மெல்ல கற்போருக்கான கற்பித்தல் செயல்பாடுகள்
மெல்ல கற்போரை ‘மெல்ல மலரும் மொட்டுகள்’ என்று குறிப்பிடச் செய்ததன் மூலம் தமிழகக் கல்வித்துறை ஒரு பெரும் புரட்சியைச் செய்திருக்கிறது.
கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் எவரும் கிடையாது. ஆசிரியர்களின் விரைவான மற்றும் வேகமான கற்பித்தலால் அப்படி ஒரு தோற்றம் நிலவினாலும் தனி அக்கறை எடுத்து அவர்களுக்கேற்ற வேகத்தில் ஆசிரியர்கள் கற்பிக்கும் போது மெல்ல கற்போரும் விரைவாகக் கற்போராக மாறுகிறார்கள்.
அடிப்படை எழுத்தறிவில் மாணவர்கள் பின்தங்கும் போது அவர்களுக்கேற்ற கற்பித்தல் செயல்பாடுகளை ‘மெல்ல கற்போருக்கான கற்பித்தல் செயல்பாடுகளாக’ திட்டமிட்டுக் கொள்ளும் போது கற்றல் – கற்பித்தல் செயல்பாடுகளைச் சரிசமமாக அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க அத்திட்டமிடல் துணையாக அமையும்.
மெல்ல கற்போருக்கான இக்கற்பித்தல் செயல்பாடுகளை மூன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரையுள்ள அனைத்து மெல்ல மலரும் மாணவர்களுக்கும் பயன்படுத்திப் பார்க்கலாம்.
மெல்ல மலரும் மாணவர்களுக்கு எழுத்துகளை முறையாக அறிமுகம் செய்வதும், எழுத்துகளை எழுதுவது மற்றும் வாசிப்பதில் தேவையான அளவில் பன்முறை பயிற்சி வழங்குவதும் தேவைப்படும்.
எழுத்துகள் மற்றும் சொற்கள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆசிரியர் மேற்கொள்ள வேண்டிய முன்னெடுப்புகளுக்குக் கீழே உள்ள வரைபடம் உதவும்.
மாணவர்களின் வாசிப்பிலும் எழுத்திலும் குறில் – நெடில் வேறுபாடுகளைத் தெளிவாக அறிதல் பிழைகளைத் தவிர்க்க பெரிதும் உதவும். கீழே உள்ள அட்டவணையின் படி வாசிப்பதும், அட்டவணையில் உள்ளபடி எழுதிப் பார்ப்பதும் குறில் – நெடில் பிழைகளைத் தவிர்க்க துணை செய்யும்.
குறில் – நெடில் இனவெழுத்து சொற்கள் |
|
குறில் |
நெடில் |
அணில் |
ஆடு |
இலை |
ஈ |
உடல் |
ஊக்கு |
எறும்பு |
ஏணி |
ஐந்து |
|
ஒட்டகம் |
ஓடம் |
ஔவையார் |
|
கல் |
கால் |
கிணறு |
கீதாரி |
குரங்கு |
கூட்டல் |
கெண்டை |
கேழ்வரகு |
கொக்கு |
கோளம் |
சட்டை |
சாட்டை |
சிட்டு |
சீட்டு |
சுக்கு |
சூடு |
செலவு |
சேலம் |
சொல் |
சோளம் |
தந்தம் |
தாத்தா |
திரி |
தீ |
துக்கம் |
தூக்கம் |
தென்னை |
தேங்காய் |
தொப்பி |
தோகை |
பட்டு |
பாட்டு |
பிட்டு |
பீர்க்கங்காய் |
புடவை |
பூ |
பெருமை |
பேதைம |
பொட்டு |
போகி |
மலை |
மாலை |
மிட்டாய் |
மீசை |
முட்டை |
மூட்டை |
மென்மை |
மேன்மை |
மொட்டு |
மோதகம் |
வண்டி |
வாழ்க்கை |
வில் |
வீரம் |
வெக்கை |
வேட்கை |
0 கருத்துகள்