History of veedur dam history in Tamil language
வீடூர் அணை (VEEDUR DAM)
வீடூர் அனை
வீடூர் அணை என்பது விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ளது . வீடூர் அணை 1958 ம் ஆண்டு துவங்கி 1959 ம் ஆண்டு முடிக்கப்பட்டது. 89 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த அணை 1959 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் திரு காமராசர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.
மற்றும் பொதுப்பனிதுறை அமைச்சர் திரு.P.கக்கன் அவர்கள் தலைமை வகித்துள்ளார்...
மற்றும் பொதுப்பனிதுறை அமைச்சர் திரு.P.கக்கன் அவர்கள் தலைமை வகித்துள்ளார்...
அனை விவரம்:
அணையின் மொத்த நீளம் அகலம் முறையாக 15,800 அடி மற்றும் 37 அடி ஆகும். அணையின் மொத்தக் கொள்ளளவு 32 அடியாகும். 3200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெரும் வகையில் அமைந்துள்ள இந்த அணையின் பிரதான கால்வாய் 176 கி. மீ நீளம் கொண்டதாகும். இந்த அணை தமிழக அரசின் பொதுபணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இந்த அணையின் மொத்த நீளம் 15800 அடி
மண் அணையின் நீளம் 15370 அடி
கல் அணையின் நீளம் 430 அடி
மண் அணையின் அதிக உயரம் 37 அடி
கல் அணையின் நீர்மட்ட அளவு 32 அடி
நீர் பரப்பு 8,59,16,000 சதுர அடி
இந்த அணையின் மொத்த நீளம் 15800 அடி
மண் அணையின் நீளம் 15370 அடி
கல் அணையின் நீளம் 430 அடி
மண் அணையின் அதிக உயரம் 37 அடி
கல் அணையின் நீர்மட்ட அளவு 32 அடி
நீர் பரப்பு 8,59,16,000 சதுர அடி
அணையின் சிறப்பு:
வீடூர் அனை மற்ற அனைகளுடன் ஒப்பிடும்போது பூகோள அமைப்பில் சற்று மாறுபட்டது. இந்த அணை இரண்டு ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது.
சங்கராபரணி, பெரியாறு இந்த இரண்டு நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது.
பாசனபரப்பு:
சுமார் 3200 ஏக்கர் நிலப்பரப்புகள் இந்த அணையினால் பாசன வசதி பெறுகின்றன. மேலும் 100 க்கு மேற்பட்ட கிராமங்களின் நீராதாரமாக விளங்குகிறது. இந்த அணை சற்றே பழமையான அணை என்ற போதிலும் இன்றளவும் பயனுள்ளதாக இருக்கிறது இந்த வீடுர் அணை.
வீடுர்அணை பூங்கா:
இந்த அணையினை சுற்றி உள்ள பூங்கா மிகவும் அழகாகவும் மேலும் சில வருட காலங்களுக்கு முன்னர் இந்த பூங்காவில் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்றன என்றால் அது மிகையல்ல...
0 கருத்துகள்