Ad Code

Ticker

6/recent/ticker-posts

TEAM Visit Important points to remember for HM and Class Teachers



ண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம்- பள்ளிகள் ஆய்வு மாநில அளவிலான உயர்மட்டக்குழு பள்ளிகளை ஆய்வு மேற்கொள்ளுதல் -தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தயார் நிலையில் இருத்தல்- தொடர்பாக இல்லம் தேடி கல்வி சிறப்பு அலுவலர், இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் ஆகியோரின் தலைமையில் அரசு அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலை உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பள்ளிகளை முன்னறிவிப்பின்றி ஆய்வு செய்ய உள்ளமையால் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கீழ்கண்ட அம்சங்களில் தயார் நிலையில் இருக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.  
பள்ளித்தூய்மை

 👉01)பள்ளி வளாகம், பள்ளி வகுப்பறை, கற்றல் கற்பித்தல் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக தூய்மையாக இருத்தல் வேண்டும். கொரானா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் மாணவர்கள் பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை தலைமை ஆசிரிய பெருமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தினந்தோறும் பின்பற்றி மேற்கொள்ளப்பட வேண்டும். 
 👉02) பள்ளி கழிப்பறைகள் மற்றும் சிறுநீர் கழிப்பிடங்கள் தூய்மையாக பராமரித்திருக்க வேண்டும்.
 👉03) ஆசிரியர் அறை, நூலக அறை, அறிவியல் ஆய்வுக்கூடம், உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வுக்கூடம்,ATAL TINKERING LAB, தொழிற்கல்வி‌ ஆய்வுக்கூடம் போன்றவை தூய்மையாக பராமரித்தல் வேண்டும். 
 👉04) மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கடைசியாக தூய்மை செய்த தேதி குறிப்பிட்டு இருத்தல் வேண்டும்
👉05) குடிநீர் வசதி தேவையான அளவில் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். 
 👉06) தூய்மைப் பணியாளர்கள் வருகை அவர்கள் மேற்கொள்ளும் பணிகள் சார்ந்து விவரங்கள் பராமரிக்கப்பட வேண்டும். 
 👉07) மாணவர்களுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் எந்த ஒரு பொருளும் பள்ளி வளாகத்தில் பள்ளி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறக்கூடாது. 
 👉08) பள்ளித் தூய்மை தொடர்ந்து பராமரிக்க படுவதை உறுதி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் 
 2022 -2023 கல்வி ஆண்டுக்கான நாட்காட்டி 2022-20 23 கல்வி ஆண்டிற்கான நாட்காட்டியின் படி செயல்பாடுகள் செயல்திட்டம் தீட்டப்பட்டு, செயல்படுத்திய/ செயல்படுத்தப்பட வேண்டிய விவரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நடப்பில் உள்ள கல்வி ஆண்டில் மதிப்புமிகு கல்வித் துறை ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களால் வழங்கப்பட்ட அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் செயல்முறைகளையும் பின்பற்றி இருப்பதோடு அச்செயல் முறைகளையும் நெறிமுறைகளையும் புத்தக வடிவில் பள்ளியில் பராமரித்து பார்வைக்கு வைத்து இருக்க வேண்டும். மேற்காணும் செயல்முறைகளில் குறிப்பிட்ட அனைத்து விவரங்களையும் ஆசிரிய பெருமக்களுக்கு தெரிவித்து பள்ளியில் நடைமுறைப்படுத்திருக்க வேண்டும். 

பள்ளி மாணவ மாணவிகளுக்கான அரசின் நலத்திட்டங்கள்

 01) மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து விதமான நலத்திட்டங்களுக்கு தனித்தனியாக பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு,மாணவர்களிடம் கையொப்பம் பெற்றிருக்க வேண்டும். 
 
02) ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கை பெறப்பட்ட விலையில்லா பொருட்களின் எண்ணிக்கை பருவம் வாரியாக வழங்கப்பட்ட விலையில்லா பொருட்கள் எண்ணிக்கை இருப்பு உள்ள விலையில்லா பொருட்கள் எண்ணிக்கை போன்றவை abstract-வுடன் பராமரிக்கப்பட்டு தலைமை ஆசிரியர் மற்றும் பொறுப்பு ஆசிரியர் பெருமக்களிடம் கையொப்பம் பெற்றிருக்க வேண்டும்.
 
03) குறிப்பாக மாணவியர்களுக்கு வழங்கப்படும் பொது சுகாதாரத் துறையால் வழங்கப்படும் மாத்திரைகள், நாப்கின்ஸ், நாப்கின் டிஸ்பென்சர், இன்சினரேட்டர் போன்றவைகள் நல்லமுறையில் பராமரிக்கப்பட்டு அதற்கான பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும்.

 04) ஒவ்வொரு வருடமும் விலையில்லா பொருட்கள் பொருட்கள் வாரியாக இனவாரியாக எத்தனை ஜோடி பொருட்கள் எந்தெந்த வகுப்பிற்கு எப்போது வழங்கப்படுகிறது, எவ்வளவு எண்ணிக்கையில் வழங்கப்பட்டது, தேவை, எவ்வளவு மீதமுள்ளது எவ்வளவு என்ற விவரம் சார்ந்து தலைமையாசிரியர் தெளிவாக இருத்தல் வேண்டும்.

 05) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் SC/ST அட்டவணைப்படுத்தப்பட்ட வகுப்பினர் மாணவ மாணவிகளுக்கு சார்ந்த அரசு துறையில் இருந்து பெற்று வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை விவரங்கள் வருட வாரியாக மாணவர்கள் பெயர் பட்டியல் தொகுப்பு அறிக்கையுடன் பராமரிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

 
06)CASH INCENTIVE-பவர் பைனான்ஸ், என் எம் எம் எஸ், டிரஸ்ட் தேர்வுகள்,, என் டி எஸ் இ போன்ற தேர்வுகளில் பள்ளியில் எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றி பெற்ற மாணவ விவரங்கள் அவர்களுக்கு பெற்று வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகைகள் போன்றவை பராமரிக்கவேண்டும்.

 07) தாய் தந்தையரை இழந்த மாணவ-மாணவியர்கள் யாரேனும் இருப்பின் அவர்களுக்கு பெற்று வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை விவரம் குறித்து பராமரித்து இருக்க வேண்டும்


 கற்றல் கற்பித்தல் பணிகள் 


01)ஆசிரியர்கள் பாடக்குறிப்புகள் தேவையான படிகளுடன் எழுதி வைக்கப்பட்டு வாரம் ஒருமுறை தலைமை ஆசிரியரால் கையொப்பம் இடப்பட்டு அப் பாடப்பகுதி குறித்த நேரத்தில் முடிக்கப்பட்டுள்ளதா என்ற விவரம் தலைமையாசிரியர் கண்காணித்திருக்க வேண்டும்.

 02)பாட ஆசிரியர்கள் ஒவ்வொரு வகுப்பிலும் கற்பித்தல் பணி மேற்கொள்ளும் பொழுது அப்பாட பொருள் சார்ந்த கற்பித்தல் உபகரணங்கள் கொண்டு நடத்தப்பட்டதை தலைமையாசிரியர் உறுதி செய்தல் வேண்டும்.

 03)1 முதல் 8 வகுப்புகளுக்கு தொடர் மதிப்பீட்டு முறையில் FA & SA முறையில் சிறு சிறு தேர்வுகள் வைக்கப்பட்டு ஒப்படைப்புகள் வழங்கப்பட்டு திருத்தப்பட்டு பதிவேடுகள் ஆசிரியப் பெருமக்கள் பராமரிக்கப்பட்டு உள்ளதை தலைமையாசிரியர்கள் உறுதிப்படுத்தல் வேண்டும். 

04)தலைமையாசிரியர் ஒவ்வொரு ஆசிரியருக்கும் குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு ஒரு முறை உற்று நோக்கல் பதிவேடு கற்றல் கற்பித்தல் பணி மேற்கொண்டதை உற்றுநோக்கி உற்றுநோக்கல் பதிவேட்டில் பதிவு மேற்கொண்டிருக்க வேண்டும். ஏதேனும் மேம்படுத்தப்பட வேண்டிய அம்சங்கள் இருப்பின் சார்ந்த ஆசிரியருக்கு தெரிவித்து கற்றல் கற்பித்தல் பணியை மேம்படுத்துவதற்கு மேற்கொண்ட பணிகள் சார்ந்தும் விவரங்கள் வைத்திருக்க வேண்டும். 

05)இதுவரை 10, 11 12ம் வகுப்புகளுக்கு நடைபெற்ற அலகுத் தேர்வுகள் திருப்புத் தேர்வுகள் மற்றும் ஏனைய 6 முதல் 9 வகுப்புகளுக்கு வைக்கப்பட்ட அலகுத் தேர்வுகள் சார்ந்து விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மதிப்பெண் பட்டியல் பராமரிக்கப்படுவதை உறுதி செய்தல் வேண்டும். மாணவர்களின் தேர்ச்சி பகுப்பாய்வு குறித்து தலைமை ஆசிரியரும் பாட ஆசிரியர்களும் தெளிவான குறிப்புகள்/விவரங்கள்/பதிவேடு வைத்திருக்க கள் வேண்டும். 

06)அலகுத் தேர்வு மற்றும் திருப்புதல் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் குறைவான மதிப்பெண்கள் பெற்ற மெல்ல கற்கும் மாணவர்கள் சார்ந்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் சார்ந்து செயல்திட்டம் வடிவமைத்து அதன்படி நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

 07) மாணவர்களின் கற்றலில் பின்னடைவை சார்ந்து மேம்படுத்தும் நடவடிக்கையின் பொருட்டு பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சார்ந்து விவரங்கள் பராமரிக்க வேண்டும்.

 08)பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி ஓவியப்போட்டி அறிவியல் கண்காட்சி மற்றும் முக்கிய தினங்கள் கொண்டாட்டம் சார்ந்து லாக் புக்கில்(LOG BOOK) குறிப்புகள் பங்கேற்றவர்கள் வெற்றி பெற்றவர்கள் ஆகியோரின் விவரம் எழுதி வைத்திருக்க வேண்டும்.

 09) பாடக்குறிப்பேடுகள், கட்டுரை பயிற்சி ஏடுகள், கணித வடிவியல் பயிற்சி ஏடுகள், வரைபடபயிற்சி ஏடுகள், நில நூல் வரைபட பயிற்சி ஏடுகள், தமிழ் ஆங்கிலம் கையெழுத்து பயிற்சி ஏடுகள் , அறிவியல் செய்முறை குறிப்பேடுகள், உற்றுநோக்கல் பதிவேடு, WORK DONE REGISTER உட்பட,

 சிறுதேர்வுகள்: 

 சிறு தேர்வுகள் வைத்து திருத்தி வழங்கிய ஏடு சார்ந்த பாட ஆசிரியர்கள் திருத்தி மாணவர்களுக்கு வழங்கி இருக்க வேண்டும், மேற்காண் ஏடுகள் ஆசிரியர் திருத்தப்பட்டது தலைமையாசிரியர்கள் RANDOM CHECK UP மேலோட்டமாக கண்காணித்து கையொப்பமிட்டிருக்க வேண்டும்.

 10) ஒவ்வொரு பாட ஆசிரியரும் ஒரு பாடத்தின் கற்பித்தல் நோக்கம், கற்றல் விளைவுகள் பற்றி தெளிவான விவரங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கற்பிக்கும் பொழுது என்ன கற்றல் விளைவுகளை எதிர் நோக்கி பாடம் நடத்தப்படுகிறது என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒவ்வொரு படத்திலும் குறைக்கப்பட்ட பாடப்பகுதி சார்ந்து ஒவ்வொரு பாட ஆசிரியரும் தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்

 11) ஒவ்வொரு பாடத்திலும் வாசித்தல் பயிற்சி, பெருக்கல் வாய்ப்பாடு, அடிப்படை கணித செயல்பாடுகள், அறிவியல் குறியீடுகள் சார்ந்த விவரங்கள், TWO RULED & FOUR RULED HANDWRITING ,COMPOSITION WORKS,நில நூல் பயிற்சி சார்ந்த விவரங்கள் பள்ளியில் என்னென்ன செயல்பாடுகள் நிகழ்த்தப்படுகின்றன என்ற விவரம் மாணவர்களுக்கு தெரியப்படுத்தி யிருக்க வேண்டும்.

 🔵எடுத்துக்காட்டாக நூலகம், அறிவியல் ஆய்வகம், உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் நிகழ்த்தப்படும் பயிற்சி தேர்வுகள் ,


 மாணவர்கள் ஒழுக்கம் சார்ந்த பயிற்சிகள்  

12) POSA பயிற்சிகள் , மாணவர்கள் ஒழுக்கம் சார்ந்த விழிப்புணர்வு செயல்பாடுகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு சார்ந்து நிகழ்த்தப்பட்ட செயல்பாடுகள்,1098,14417 என்ற எண்கள் குறித்த விழிப்புணர்வு, சமீபத்தில் காவல்துறையால் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள காவலன் செயலி குறித்த விவரங்கள் மாணவர்களுக்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டும். மாணவர் மனசு ஆலோசனை பெட்டி செயல்பாடு குறித்து தனி பதிவேடு பராமரிக்க வேண்டும். விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர் வைத்திருக்க வேண்டும். ஏற்கனவே மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினால் வழங்கப்பட்ட தகரத்தால் செய்யப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பார்வைக்கு படும் அளவிற்கு வைத்திருத்தல் வேண்டும்.

 10) நூலகம் வகுப்பு வாரியாக திங்கள் முதல் சனிக்கிழமை வரை எந்தெந்த வகுப்பு மாணவர்களுக்கு நூலக பாட வேளையில் புத்தகங்கள் வழங்கி படிக்கவைத்து திரும்பப் பெறப்பட்டுள்ளது என்பதை நூலக புத்தகம் வழங்கல் பதிவேடு மற்றும் நூலக இருப்பு பதிவேடு மற்றும் பராமரிக்கப்பட்டு இருக்க வேண்டும். 

 புள்ளி விவரங்கள்

 11) மே 2022 பத்தாம் வகுப்பு 11ஆம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு பொதுத்தேர்வு முடிவுகள் பாடவாரியாக இன்னும் விவரம் இன வாரியான மாணவர் விவரம் சரியான புள்ளிவிவரங்கள் வைத்திருக்க வேண்டும்.

 இல்லம் தேடி க்கல்வி

  01)தங்கள் பள்ளியில் அருகாமையில் எத்தனை குடியிருப்புகள் உள்ளன எத்தனை இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள், தங்கள் பள்ளியில் உள்ள ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை, எத்தனை மாணவர்கள் மாலை வேளையில் இல்லம் தேடி கல்வி சிறப்பு வகுப்பில் கலந்து கொள்கின்றனர், எத்தனை மாணவர்கள் கலந்து கொள்வதில்லை அதற்கான காரணம் போன்ற‌ விவரங்கள் வைத்திருக்க வேண்டும்

 02) இல்லம் தேடிக் கல்வி வகுப்புகளை பார்வையிட்டு தலைமையாசிரியர்கள் அறிவுரை வழங்க பட்டதற்கான குறிப்புகள் இருக்க வேண்டும். அதற்கான சூழல் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தன்னார்வலர்கள் கற்பித்தல் உபகரணங்கள் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

 03) தன்னார்வலர்களின் பெயர்கள் குடியிருப்புப் பகுதிகள் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை மாணவர் வருகை விவரம் பதிவு போன்ற புள்ளி விவரங்கள் வைத்திருக்க வேண்டும்.

 எமிஸ்அம்சங்கள்

 💯01) தினந்தோறும் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் வருகை சார்ந்த புள்ளிவிவரங்கள் பராமரிக்கப்பட வேண்டும். இதுவரை எமிஸ் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி அனைத்து அம்சங்களும் பதிவேற்றம் செய்து நிறைவுற பணிகள் முடிக்கப்பட்டு இருக்க வேண்டும். 

 💯02) மாணவர்கள் வருகை ஆசிரியர்கள் வருகை குறித்த நேரத்தில் பதிவு மேற்கொண்டிருக்க வேண்டும். 

 💯03) கணினி உயர் தொழில்நுட்ப ஆய்வகத்திற்கு ஆசிரியர் ஒருவரை பொறுப்பாளராக நியமித்திருக்க வேண்டும்.

 💯04) கடந்த ஆண்டு வினாடி வினா பயிற்சிதேர்வில் பங்கேற்ற மாணவர்கள் வருகை, பயிற்சி எடுத்துக் கொண்ட மாணவர்கள் எண்ணிக்கை, பயிற்சி மேற்கொள்ளாத மாணவர்கள், எண்ணிக்கை, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் சார்ந்து விவரங்கள் வைத்திருக்க வேண்டும். 

 💯04) இதுவரை இணையதளத்தின் மூலம்/நேரடியாக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகள் CAPACITY BUILDING TRAINING,மகிழ்கணிதம், எண்ணும் எழுத்தும் பயிற்சி,SPOKEN ENGLISH TRAINING எடுத்துக்கொண்ட ஆசிரியர் விவரங்கள் பயிற்சி தலைப்பு வாரியாக பராமரிக்க வேண்டும். ஆசிரியர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டதின் அடிப்படையில் *எண்ணும் எழுத்தும் மற்றும் பயிற்சி ஆங்கில பேச்சு பயிற்சி* மாணவர்களிடையே நடைமுறைப்படுத்தப்பட்ட விவரம். 

 💯06) *SMC கூட்டம்* நடத்தப்பட்ட விவரம், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு விவரம் மற்றும் SMC தேர்வு முறை குறித்த விவரங்கள் வைத்திருக்கவேண்டும். 

 💯07) எமிஸ் இணையதளத்தில் இதுவரை தங்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட ALL COMPONENTS அனைத்து அம்சங்களும் முடிக்கப்பட்டு உள்ளதா என்பதை ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் ஆசிரியர்களும் உறுதிப்படுத்த வேண்டும்.

 பள்ளி செல்லாக் குழந்தைகள் தங்கள் பள்ளியில் 1 முதல் 12ம் வகுப்பு வரை தற்போதைய கல்வி ஆண்டில் தொடர்ந்து பள்ளிக்கு வராத மாணவர்களை பள்ளிக்கு வருவழைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் சார்ந்து விவரங்கள்/எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கைகள் சார்ந்து கண்டிப்பாக பராமரித்து இருக்க வேண்டும்.

 மன்ற செயல்பாடுகள் SCOUTS & GUIDES, JRC,SPC,SCHOOL SAFETY ADVISORY COMMITTEE சாலை பாதுகாப்பு மன்றம், பாட மன்றங்கள்,தொன்மை பாதுகாப்பு மன்றம்,தேர்தல் விழிப்புணர்வு மன்றம் ELC (ELECTION LITERACY CLUB) , POSA, உடல் ஆரோக்கியம் RBSK மருத்துவ பரிசோதனை மற்றும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கான/ தொழிற்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் சார்ந்த ஆவணங்கள், புள்ளிவிவரங்கள் பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

 சத்துணவு கூடம்

 🔵தினந்தோறும் தலைமையாசிரியர்கள் மற்றும் பொறுப்பு ஆசிரியர்கள் சத்துணவு மையத்தில் வழங்கப்படும் சத்துணவு பரிசோதனை செய்து மாணவர்களுக்கு வழங்கும் பதிவேடு, இருப்புப்பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.

 🔵ஒவ்வொரு நாளும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் வழங்கப்படும் அளவு போன்றவற்றை சத்துணவு கூடத்தில் ஒட்டி வைத்திருக்க வேண்டும். 

 🔵சத்துணவு கூடம், பாத்திரங்கள், சத்துணவு தயாரிக்கும் இடம் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு இருக்க வேண்டும். சேதமடைந்த பயன்படுத்த இயலாத எந்த ஒரு பொருளும் சத்துணவு கூடத்தில் இருக்கக் கூடாது. 

 *வருகைப் பதிவேடு மற்றும் இதர பதிவேடுகள்* 
 
 வருகை பதிவேடு, மாணவர் வருகை பதிவேடு ஆசிரியர்கள் விடுமுறை குறித்த விவரங்கள், இதர முக்கிய பதிவேடுகள் முறையாக பூர்த்தி செய்து பராமரித்து வைத்திருக்க வேண்டும். எனவே மாநில அளவிலான உயர்மட்டக்குழு தங்கள் பள்ளிக்கு வருகை தர உள்ளதால் மேற்காணும் அறிவுரைகள் மற்றும் வழக்கமான நடைமுறைகள் சரியாக பின்பற்றி நமது மாவட்டத்திற்கு நற்பெயரை ஈட்டித் தரும் வகையில் ஒவ்வொரு ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் செயல்பட வேண்டுமாய் தெரிவிக்கப்படுகிறது. மேலும் வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய பொறுப்பு மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் மேற்காணும் அனைத்து அம்சங்களும் சரியாக நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளனவா என தலைமையாசிரியர்களுக்கு உறுதுணையாக இருந்து சரிபார்க்க வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்