Ad Code

Ticker

6/recent/ticker-posts

LO அடிப்படையில் உருவாக்கப்பட்ட பாடக்குறிப்பு|பத்தாம் வகுப்பு|சமூக அறிவியல்|உணவு பாதுகாப்பு மற்றும்ஊட்டச்சத்துNotes of Lesson|social sciences|10 class

 நாள்:

வகுப்பு:10 ம் வகுப்பு

பாடம்: சமூக அறிவியல்

பாடத் தலைப்பு: உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

கற்றல் விளைவுகள்

SST1022-உணவு கை இருப்பில் தொழில்நுட்பத்தின் தாக்கத்தை ஆராய்தல்

கற்றல் நோக்கங்கள்

*உணவு பாதுகாப்பின் வரையறை பொருள் பற்றி படித்தல்

*உணவு தானியங்கள் கிடைத்தல் மற்றும் அணுகுதல் பற்றி அறிந்து கொள்ளுதல்.

*வாங்கும் திறன் மற்றும் விவசாயக் கொள்கை பற்றி புரிந்து கொள்ளுதல்.

*தமிழ்நாட்டில் ஊட்டச்சத்து சுகாதார நிலை மற்றும் கொள்கை பற்றி படித்தல்.

அறிமுகம்

மக்கள் வாழ்க்கையும் வளர்ச்சியும் பராமரிப்பதற்காக சாப்பிடும் மற்றும் அருந்தும் எந்த ஒரு பொருளும் உணவு என வரையறுக்கப்படுகிறது.

கருப்பொருள்

உணவு பாதுகாப்பு, உணவு தானியங்களின் கிடைத்தல் மற்றும் அணுக்கள், வாங்கும் திறன், இந்தியாவின் விவசாயக் கொள்கை, வறுமையின் பரிணாமத்தின் இயல்பு பாடத்தின் கருப்பொருளாக அமைந்துள்ளன.

உட்பொருள்

தமிழ்நாட்டில் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தின் நிலை, வறுமை குறியீடு, பொதுவழங்கள் முறை, இந்திய உணவுக் கழகம் இப்பாடத்தின் உட்பொருளாக அமைந்துள்ளன.

முக்கிய கருத்துருக்கள்

*உணவின் அடிப்படை கூறுகள் மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு

*உணவு தானியங்கள்

*உணவு பாதுகாப்பில் நுகர்வோர் கூட்டுறவின் பங்கு

*வாங்கும் திறனை பாதிக்கும் காரணிகள்

*தமிழ்நாட்டில் சில ஊட்டச்சத்து திட்டங்கள்

முன்னறிவு

ஒன்பதாம் வகுப்பில் தமிழகத்தில் வேளாண்மை பற்றி பொதுவான விஷயங்களை அறிந்திருக்கும் இங்கு உணவு பாதுகாப்பு, உணவு தானியங்களின் கிடைத்தல் மற்றும் அனுகல், இந்தியாவின் விவசாயக் கொள்கை பற்றி விரிவாக அறிந்து கொள்ள முடியும்.

ஆசிரியர் செயல்பாடு

Contour map



Concept map



வலுவூட்டல்

பாடத்தொடர்பான காணொளி காட்சிகள் மூலம் கருத்து வரைபடம் மூலம் பாட கருத்தை வலுவூட்டல்.

மதிப்பீடு

LOT

நீடிக்கப்பட்ட உதவி பொதுச் சட்டம் 480 கொண்டு வந்த நாடு____

MOT

தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்___ அன்று துவக்கப்பட்டது

HOT

புதிய விவசாயக் கொள்கை____ இல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது

குறைதீர் கற்பித்தல்

கற்றலில் பின் தங்கிய மாணவர்களுக்கு பாடப்பகுதியை மீண்டும் கற்பித்தல்

தொடர் பணி

பசுமைப் புரட்சியின் விளைவுகளைப் பற்றி படித்துக்கொண்டு எழுதி வரவும்.


Join Telegram group

https://t.me/+bbDs7CM4BkI1ODg1


கருத்துரையிடுக

0 கருத்துகள்