Ad Code

Ticker

6/recent/ticker-posts

4, 5ம் வகுப்புகளுக்கு இன்று முதல் தொகுத்தறிதல் தேர்வு

 

4, 5ம் வகுப்புகளுக்கு இன்று முதல் தொகுத்தறிதல் தேர்வு

 

அரசு தொடக்க பள்ளிகளில் படிக்கும், நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, இன்று மாநில அளவிலான தொகுத்தறியும் தேர்வு நடக்கிறது.
 
அரசு பள்ளிகளில் கல்வி கற்பித்தல், தேர்வு நடத்துதல், ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்டவற்றில், பள்ளிக் கல்வி துறை பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.இதன்படி, அரசு பள்ளிகளில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, இந்த ஆண்டில் இருந்து முதல் பருவ தேர்வுக்கு பதில், தொகுத்தறியும் திறன் தேர்வு நடக்கிறது.மாநில அளவில், ஒரே வினாத்தாள் அடிப்படையில், பொது தேர்வுக்கு இணையாக நடத்தப்படுகிறது. ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனரகம் சார்பில், ஆசிரியர்களின் மொபைல் போன் செயலி வழியாக, தொகுத்தறிதல் தேர்வு நடக்கிறது.
 
இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடத்தப்பட உள்ள தேர்வு கண்காணிப்பு பணிக்கு, ஆசிரியர்கள் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.தேர்வு முடிந்த பின், அதன் மதிப்பீடுகள், கல்வி அமைச்சகத்துக்கு தொகுப்பு அறிக்கையாக அனுப்பப்பட உள்ளதாக, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

கருத்துரையிடுக

0 கருத்துகள்