வரலாறு
1) நவீன இந்திய ஆதாரங்களை தொகுத்து ஒரு அட்டவணை தயார் செய்க
2) ஆங்கிலேயர்களால் இந்திய அரசர்கள் தோற்கடிக்கப்பட்டதற்கான காரணங்களை விவாதம் செய்க
3) காந்தியின் அகிம்சை மற்றும் சக்தியாகிரகத்தை வடிவமைப்பதில் செல்வாக்கு பெற்றது எது என்பது குறித்து எழுதுக.
4) பாளையக்காரர்கள் படங்களை சேகரித்து ஒரு செருகேட்டினை தயார் செய்க.
5) பண்டைக்கால கல்வி மையங்களின்படங்களை சேகரித்து படத்தொகுப்பு ஒன்றினை தயார் செய்க
6)உனது மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளின் பெயர்களை எழுதி வேளாண்மை தொழிற்சாலை மற்றும் வனபொருள் தொழிற்சாலை ஆகியவைகளை வகைப்படுத்வும்.
7) இந்திய வரைபடத்தில் துறைமுக நகரங்கள், இராணுவ குடியிருப்புகள்,மலைவாழிடங்களைக் குறிக்கவும்.
8)குழு விவாதம்
விடுதலை இயக்கத்தில் பெண்களின் பங்களிப்பு
புவியியல்
1) இந்திய வரைபடம்
கரிசல் மண் காணப்படும் பகுதிகளைக் குறிக்கவும்
2)மழைமானி மற்றும் காற்று திசை காட்டி கருவிகளின் மாதிரிகளை உருவாக்குக.
3) நீர் ஆவியாதல் பற்றி கட்டுரை எழுதுக.
4)உனது பகுதியில் உள்ள மக்கள் இடம் பெயர்தலுக்கான காரணங்களை ஆராய்ந்து பட்டியலிடுக.
5) தமிழ்நாடு வரைபடத்தில் 13கடற்கரை மாவட்டங்களை வெவ்வேறு வண்ணங்களில் தீட்டவும்.
6) வேளாண் சார்ந்த தொழிலகங்கள் பற்றி கட்டுரை எழுதுக
7) ஆஸ்திரேலியா அரசியல் வரைபடத்தில் மாநிலங்களின் பெயர்களை எழுதவும்
8)உலக மற்றும் இந்தியா இயற்கை அமைப்பு வரைபடங்களை ஒப்பிட்டு உலக வரைபடத்தில் இந்தியாவின் விடுப்பட்ட இயற்கை தோற்றங்களை கண்டறிக
குடிமையியல்
1) தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களின் ஆளுநர், முதலமைச்சர் பெயர்களை பட்டியலிடுக.
2) நல்லகுடிமகனாக வகுப்பறையிலும் வகுப்பறைக்கு வெளியிலும் நீவீர் எவ்வாறு நடந்து கொள்வாய் என அட்டவணை படுத்துக.
3) உனது பள்ளி நாட்காட்டியில் உள்ள விடுமுறை நாட்களை கவனி அவற்றில் வெவ்வேறு சமயங்களுடன் தொடர்புடையவை எவை? அவற்றை சமயங்களின் அடிப்படையில் பட்டியலிடுக அது எதனை குறிக்கிறது.
4) நீங்கள் அனுபவிக்கும் 10 உரிமைகள் மற்றும் உங்களுக்கான பொறுப்புகளை பட்டியலிடுக.
5) சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையேட்டினைத் தயாரித்து பள்ளியில் சுற்றுக்கு அனுப்புக.
6) இந்திய ராணுவத்தில் வழங்கப்படும் விருதுகள் குறித்த தகவலை சேகரி.
7) மாதிரி நீதிமன்ற அறை அமர்வுக்காக உங்கள் வகுப்பறையை ஒழுங்கமைக்கவும்.(ஆசிரியரின் உதவியுடன் ஒரு வழக்கை எடுத்து விவாதிக்கலாம்)
பொருளியல்
1)மாணவர்கள் இந்தியா மற்றும் மற்ற நாடுகளின் பழைய மற்றும் புதிய நாணயங்களின் மாதிரிகளை கொண்ட அட்டவணையை தயாரிக்க கூறுதல்.
2) பொதுத்துறை நிறுவனங்களின் பெயர்களை எழுதுக.
0 கருத்துகள்