உயர்திரு தலைமையாசிரியர் அவர்களுக்கும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் சிறப்பு விருந்தினர் அவர்களுக்கும் இருபால் ஆசிரியர் ஆசிரியர்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் நாடு முழுவதும் இன்று சுதந்திர தினம் விழா சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்நாளில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட சுதந்திர தின வீரர்களை நினைவு கூறுவது நமது கடமை ஆகும். 1919 ஆம் ஆண்டு ஆங்கில அரசு ரௌளட் சட்டத்தை கொண்டு வந்தது. இதை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. இதன் நீட்சியாக பஞ்சாப் மாநிலத்திலும் இப் போராட்டம் நீடித்தது. அனைவரும் தங்கள் எதிர்ப்பை அரசுக்கு தெரிவிக்கும் விதமாக ஜாலியன் வாலாபாக் சதுக்கத்தில் ஒன்று கூடுவதென முடிவை எடுத்தார்கள்.
ஜாலியன் வாலாபாக் இடம் என்பது நான்கு பக்கமும் உயர்ந்த மதில் சுவர் கொண்டது. உள்ளே போவதற்கும் வெளி வருவதற்கும் ஒரு வழி பாதை மட்டுமே அதற்கு உண்டு. அந்த சதுக்கத்தின் நடுவிலே பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் கிணறு மட்டுமே இருந்தது. அந்தப் பகுதியின் ஆளுநராக இருந்த ஜெனரல் ஓடையர் அவர்கள் பொதுமக்களுக்கு எந்த ஒரு அறிவிப்பும் இன்றி 144 தடை உத்தரவை பிறப்பித்தார். இத்தடை மக்களுக்குளுக்கு தெரியாது. எனவே மக்கள் அனைவரும் ஜாலான் வாலாபாக் சதுக்கத்தில் ஒன்று கூடினார்கள். அச்சதுக்கத்தில் மண் இருந்ததோ இல்லையோ ஆனால் மக்கள் தளைகலவே காணப்பட்டது. சிறுவர்கள் பெரியவர்கள் என மக்கள் ஒன்று கூடினார்கள்.
ஜெனரல் ஓடைர் அவர்கள் ஜாலான் வாலாபாக் சதுக்கத்திற்கு உள்ளே செல்லும் வழியில் இராணுவ வீரர்களை நிறுத்தி சரமாரியாக சுட உத்தரவிட்டார். எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி சுட்டனர் 10 நிமிடங்கள் அந்த துப்பாக்கி சூடு நடைபெற்றது. எங்கும் அளரல் சத்தம் தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள மதில் சுவர் மீது ஏறியவர்கள் மீதும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டன. ஆங்கிலே அரசிடம் துப்பாக்கியால் சாவதை விட தன் உயிரை மாய்த்துக் கொள்ள நிறைய மக்கள் கிணற்றில் விழுந்து தன் உயிரை விட்டார்கள். அந்தக் கிணற்றில் நீர் சுறந்ததோ இல்லையோ ஆனால் இந்திய மக்களின் ரத்தங்கள் சுரந்தது.அந்த சதுக்கத்தில் உள்ள மண்கள் அனைத்தும் சிவப்பு நிறமாக மாறியது. பத்து நிமிடங்கள் அந்த துப்பாக்கி சூடு நடந்து முடிந்தது. துப்பாக்கி சூடு பற்றி பத்திரிகையாளரிடம் ஜெனரல் ஓடையர் சுட்டேன் சுட்டேன் என் ஆசை தீர சுட்டேன் என்று பறவைகளை சுடுவது போல சுட்டேன் என்று பேட்டி அளித்தார். இதை கண்முன்னே பார்த்த உத்தம சிங் எப்படியாவது ஜெனரல் ஓடையர் அவர்களை பழிவாங்குவேன் என்று சபதம் மேற்கொண்டார்.
பணி நிமிர்த்தமாக இந்தியாவில் இருந்து தன் தாய் நாடு செல்கிறார் ஜெனரல் ஒடையர் உத்தம சிங் எப்படியாவது ஜெனரல் ஓடையர் பழிவாங்கும் என பல நாடுகளுக்கு சென்று கடைசியாக இங்கிலாந்தில் சிறு சிறு கூலி வேலைகளை செய்து சாப்பாட்டுக்கு வழியின்றி தனது எண்ணத்தை நிறைவேற்ற காத்துக் கொண்டிருக்கிறார். 21 வருடங்கள் கழித்து ஜெனரல் ஓடையர் அவர்கள் இங்கிலாந்தில் ஒரு பொது மேடையில் பேசுவதற்காக வருகை புரிகிறார். அதே கூட்டத்தில் உத்தமசிங் அவர்களும் ஒரு புத்தகத்தின் நடுவே துப்பாக்கி வைத்துக் கொண்டு கலந்து கொள்கிறார். ஓடையர் அவர்கள் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போதே உத்தமசிங் கையில் இருந்த துப்பாக்கி எடுத்து இரண்டு முறை சுடுகிறார் ஓடையர் அங்கேயே இறந்து விடுகிறார். உத்தமசிங் தப்பிக்கவில்லை. நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது உத்தம சிங்குக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. தூக்கு மேடையிலே உனது கடைசி ஆசை என்ன என்று கேட்கும் போது நான் இறப்பதற்கு அஞ்சவில்லை என்னை தூக்கிலிடுங்கள் என் தாய் திருநாட்டுக்கு எடுத்துச் சென்று என்னை தூக்கிலிடுங்கள் என் உயிர் பிரிவது என் தாய் திருநாட்டில் தான் இருக்க வேண்டும் என் உடல் என் தாய் திருநாட்டின் மண்ணில் தான் விழ வேண்டும் என்று தனது கடைசி ஆசையை கூறினார். ஆங்கில அரசு நிறைவேற்றவில்லை இங்கிலாந்திலே அவரை தூக்கிலிட்டது.
"வாழ்கஇந்தியா"
" வளர்க தமிழ்நாடு"
" நன்றி"
கா.கோபாலகிருஷ்ணன்
பட்டதாரி ஆசிரியர்
அ.மே.பள்ளி
பேரணி
independence day speech in tamil - click here
Independence Day 2022 Speech in English for Students - click here
Independence Day Kavithai in tamil- click here
Join Telegram group
https://t.me/+bbDs7CM4BkI1ODg1
0 கருத்துகள்