கனாக் காலங்கள் ஆசிரியர் தினம்
வீர வணக்கங்கள் !!!
இன்று ஆசிரியர் தினம்.
கடந்து வந்த ஏணிப்படிகளை
கொஞ்சம் எண்ணிப் பார்க்கிறேன்.
முதல் முதலாய் பள்ளி வாசல்.
கண்களில் கண்ணீரோடு
நீ ஆசையாய் என்னை அள்ளி எடுத்து
அரவணைத்து சுவாசப்படுத்தினாய்..
அந்த கதகதப்பு, பாசம், நேசம்
இன்றும் இருக்கிறது
நெஞ்சினில் அழியாமல்
அம்மாவிற்கு இணையாய் வைத்தேன்..
அரும்பு வயதிலிருந்து குறும்பு வயதிற்கு தாவல்..
விடலை பருவம்
தவறுகளுக்கு குறைவைக்கவில்லை..
முட்டி போட வைத்து தண்டித்தாய்
அந்த வலி இன்னும் இருக்குது
தப்பு செய்ய விடாமல் தடுக்குது..
அப்பாவிற்கு இணையாய் வைத்தேன்..
அரும்பு மீசை வயதில் ஏனோ
நீ சொன்னதெல்லாம் தப்பாகவே தெரிந்தது
மெல்ல மெல்ல நான் வளர
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளிருந்து உடைத்து வெளிவர
பரந்து விரிந்த உலகை நீ காட்டினாய்
நாளைய இந்தியாவை நீ
தினம் தினம் செதுக்கையிலே சிற்பியாய் தெரிகிறாய்
தோல்வியில் நான் துவழ
தோளில் சாய்த்து எனை தேற்ற தோழனாய் தெரிகிறாய்
எனதருமைக்குரியவர்களே!!
மீண்டும் தாயை நினைவு கூர்ந்தீர்கள்..
எப்போது தெரியுமா?
வகுப்புகளின் கடைசி இருக்கையில் அமர்ந்து
தங்கள் தாலாட்டில் இருக்கை படுக்கையானபோது..
ஆழ்ந்த உறக்கம்..
சட்டென இடிமுழக்கம்..
விழித்தால் தான் தெரிந்தது
என் எதிரே அர்ச்சனைகளின் ஆரம்பமென..
தங்களை பிரியும் போதெல்லாம்
கண்களில் ரணகளம்
தூர தேசத்திலோ
எதிர்பாரா சந்திப்பிலோ
எங்கள் உயர்ந்த நிலைக்கண்டு
நல்ல குடிமக்களாய் பார்க்கையில் தான்
உங்கள் கண்களில் எத்தனை குதூகலம்
குயவனிடம் களிமண் பானையாகிறது
உங்களிடம் நாங்கள் மனிதர்களாகிறோம்..
மாதா பிதா குரு தெய்வம்..
அர்த்தம் விளங்கவில்லை வெகுநாள்..
புரிந்தபோது தெரிந்தது..
மாத பிதா குரு மூவரும் தெய்வமென..
எத்தனை எத்தனை முகங்களடா..
இருந்தும்
எத்தனை எத்தனை அமைதியடா..
தாய் தந்தையர் தந்தது உயிர்
நீ தந்தது உண்ர்ச்சி..
மனிதனை நாகரீகமாக்கும் மகான்களே!!!
மலர்கள் மீது..
\nவீர வணக்கங்கள் !!!
வீர வணக்கங்கள் !!!
–விழியன்
(முதுநிலை படிப்பின் முதல் ஆண்டில், ஆசிரியர் தினத்தன்று கால்மணி அவகாசத்தில் எழுதி – பேசிய உரை)
ஆசிரியர் தினம் கவிதைகள்
எல்லாத்துக்கும் மிக்க நன்றி ஐயா !
உங்கள் சேவைக்கு
நீங்கள் தந்த கல்விக்கு
நன்றி சொல்வது மட்டும் போதாது
நான் என் ஆயுள் முழுவதும்
உங்களுக்கு கடமை பட்டுள்ளேன்
உங்கள் சேவையை என்றும்
மறக்க மாட்டேன் !
நன்றியுடன் உங்களை
நினைத்துப் பார்க்கும்
உங்கள் மாணவன் ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள்!
ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்
நாங்கள் பரிட்சை எழுத
நீங்கள் அல்லவா படித்தீர்கள்
நாங்கள் வெற்றிப் பெற
நீங்கள் அல்லவா உழைத்தீர்கள்
கல்லும் உடையாமல்
சிலையும் சிதறாமல்
எங்களை செதுக்கிய
சிற்பி அல்லவா நீங்கள்
மழையின் அருமை தெரியாமல்
மழையை கண்டு ஓடுபவர்போல
உங்களைக் கண்டு ஓடினோம்
மழையின் அருமை
கோடையில் தெரியும்
உங்களின் அருமை, பெருமை
இப்போது உணர்கிறேன் !
ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்
எததனை ஆயிரம் ஆசிரியர்கள்-ஆனால்
நோக்கம், லட்சியம் ஒன்று தானே
என் மாணவன் முன்னேற வேண்டும்
தேர்ச்சிப்பெற வேண்டும்
வெற்றி பெற வேண்டும்
ஆஹா !
எத்தனை உயரிய எண்ணம்
நீங்கள் அல்லவா
வணக்கத்துக்குறியவர்கள்
எத்தனை கேலிகள்
எத்தனை கிண்டல்கள்
எத்தனை துன்பங்கள், தொல்லைகள்
உங்களுக்கு செய்தோம்
இன்று நினைக்கையில்
என் உள்ளம் வலிக்கிறதே
உங்கள் காலில் விழுந்து
மன்னிப்பு கோருகிறோம்
எங்களை மன்னியுங்கள் - ஐயா
இன்று வரையிலும் , இனிமேலும்
நாங்கள் காணும் வெற்றிகளுக்கு
நாங்கள் அடையும் புகழ்களுக்கு
உரியவர்கள் நீங்கள் தானே - ஐயா !
ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்
நாங்கள் செய்த தவறுக்கு
தண்டனை எங்களுக்கு தந்து
வேதனையை - நீங்கள்
அல்லவா அனுபவித்தீர்கள்
எத்தனை அன்பு , அரவணைப்பு
எத்தனை அறிவுரைகள் , ஆலோசனைகள்
எல்லாம் எதற்கு
எங்கள் வாழ்வு வளம் பெறதானே
எததனை நாள்
மழையில் நனைந்தீர்கள்
வெயிலில் காய்ந்தீர்கள்
பசியை மறந்தீர்கள்
உங்கள் குடும்பத்தைவிட
எங்கள் நலனில் தானே
அதிகம் அக்கரை செலுத்தினீர்கள் நாங்கள் செய்த தவறுக்கு
தண்டனை எங்களுக்கு தந்து
வேதனையை - நீங்கள்
அல்லவா அனுபவித்தீர்கள்
எத்தனை அன்பு , அரவணைப்பு
எத்தனை அறிவுரைகள் , ஆலோசனைகள்
எல்லாம் எதற்கு
எங்கள் வாழ்வு வளம் பெறதானே
எததனை நாள்
மழையில் நனைந்தீர்கள்
வெயிலில் காய்ந்தீர்கள்
பசியை மறந்தீர்கள்
உங்கள் குடும்பத்தைவிட
எங்கள் நலனில் தானே
அதிகம் அக்கரை செலுத்தினீர்கள்
இறந்த காலங்களில் ஓராயிரம் முறை
உங்களை திட்டி தீர்திருந்தாலும்
நிகழ காலங்களில் வாழ்த்தாத நாளில்லை ...!
ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்
கை எடுத்து வணங்குகிறேன்
நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்
நான் வாழ ! நான் முன்னேற!
எனக்காக உழைத்தவர்கள்
நான் இன்று இன்பம் காண
அன்று துன்பம் பொறுத்தவர்கள்
நான் முத்து சேர்க்க
மூச்சடக்கி முத்து குளித்தவர்கள்
என் இளம் வயதில் கண்ட
நடமாடும் தெய்வங்கள் !
என் ஆசிரியர்கள்
0 கருத்துகள்