தமிழில் விகுதியைக் கொண்டு நாம் பால், எண், திணை, இடம், காலம் இவற்றை அறிந்து கொள்ள முடியும்.
தமிழில், வருகின்றேன், வருகின்றாய், வருகின்றான்,வருகின்றது, வருகின்றன என்ற வினைச் சொற்களில் தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய இடங்களையும் ஆண்பால், பெண்பால்,பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகிய பால்களையும் ஒருமை, பன்மை எண்ணையும் காணமுடியும். இந்தச் சொற்களுக்கு முன்னால் நான், நீ, அவன், அது, அவை என்ற சொற்களை இட வேண்டியது இல்லை.
பால் என்றால் என்ன?
- பால் என்பது திணையின் உட்பிரிவு ஆகும் (பால்-பகுப்பு, பிரிவு).
- பால் இரு திணைகளிலும் அடங்கிய உலகத்துப் பொருட்களை ஐம்பால்களாகப் பிரிக்கின்றனர்.
பால் என்பதன் பொருள்
பால் என்பதற்கு ‘பகுப்பு' எனப் பொருளுண்டு. பெயர்ச்சொற்களையும் வினைச்சொற்களையும் ஐந்து பால்களாகப் பிரிக்கிறோம்.
ஐம்பால் எடுத்துக்காட்டு
- அவன், இவன் - ஆண்பால்
- அவள், இவள் - பெண்பால்
- அவர், இவர் - பலர்பால்
- யானை,புறா - ஒன்றன்பால்
- பசுக்கள், மலைகள் - பலவின்பால்
ஆண்பால் பெயர்ச்சொல், ஆண்பால் வினைச்சொல் முடிவையே பெறும்.
- அவன்(பெயர்) வந்தான்(வினை) .
அவன் வந்தாள் என்றோ, அவன் வந்தார் என்றோ எழுதுவது பிழையாகும். இதேபோல்தான், பிற பால் சொற்களையும் எழுதுதல் வேண்டும்.
- ஆண்பால் - அவன் வந்தான்
- பெண்பால் - அவள் வந்தாள்
- பலர்பால் - அவர்கள் வந்தார்கள்
- ஒன்றன்பால் - அது வந்தது
- பலவின்பால் - அவை வந்தன
உயர்திணைக்குரிய பால்கள்
உயர்திணைக்குரிய பால் பகுப்புகள் யாவை?
உயர்திணைக்குரிய பால்கள் மூன்று வகைப்படும்.
- ஆண்பால்
- பெண்பால்
- பலர்பால்
உயர்திணைக்குரிய பால்கள் எடுத்துக்காட்டு
ஆண்பால்
உயர்திணையில் ஓர் ஆணை மட்டும் குறிக்கும் சொல் ஆண்பால்.
- எடுத்துக்காட்டு - இராமன்
ஆண்பாலுக்குரிய ஈறுகள்
ஆண்பால் -'ன' கர ஈறுகள் ஆண்பாலை உணர்த்தும்.- எ.கா: அவன், இவன், வந்தான்,வீரன், அண்ணன், மருதன்.
பெண்பால்
உயர்திணையில் ஒரு பெண்ணை மட்டும் குறிக்கும் சொல் பெண்பால்.
- எடுத்துக்காட்டு - சீதா
பெண்பாலுக்குரிய ஈறுகள்
பெண்பால் -'ள' கர ஈறுகள் பெண்பாலை உணர்த்தும்- எ.கா: அவள், இவள், வந்தாள்,மகள், அரசி,தலைவி.
பலர் பால்
உயர்திணையில் ஆண், பெண் ஆகிய இரு பாலரிலும் பலரைக் குறிப்பது பலர் பால்.
- எடுத்துக்காட்டு - மக்கள், பெண்கள்
பலர்பாலுக்குரிய ஈறுகள்
பலர்பால் -'அர், ஆர்' என்பன பலர்பாலை உணர்த்தும்- எ.கா:அவர், இவர், உண்டார்,மக்கள், பெண்கள், ஆடவர்.
அஃறிணைக்குரிய பால்கள்
அஃறிணைக்குரிய பால் பகுப்புகள் யாவை?
அஃறிணைக்குரிய பால்கள் இரண்டு வகைப்படும்.
- ஒன்றன் பால்
- பலவின்பால்
அஃறிணைக்குரிய பால்கள் எடுத்துக்காட்டு
ஒன்றன் பால்
அஃறிணையில் ஒன்றைக் குறிப்பது ஒன்றன் பால்.
- எடுத்துக்காட்டு - மரம், வண்டி
ஒன்றன்பாலுக்குரிய ஈறுகள்
ஒன்றன் பால் - 'து, று, டு' என்பன ஒன்றன் பாலை உணர்த்தும்.
- எ.கா: யானை,புறா, மலை,வந்தது, தாவிற்று, குறுந்தாட்டு (குறுகிய காலை உடையது).
பலவின்பால்
அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால்.
- எடுத்துக்காட்டு - பழங்கள், பறவைகள் , மரம்கள், வண்டிகள்
பலவின்பாலுக்குரிய ஈறுகள்
பலவின்பால் - 'அ, ஆ , வ' என்பன பலவின் பாலை உணர்த்தும்.- எ.கா: பசுக்கள், மலைகள்,ஓடின, மேய்ந்தன, உண்ணா, திண்ணா, உண்குவ, தின்குவ.
படர்க்கை இடத்தில் உயர்திணைக்குரிய பால்கள், அஃறிணைக்குரிய பால்கள் எடுத்துக்காட்டு
- அவன் - (படர்க்கை, ஆண்பால்)
- அவள் - (படர்க்கை, பெண்பால்)
- அது - (படர்க்கை, ஒன்றன்பால்
0 கருத்துகள்