்து கொதிக்க வைக்கவும்.


நன்றாக கொதித்ததும் மாங்காய்+தேங்காய் விழுதினை சேர்த்து மேலும் நன்கு கொதிக்க வைக்கவும்


பச்சை வாசனை அடங்கியதும் மீதமிருக்கும் எண்ணெயில் தாளித்து சேர்க்கவும்.



"கருவாட்டு குழம்பு வாசணை மூக்கை துளைக்குத்து  கருவாட்டு குழம்பை அடுப்பிலிருந்து இறக்குவதற்குள் பிடி கருணை கருவாட்டு குழம்பு எப்படி செய்வது என்பதை கொஞ்சம் படிச்சிட்டு போங்க"


பிடி கருணை கருவாட்டு குழம்பு


தேவையான பொருட்கள்

பிடி கருனை -1/4 கிலோ

கருவாடு - 5 துண்டுகள்

நறுக்கிய வெங்காயம் -1

பூண்டுப்பல் -8

சாம்பார் பொடி -1 டேபிள்ஸ்பூன்

புளிபேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்

தக்காளி -1

உப்பு-தேவைக்கு


தாளிக்க

எண்ணெய் -1டேபிள்ஸ்பூன்

வடகம் -2 டீஸ்பூன்

கறிவேப்பிலை -1 கொத்து


செய்முறை

*பிடிகருணையை மண்ணில்லாமல் நன்கு கழுவி தேங்காய் ஒடு சேர்த்து 3 விசில் வரை வேக வைக்கவும்.


*தேங்காய் ஒடு சேர்த்து வேகவைப்பது கருணை கிழங்கு அரிப்பில்லாமல் இருக்கும்.


*புளிபேஸ்டினை 2 கப் நீர் ஊற்றி உப்பு,தக்காளி,சாம்பார் பொடி சேர்த்து கரைத்து வைக்கவும்.


*பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வேங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்

*புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்


*நன்கு கொதித்தபின் சுத்தம் செய்த கருவாடு,வேகவைத்த கிழங்கினை துண்டுகளாக அரிந்து சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.


"அட எங்கேபோரீங்க கருவாட்டு குழம்பு சாப்பிட போரீங்கலா இருங்க, கிராமத்து கருவாட்டு குழம்பு  எப்படி செய்வது என்று கொஞ்சம் படிச்சிட்டு போங்க"



கிராமத்து கருவாட்டு குழம்பு:


தேவையான பொருட்கள்


வெங்காயம்


தக்காளி


கத்திரிக்காய்


பூண்டு


கடலை பருப்பு


நிலக்கடலை(எ)மல்லட்டை


புளி


பட்டை


சோம்பு


கிரம்பு


செய்முறை:


கருவாடை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யவும்



 ஒரு வாணலில் நிலக்கடலை  மற்றும் கடலை பருப்பு இரண்டையும் தனி தனியாக வறுத்து எடுத்து கொள்ளவும். பின்பு மிக்ஸில்  பட்டை,கிராம்பு,பூண்டு,சொம்பு,வறத்த நிலக்கடலை&கடலை பருப்பு பொட்டு அறைக்கவும்.



 வேறு வாணலை அடுப்பில் வைக்கவும்  அதில் இரண்டு கரண்டி எண்ணெய் ஊற்றவும் . எண்ணெய் சுடானதும் அதில் கடுகு போடவும். கடுகு பொரிந்ததும் வெங்காயத்தை சோர்த்து நன்றாக வதக்க வேண்டும் வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்.கத்திரிக்காய் சேர்த்து கொதிக்க வைக்கவும். மிளகாய் தூள், மஞ்சள் தூள்,கொத்தமல்லி தூள் சேர்க்கவும்.


பின்பு அரைத்து வைத்த விழுது சோர்க்கவும் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும் பிறகு புளி சிறிது அளவு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். 


 15 நிமிடம் பிறகு, கருவாடு சேர்த்து 5நிமிடம் கொதிக்கவும் பின்பு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும் இதில் வடவம் சேர்த்து தாளித்தல் சுவையாக இருக்கும்.



"கருவாட்டு குழம்பை சாப்பிட்டுக்கொண்டே சின்ன வெங்காய கருவாட்டு குழம்பு எப்படி செய்வது என்று கொஞ்சம் படிச்சிட்டு போங்க"


சின்ன வெங்காய கருவாட்டு குழம்பு



தேவையான பொருட்கள்

 

100கிராம் சின்ன வெங்காயம்

100 கிராம் நெத்தலி கருவாடு...

புளி சிறிது

தனி மிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன்

1 உள்ளி

கருவேப்பிலை

கடுகு

சீரகம்

செய்முறை

1.கருவாட்டை சுடுநீரில் அலசி சுத்தம் செய்து வைக்கவும்


2.வெங்காயத்தை தோலுரித்து வைக்கவும்.வெட்ட தேவையில்லை.


3.அடுப்பில் சட்டியை வைத்து சிறிது எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கருவேப்பிலை தாளிக்கவும்.


4அதனுடன் சேர்த்து கருவாடு ,வெங்காயம்,உள்ளி என்பவற்றையும் தாளிக்கவும்


5.உப்பு ,தனிமிளகாய்த்தூள் என்பவற்றை சேர்த்து புளியையும் கரைத்து விட்டு 1 கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டால் போதும்

சுவையான வெங்காய கருவாட்டு குழம்பு தயார்

"அட கருவாட்டு குழம்பு சாப்பிட்டு முடித்துவிட்டீர்களா இந்த முட்டை கருவாடு மிளகு குழம்பு கொஞ்சம் சாப்பிட்டு பாருங்க"


முட்டை கருவாடு மிளகு குழம்பு செய்யும் முறை:


தேவையான பொருட்கள்


வஞ்சிரம் கருவாடு : 3 துண்டு


முட்டை : 3


மிளகு சீரகம் : 25 கிராம்


நாட்டு பூண்டு : 30 பல்


நல்லெண்ணை : 50 கிராம்


புளி : எலுமிச்சம்பழம் அளவு


உப்பு : தேவையான அளவு


செய்முறை:


மிளகு சீரகத்தை தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். பூண்டை உரித்து அதில் பாதியை ஒன்றிரண்டாக தட்டிக்கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணை ஊற்றி அதில் முழுதாக உள்ள பூண்டை வதக்கவும். பிறகு தட்டிய பூண்டையும் வதக்கி அதனுடன் அரைத்து வைத்துள்ள மிளகுசீரகத்தை போட்டு நன்றாக வதக்கி கருவாடையும் போட்டு பொரிந்தவுடன் புளியை கரைத்து ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். கொதித்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து முட்டையை உடைத்து ஊற்றி வாணலியை மூடி வைத்து முட்டையை வேகவிடவும். சிறிது நேரம் கழித்து முட்டையை திருப்பி போட்டு வேகவிட்டு அடுப்பை அணைக்கவும். சுவையான முட்டை கருவாடு மிளகு குழம்பு தயார்.


குறிப்பு : இந்த குழம்பிற்கு நல்லெண்ணை தான் ஊற்றவேண்டும். குழம்பில் அதிகம் தண்ணீர் ஊற்றக் கூடாது.

"கருவாட்டு குழம்பு சாப்பிட்டு முடித்து விட்டீர்களா அசத்தலான செட்டிநாடு நெத்திலி கருவாட்டு குழம்பு எடுத்து வந்த"


அசத்தலான செட்டிநாடு நெத்திலி கருவாட்டு குழம்பு 

தேவையான பொருட்கள்:


நெத்திலி கருவாடு 


கடுகு - 1 டீஸ்பூன்


சீரகம் - 1 டீஸ்பூன்


உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்


வரமிளகாய் - 2


கறிவேப்பிலை – சிறிது


சின்ன வெங்காயம் - 15-20 (தோல் நீக்கியது)


தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)


மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்


மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்


மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்


புளிச்சாறு - 3 டேபிள் ஸ்பூன்


மாங்காய் - 1 (நீளமாக நறுக்கியது)


உப்பு - தேவையான அளவு


சர்க்கரை - 1 டீஸ்பூன்


எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்


தண்ணீர் - தேவையான அளவு


செய்முறை


1. முதலில் நெத்திலி கருவாடை வெந்நீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைத்து, பின் வடிகட்டி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.



2. பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.



3. பின்பு அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தக்காளியை சேர்த்து நன்கு கரைந்து வரும் வரை வதக்கவும்.



4. பிறகு அதில் மாங்காய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.



5. மாங்காய் பாதியாக வெந்ததும், உப்பு, மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து கிளறி, புளிச்சாற்றினை ஊற்றி, எண்ணெய் தனியாக பிரியும் வரை குழம்பை நன்கு கொதிக்க விட வேண்டும்


பின் கருவாட்டை சேர்த்து 5-10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து, சிறிதளவு சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கினால், செட்டிநாடு நெத்திலி கருவாட்டு குழம்பு ரெடி.

வாரம் ஒரு முறை வித விதமான கருவாட்டு குழம்பு வைத்து சாப்பிடுங்கள் போகும் போது comment boxல உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்