Ad Code

Ticker

6/recent/ticker-posts

பள்ளிகளில் தமிழ் வழி கல்வி சான்றிதழ் பெறுவதில் மாற்றம்; இ--சேவை மூலம் விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு

பள்ளிகளில் தமிழ் வழி கல்விக்கான சான்றிதழ் பெற இ-சேவை மையங்களில் ('ஆன் லைன்) விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இ-சேவை மூலம் விண்ணப்பிக்க முடியாமல் விண்ணப்பதாரர்கள் தவிக்கின்றனர்.



தமிழ்நாடு தேர்வாணையத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முதல் முறையாக தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழ் கோரப்படுகிறது. தற்போது அரசின் அனைத்து வேலைவாய்ப்புகளுக்கும் கல்வித் தகுதிக்கேற்ப இந்த சான்றிதழ் கோரப்படுகிறது. தற்போது தாங்கள் படித்த பள்ளியின் தலைமையாசிரியர்களிடம் நேரடியாக சென்று சான்றிதழ் வாங்கி வருகின்றனர்.



தற்போது இ-சேவை மையங்கள் மூலமாக 'ஆன் லைன்' மூலம் விண்ணப்பிக்கப்படும் மனுக்களுக்கு மட்டும் சான்றிதழ் வழங்குமாறு பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



சேவை மையத்தில் விண்ணப்பிக்கப்படும் மனுக்கள் பள்ளிக்கல்வி மாநிலத்திட்ட இயக்ககத்திலிருந்து மின்னஞ்சல் மூலமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பப்படும். பின்னர் அங்கிருந்து ஆன்லைன் மூலமாகவே தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்படும். தலைமையாசிரியர்கள் பள்ளிப்பதிவேடுகளை பார்த்து, விண்ணப்பத்தின் நம்பகத்தன்மையை சரிபார்த்த பின்னர் மின் கையொப்பம் செய்து பதிவேற்றம் செய்து சான்றிதழ் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.



விண்ணப்பங்களை சரிபார்க்க https://emis.tnschools.gov.in/auth/login?returnUrl=%2Fdashboard என்ற இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது.



முழுமையாக இந்த அறிவிப்பு தலைமையாசிரியர்களை சென்றடையவில்லை. சில தலைமையாசிரியர்கள் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவித்ததன் அடிப்படையில் இ சேவை மையத்தில் விண்ணப்பித்த போது 'ஆன் லைனில்' இதற்கான வசதி ஏற்படுத்தவில்லை என தெரியவந்தது.



இதனால் தற்போதைய வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க சான்றிதழ் பெற முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே முறையாக ஆன்லைன் சேவை துவக்கப்படும் வரை பழைய நடைமுறையில் சான்றிதழ்கள் பெறவும், அதன் மூலம் அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கவும் அனுமதிக்க கோரிக்கை எழுந்துள்ளது.











கருத்துரையிடுக

0 கருத்துகள்