Ad Code

Ticker

6/recent/ticker-posts

1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை

 

ஜூன் 23ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் நேற்று பிளஸ் 2 தேர்வு நேற்று தொடங்கியது. மொத்தம் 8.37 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். முதல் நாளான நேற்று தமிழ்ப்பாட தேர்வு நடந்தது. மாணவர்கள் ஆர்வமுடன் வந்து தேர்வு எழுதினர். இதனிடையே தமிழகம், புதுச்சேரியில் 10ம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. 9 லட்சத்து 55  ஆயிரம் மாணவ மாணவியர் இந்த தேர்வில் இன்று பங்கேற்கின்றனர். இந்நிலையில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை  பயிலும் அனைவருக்கும் மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; 1 முதல் 9-ம் வகுப்பு வரை  பயிலும் அனைவருக்கும் மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை. ஒரு மாதம் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 13ம் தேதி 1 முதல் 9 வரையிலான வகுப்புகள் தொடங்கும். தமிழகத்தில் ஜூன் 2ம் தேதி முதல் 12 வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கும். ஜூன் 23-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். 11ம்வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் 7ம் தேதி வெளியாகும். 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 17ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்