Ad Code

Ticker

6/recent/ticker-posts

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்| happy teachers day in tamil|ஆசிரியர் பற்றிய பொன்மொழிகள்|ஆசிரியர் தின கவிதை

 


ஆசிரியர் பணி அறப்பணி என்பார்கள் ஆசிரியர் தினத்தன்று எனது முன்னேற்றத்திற்கு காரணமான என்னுடைய ஆசிரியர்களை நினைவு கூறுவது எனது கடமையாகும். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி காந்தாமணி அவர்கள்  புத்தகத்தைத் தவிர கலை நிகழ்ச்சிகளில் அனைத்து மாணவர்களின் பங்கு பெற வைப்பார்.பள்ளியின் ஆண்டு விழா தலைமை ஆசிரியர் என்னை அழைத்து காந்திஜியை பற்றி ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று கூறினார். எனக்கு மேடை ஏறுவது பயம். அதுவும் ஆங்கிலத்தில் பேசுவது பயமோ பயம் தலைமையாசிரியரிடம் நான் பேசமாட்டேன்  என்று கூறினேன். தலைமை ஆசிரியர் எனது அருகில் வந்து உன்னால் முடியும் பயப்படாதே என்று என்னுடைய பயத்தை போக்கினார் அவர் கொடுத்த நம்பிக்கை மேடை ஏறி காந்திஜி பற்றி பேசி பலரின் பாராட்டை பெற்றேன். அது மட்டுமின்றி பள்ளியில் நடைபெறும் அனைத்தும் போட்டிகளிலும் என்னை பங்கு பெற வைப்பார்.

த்தாம் வகுப்பு படிக்கும் போது திரு பாபு ஆசிரியர் எட்டு பாட வேலையும் எங்களுக்கு கணித வகுப்பு எடுத்தது என்னால் மறக்க முடியாத நிகழ்வு. அதே போல் திரு ராஜாராம் ஆசிரியர் கணித பாடத்தில் முக்கோணத்தின் பரப்புக்கான சூத்திரம் சொல்லிக் கொடுத்த விதம் இன்றளவும் மறக்க முடியாத அளவுக்கு ஞாபகம் உள்ளது.பதங்கமாதல் பற்றி திரு மணோகரன்  ஆசிரியர் எடுத்த விதம் இன்றளவும் எனக்கு மனதில் ஆழமாக பதிந்துள்ளது. திரு சுகுமார் ஆசிரியர் ஆங்கிலத்தில் ERC நடத்திய விதம் என் மனதில் ஆழமாக பதிந்து உள்ளது.

ன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது ஆங்கிலம் போதிக்க ஆசிரியை இல்லை அதனால் தலைமை ஆசிரியர் திரு சோ. சண்முகம் அவர்கள் ஆங்கில பாடத்தை போதித்தார். தலைமை ஆசிரியரை அனைத்து மாணவர்களுக்கும் பிடிக்கும் காரணம் கோபப்பட மாட்டார் அடிப்பதும் கிடையாது.ஒருநாள் காந்திஜி  Essay Test கொடுத்தார். அனைத்து மாணவர்களும் தலைமையாசிரியர் பள்ளிக்கு வர மாட்டார் என்று தேர்வுக்கு படிக்கவில்லை. ஆனால் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வந்து தேர்வு எழுதுமாறு கூறினார். ஒரு மாணவர் கூடம் எழுதவில்லை. தலைமையாசிரியர் கோவப்பட்டு அனைத்து மாணவர்களும் அடித்தார்.மறுநாள் அனைத்து மாணவர்களும் Essay தேர்வு எடுத்துக்காட்டினோம். அன்று தலைமையாசிரியர் அடித்தது எண்ணி இன்று நான் பெருமை அடைகிறேன்.தலைமை ஆசிரியர் திரு.சோ. சண்முகம் அவர்கள் பழங்கால பொருட்களை சேகரித்து கண்காட்சி நடத்துவார் இது மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தும். நான் 12 ஆம் வகுப்பு முடித்து டிசி வாங்க பள்ளிக்குச் சென்றேன் டிசி வாங்கிய பின் எனது தந்தை தலைமையாசிரியர் திரு சோ சண்முகம் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கச் சொன்னார் நானும் அவர்களின் காலில் விழுந்து வணங்கினேன். நன்றாக படி என்று ஆசீர்வாதம் செய்தார்.


இன்று ஆசிரியர் தினம்.

கடந்து வந்த ஏணிப்படிகளை

கொஞ்சம் எண்ணிப் பார்க்கிறேன்.


முதல் முதலாய் பள்ளி வாசல்.

கண்களில் கண்ணீரோடு

நீ ஆசையாய் என்னை அள்ளி எடுத்து

அரவணைத்து சுவாசப்படுத்தினாய்..

அந்த கதகதப்பு, பாசம், நேசம்

இன்றும் இருக்கிறது

நெஞ்சினில் அழியாமல்

அம்மாவிற்கு இணையாய் வைத்தேன்..


அரும்பு வயதிலிருந்து குறும்பு வயதிற்கு தாவல்..

விடலை பருவம்

தவறுகளுக்கு குறைவைக்கவில்லை..

முட்டி போட வைத்து தண்டித்தாய்

அந்த வலி இன்னும் இருக்குது

தப்பு செய்ய விடாமல் தடுக்குது..

அப்பாவிற்கு இணையாய் வைத்தேன்..


அரும்பு மீசை வயதில் ஏனோ

நீ சொன்னதெல்லாம் தப்பாகவே தெரிந்தது

மெல்ல மெல்ல நான் வளர

சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளிருந்து உடைத்து வெளிவர

பரந்து விரிந்த உலகை நீ காட்டினாய்


நாளைய இந்தியாவை நீ

தினம் தினம் செதுக்கையிலே சிற்பியாய் தெரிகிறாய்

தோல்வியில் நான் துவழ

தோளில் சாய்த்து எனை தேற்ற தோழனாய் தெரிகிறாய்


எனதருமைக்குரியவர்களே!!

மீண்டும் தாயை நினைவு கூர்ந்தீர்கள்..

எப்போது தெரியுமா?

வகுப்புகளின் கடைசி இருக்கையில் அமர்ந்து

தங்கள் தாலாட்டில் இருக்கை படுக்கையானபோது..

ஆழ்ந்த உறக்கம்..

சட்டென இடிமுழக்கம்..


விழித்தால் தான் தெரிந்தது

என் எதிரே அர்ச்சனைகளின் ஆரம்பமென..


தங்களை பிரியும் போதெல்லாம்

கண்களில் ரணகளம்

தூர தேசத்திலோ

எதிர்பாரா சந்திப்பிலோ

எங்கள் உயர்ந்த நிலைக்கண்டு

நல்ல குடிமக்களாய் பார்க்கையில் தான்

உங்கள் கண்களில் எத்தனை குதூகலம்


குயவனிடம் களிமண் பானையாகிறது

உங்களிடம் நாங்கள் மனிதர்களாகிறோம்..


மாதா பிதா குரு தெய்வம்..

அர்த்தம் விளங்கவில்லை வெகுநாள்..

புரிந்தபோது தெரிந்தது..

மாத பிதா குரு மூவரும் தெய்வமென..


எத்தனை எத்தனை முகங்களடா..

இருந்தும்

எத்தனை எத்தனை அமைதியடா..

தாய் தந்தையர் தந்தது உயிர்

நீ தந்தது உண்ர்ச்சி..


 எனது ஆசிரியர்கள் எனது முன்னேற்றத்திற்கு காரணம் இன்று நானும் ஆசிரியராக இருப்பதற்கு இவர்களே காரணம் என்னுடைய ஆசிரியர்கள் என்னுடன் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அனைத்து  ஆசிரியர்களுக்கும் என் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்


கா.கோபாலகிருஷ்ணன்.MA,Bed

பட்டதாரி ஆசிரியர்

அ.மே.நி.பள்ளி

பேரணி 


1)Teachers day quotes tamil|ஆசிரியர் பொன்மொழிகள்|teachers day slogan - click here

2)ஆசிரியர் தினம் கவிதைகள்|Teacher day kavithai in tamil|Teachers கவிதை in tamil - click here

3)ஆசிரியர் தின வரலாறு|ஆசிரியர் தினம் கட்டுரை- click here

கருத்துரையிடுக

0 கருத்துகள்