பண்டையகாலம் முதலே தங்கம் விலை மதிப்பற்ற உலோகமாக விளங்குகிறது உலக அளவில் நிதி சந்தைகளை நிர்வகிக்கும் வல்லமை கொண்டதாகவும் இருக்கிறது எத்தனை நெருக்கடியான பொருளாதார சூழலின் போதும் தங்கம் விலையில் பெரிய அளவில் ஏற்ற இறக்கங்கள் இருக்காது. இதனால்தான் தங்க மதிப்பு மிக்க பொருளாக விளங்குகிறது. கரன்சி நோட்டுகளை விட சிறந்ததாக கருதப்படுகிறது. தங்கத்தின் முதலீடு செய்தால் எந்த வகையிலும் பண நஷ்டம் ஏற்படாது. கடந்த 20 ஆண்டுகளில் தங்கத்தின் நிலையில் ஏற்பட்டிருக்கும் அத்ரிதமான உயர்வே அதற்கு சாட்சி 2002 ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 4990 இப்போது 10 கிராம் தங்கம் 52 ஆயிரம் ரூபாய் விற்கப்படுகிறது. சராசரியாக 12.5% வரை தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு ஒரு சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். எந்த வழியில் முதலீடு செய்வது சிறந்தது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
தங்கம் வாங்குதல்
அழகிய டிசைன்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் தங்க நகைகளை வாங்கி அணிவதற்கு தான் பெண்கள் விரும்புவார்கள். ஆனால் முதலிடம் நோக்கத்திற்காக வாங்க விரும்பினால் தங்க நாணயம் அல்லது தங்க கட்டிகளை தேர்ந்தெடுப்பது தான் சரியானது ஏனெனில் தங்க நகைக்கே அதன் விலையுடன் கூடுதலாக செய்கூலி சேதாரம் போன்றவை சேர்க்கப்படும். நகையின் விலையை விட கூடுதல் பணம் செலுத்த வேண்டியிருக்கும் பின்னால் மறு விற்பனை செய்தால் அந்த தொகையை திரும்ப பெற சாத்தியம் இல்லை.
டிஜிட்டல் தங்கம்
முதலீட்டு நோக்கங்களுக்கு டிஜிட்டல் தங்கம் முறையையும் தேர்ந்தெடுக்கலாம் ஆன்லைன் வழியே தங்கத்தை வாங்கும்போது அது உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் ஆனால் அந்த தங்கத்தை பார்க்க முடியாது அது உங்க கணக்கில் இருக்கிறது என்பது மட்டும் உறுதி செய்யப்படும் அதனை நீங்கள் எந்த நேரத்திலும் பணமாக மாற்ற முடியும் டிஜிட்டல் தங்கம் வாங்குவதற்கு ஏராளமான இனையதளங்கள் உள்ளன செல்போன்களில் அப்ளிகேஷன்களும் இருக்கின்றன.ஒரு சில வங்கிகள் நகை கடைகளிலும் டிஜிட்டல் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது அவற்றின் சாதகப் பாதங்களை தெரிந்து கொண்டு டிஜிட்டல் தங்கம் வாங்குவது நல்லது.
மியூச்சுவல் ஃபண்ட்
சாதாரண மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் போலவே கோல்ட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும் அமைந்து இருக்கின்றன ஒரே வித்தியாசம் என்னவென்றால் தங்கத்தை நேரடியாக வாங்குவதில்லை மறைமுகமாக தங்க நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யப்படும் கோல்ட் மியூச்சுவல் ஃபண்ட் சிறந்த திட்டமாகவே பார்க்கப்படுகிறது ஓரளவு லாபம் கொடுக்கக் கூடியதாகவும் கருதப்படுகிறது.
தங்க பத்திரங்கள்
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலில் தங்க பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன இங்கேயும் நீங்கள் நேரடியாக தங்கத்தை வாங்குவதில்லை அதற்கு பதிலாக ஒவ்வொரு பத்திரத்திலும் வாங்கும் தங்கத்தின் மதிப்பு குறிப்பிடப்படுகிறது இந்த பத்திரங்களுக்கு வருடம் தோறும் வட்டியும் வழங்கப்படுகிறது சந்தையின் மதிப்புக்கு ஏற்ற விற்பனை செய்து கொள்ளலாம் எனும் முதலீட்டு காலம் 8 ஆண்டுகளாகும் 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளியேறும் வழியும் உண்டு லாபம் குறைவாக கிடைத்தாலும் பரவாயில்லை ரிஸ்க் எடுக்க விருப்பமில்லை என்று நினைப்பவர்களுக்கு தங்க பத்திரங்கள் சிறந்த முதலீட்டு திட்டமாக கருதப்படுகிறது பங்குச்சந்தை ஏற்ற இறக்கம் மந்த நிலை போன்றவற்றை கருத்தில் கொண்டு சரியான திட்டங்களை தேர்வு செய்வது நல்லது.
0 கருத்துகள்