Ad Code

Ticker

6/recent/ticker-posts

10 std fist rivison social important 2mark 5 mark qustion answers|பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் முதல் திருப்புதல் தேர்வுக்கான முக்கிய 2 மற்றும் 5 மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள்

குறுகிய விடையளி

 

1. சீன ஜப்பானியப் போரின் முக்கியத்துவத்தை நீ எவ்வாறு மதிப்பீடு செய்வாய்?

  • சீன-ஜப்பானிய போரில் (1894-1895) சீனாவை சிறய நாடான ஜப்பான் தோற்கடித்தது.
  • ஜப்பான் லியோடங் தீபகற்பத்தை ஆர்தர் துறைமுகத்துடன் சேர்த்து இணைத்துக் கொண்டது
  • இந்நடவடிக்கை மூலம் கிழக்கு ஆசியாவில் தானே வலிமை மிகுந்த அரசு என ஜப்பான் மெய்பித்தது

 

2. மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களை குறிப்பிடுக

இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா

 

3. ஒட்டாவா பொருளாதார உச்சி மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கவும்.

  • இங்கிலாந்திற்கும் ஆங்கிலப் பேரரசின் உறுப்பு நாடுகளுக்கும் 1932 நடைபெற்ற ஒட்டவா பொருளாதார உச்சி மாநாட்டில் இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின
  • இம் மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் (இந்தியா உட்பட) ஏனைய நாட்டு பொருள்களைக் காட்டிலும் இங்கிலாந்து பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க ஒத்துக் கொண்டன
4. இந்தோ-சீனாவில் நடைபெற்ற ‘வெள்ளை பயங்கரம்’ குறித்து நீங்கள் அறிந்ததென்ன?
  • 1929-ல் வியட்நாம் வீரர்கள் ராணுவப் புரட்சி செய்தனர்.
  • பிரெஞ்சு கவர்னர் ஜெனரலைக் கொலை செய்வதற்கான முயற்சியிலும் தோல்வி அடைந்தது.
  • இதனைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட்களின் தலைமையில் மிகப்பெரும் விவசாயிகளின் புரட்சியும் நடைபெற்றது.
  • இப்புரட்சி ஒடுக்கப்பட்டதைத் தொடரந்து வெள்ளை பயங்கரவாதம் என்பது அரங்கேறியது.
  • புரட்சியாளர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்
5. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக.
  • மேற்கு – பாகிஸ்தான்
  • வடமேற்கு – ஆப்கானிஸ்தான்
  • வடக்கு – சீனா, நேபாளம், பூடான்
  • கிழக்கு – வங்காளதேசம், மியான்மர்
  • தெற்கு – இலங்கை
6. இந்திய திட்டநேரத்தின் முக்கியத்துவம் பற்றி கூறுக.
  • இந்தியாவின் கிழக்கிலுள்ள அருணாச்சல பிரதேசத்தில் மேற்கிலுள்ள குஜராத்தைக் காட்டிலும் இரண்டு மணி நேரம் முன்னதாகவே சூரியன் உதயமாகிறது.
  • இதனால் இந்த இரண்டு பகுதிகளுக்ககும் உள்ள தல வேறுபாடு 1மணி 57 நிமிடம் 12 வினாடிகள் ஆகும்
  • இந்த நேர வேறுபாட்டை தவிர்ப்பதற்காக, இந்தியாவின் மத்திய தீர்க்கரேகையான 82°30’ கிழக்கு தீர்க்கரேகையின் தலநேரம், இந்திய திட்டநேரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
  • இத்தீர்க்கரேகை மிர்சாபூர் (அலகாபாத்) வழியாக செல்கிறது.
  • இந்திய திட்ட நேரமானது கீரீன்வீச் திட்ட நேரத்தை விட 5 மணி 30 நிமிடம் முன்னதாக உள்ளது
7.’பருவமழை வெடிப்பு’ எனறால் என்ன?
  • தென்மேற்கு பருவக்காற்று தொடங்குவதற்கு முன் வட இந்தியாவின் வெப்பநிலையானது 46oC வரை உயருகிறது.
  • இப்பருவக்காற்றின் இடி மற்றும் மின்னலுடன் கூடிய துவக்கம் (தென் இந்தியாவில்) பருவமழை வெடிப்பு’ எனப்படுகிறது.
8.காலநிலையை பாதிக்கும் காரணிகளை பட்டியலிடுக.
  • அட்சங்கள்
  • கடல் மட்டத்திலிருந்து உயரம்
  • கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு
  • பருவக்காற்று
  • நிலத்தோற்றம்
  • ஜெட் காற்றுகள்
9. இந்தியாவின் செம்மொழிகள் எவை?
  • தமிழ்
  • சமஸ்கிருதம்
  • தெலுங்கு
  • கன்னடம்
  • மலையாளம்
  • ஒடியா
10.நாட்டு வருமானம் – வரையறு.

நாட்டு வருமானம் என்பது ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பாகும். பொதுவாக நாட்டு வருமானம் மொத்த நாட்டு உற்பத்தி (GNP) அல்லது நாட்டு வருமான ஈவு எனப்படுகிறது.

 

விரிவான விடையளி

1. நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு தொடர்புடைய பல்வேறு கருத்துகளை விவரி.

1. மொத்த நாட்டு உற்பத்தி (GNP)

  • மொத்த நாட்டு உற்பத்தி என்பது அந்த நாட்டு மக்களால் ஒரு வருடத்தில் (ஈட்டிய வருமானம்) உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடுகளின் (பண்டங்கள் + பணிகள்) மதிப்பைக் குறிக்கும். வெளிநாட்டு முதலீடு மூலம் ஈட்டிய இலாபமும் இதில் அடங்கும்.
GNP = C + I + G + (X – M) + NFIA
  • C – நுகர்வோர்
  • I – முதலீட்டாளர்
  • G – அரசு செலவுகள்
  • X – M- ஏற்றுமதி – இறக்குமதி
  • NFIA – வெளிநாட்டிலிருந்து ஈட்டப்பட்ட நிகர வருமானம்.

2. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)

  • ஒரு ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் உள்ள உற்பத்தி காரணிகளினால் உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடு (பண்டங்கள் + பணிகள்) களின் மொத்த மதிப்பே மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும்.

3. நிகர நாட்டு உற்பத்தி (NNP)

  • மொத்த நாட்டு உற்பத்தியிலிருந்து மூலதன தேய்மானத்தின் மதிப்பை நீக்கிய பின் கிடைக்கும் பண மதிப்பு நிகர நாட்டு உற்பத்தியாகும்.
நிகர நாட்டு உற்பத்தி (NNP) = மொத்த நாட்டு உற்பத்தி (GNP) – தேய்மானம்.

4. நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP)

  • நிகர உள்நாட்டு உற்பத்தி என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பகுதியாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து தேய்மானத்தைக் (தேய்மான செலவின் அளவு) கழித்து பின் கிடைப்பது நிகர உள்நாட்டு உற்பத்தியாகும்.
நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP) = மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) – தேய்மானம்.

5.  தலா வருமானம் (PCI)

  • தலா வருமானம் என்பது மக்களின்வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு கருவியாகும். நாட்டு வருமானத்தை மக்கள் தொகையில் வகுப்பதன் மூலம் தலா வருமானம் பெறப்படுகிறது.
தலா வருமானம் = நாட்டு வருமானம் / மக்கள் தொகை

6. தனிப்பட்ட வருமானம் (PI)

  • நேர்முக வரிவிதிப்பிற்கு முன் தனி நபர்கள் மற்றும் ஒரு நாட்டின் குடும்பங்களின் மூலம் அனைத்து ஆதாரங்களிலிருந்து பெறப்படுகின்ற மொத்த பண வருமானத்தை தனிப்பட்ட வருமானம் எனலாம்.

7. செலவிடத் தகுதியான வருமானம் (DI)

  • தனி நபர்கள் மற்றும் குடும்பங்களின் உண்மையான வருமானத்தில் நுகர்வுக்கு செலவிடப்படுகின்ற வருமானத்தை செலவிடத் தகுதியான வருமானம் எனப்படுகிறது.

 

2. இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை விளக்குக.

  • உலகிலுள்ள எழுதப்பட்ட, அனைத்து அரசியலமைப்புகளை விடவும் மிகவும் நீளமானது.
  • இதன் பெரும்பாலான கருத்துகள் பல்வேறு நாடுகளின் அரசியலமைப்புகளிலிருந்து பெறப்பட்டவை.
  • இது நெகிழாத்தன்மை கொண்டதாகவும், நெகிழும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.
  • கூட்டாட்சி முறை அரசாங்கத்தை (மத்திய, மாநில அரசுகள்) ஏற்படுத்துகிறது.
  • இந்தியாவைச் சமயச்சார்பற்ற நாடாக்குகிறது.
  • சுதந்திரமான நீதித்துறையை வழங்குகிறது.
  • உலகளாவிய வயது வந்தோர் வாக்குரிமையை அறிமுகப்படுத்தியதோடு 18 வயது நிரம்பிய குடிமக்கள் அனைவருக்கும் எந்த வித பாகுபாடுமின்றி வாக்குரிமையை வழங்குகிறது.
3. இமயமலையின் உட்பிரிவுகளையும் அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரி.

இந்தியாவின் பெரும் அரணாக உள்ள இமயமலையை மூன்று பெரும் உட்பிரிவுகளாக பிரிக்கலாம்.

  1. ட்ரான்ஸ் இமயமலைகள் (The Trans Himalayas or Western Himalayas)
  2. இமயமலைகள் (Himalayas or Central Himalayas)
  3. கிழக்கு இமயமலை / பூர்வாஞ்சல் குன்றுகள் (Eastern Himalayas or Purvanchal Hills)

1. ட்ரான்ஸ் இமயமலை (மேற்கு இமயமலைகள்)

  • இம்மலைகள் ஜம்மு-காஷ்மீர் மற்றும் திபெத் பீடபூமியில் அமைந்துள்ளது.
  • இதன் பரப்பளவு திபெத்தில் அதிகமாக இருப்பதால் இவை ’’திபெத்தியன் இமயமலை‘’ எனவும் அழைக்கப்படுகிறது.
  • இம்மலைகள் மேற்கு மற்றும் கிழக்கு எல்லைகளில் சுமார் 40 கி.மீ அகலத்துடனும் அதன் மையப்பகுதியில் 225 கி.மீ அகலத்துடன் காணப்படுகிறது.
  • இங்குள்ள முக்கியமான மலைத்தொடர்கள் சாஸ்கர், லடாக், கைலாஸ் மற்றும் காரகோரம் ஆகும்.

2. இமயமலை

  • இவை வடக்கு மலைகளின் பெரிய பகுதியாக அமைந்துள்ளது.
  • இது ஒரு இளம் மடிப்பு மலையாகும்.
  • இது பல மலைத்தொடர்களை உள்ளடக்கியது.

இவை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.

  1. உள் இமயமலைகள் / இமாத்ரி
  2. மத்திய இமயமலை / இமாச்சல்
  3. வெளி இமயமலை / சிவாலிக்

(i) உள் இமயமலை அல்லது இமாத்ரி (Greater Himalayas/Himadri)

  • உள் இமயமலை, மத்திய இமயமலைக்கு வடக்கே மிக உயர்ந்து செங்குத்தாக அமைந்துள்ளது.
  • இமயமலையில் மிக உயர்ந்த சிகரங்களில் பெரும்பலானவை இம்மலைத்தொடரில் அமைந்துள்ளன. அதில் முக்கியமானவை எவரெஸ்ட் (8848 மீ) மற்றும் கஞ்சன் ஜங்கா (8586 மீ) ஆகும்.
  • இம்மலையில் எப்போதும் நிரந்தரமாக பனிசூழ்ந்து காணப்படுவதால் கங்கோத்திரி, சியாச்சின் போன்ற பனியாறுகள் காணப்படுகின்றன.

(ii) மத்திய இமயமலைகள் அல்லது இமாச்சல் (Lesser Himalayas or Himachal)

  • இது இமய மலையின் மத்திய மலைத் தொடராகும்.
  • வெண்கற்பாறைகள், சுண்ணாம்புப் பாறைகள், மற்றும் மணற்பாறைகள் இத்தொடரில் காணப்படுகின்றன.
  • புகழ் பெற்ற கோடை வாழிடங்களான சிம்லா, முசெளரி, நைனிடால், அல்மோரா, ரானிகட் மற்றும் டார்ஜிலிங் போன்றவை இம்மலைத் தொடரில் அமைந்துள்ளன.

(iii) வெளி இமயமலை / சிவாலிக்

  • இது மிகவும் தொடர்ச்சியற்ற மலைத் தொடர்களாகும்.
  • குறுகலான நீண்ட பள்ளத்தாக்குகள், சிறிய இமயமலைக்கும் வெளிப்புற இமயமலைக்கும் இடையில் காணப்படுகின்றன.
  • இவை கிழக்கு பகுதியில் டூயர்ஸ் (Duars) எனவும் மேற்கு பகுதியில் டூன்கள் (Duns) எனவும் அழைக்கப்படுகிறது.
  • இப்பகுதிகள் குடியிருப்புகளின் வளர்ச்சிக்கு ஏற்றதாக உள்ளது.

3. பூர்வாஞ்சல் குன்றுகள்

  • இவை இமயமலையின் கிழக்கு கிளையாகும்.
  • இது வடகிழக்கு மாநிலங்களில் பரவியுள்ளது.
  • பெரும்பாலான குன்றுகள் மியான்மர் மற்றும் இந்திய எல்லைகளுக்கிடையே காணப்படுகின்றன.
  • மற்ற மலைகள் அல்லது குன்றுகள் இந்தியாவின் உட்பகுதிகளில் பரவியுள்ளன.
  • டாப்லா, அபோர், மிஸ்மி, பட்காய்பம், நாகா, மாணிப்பூர், மிக்கீர், காரோ, காசி மற்றும் ஜெயந்தியா குன்றுகள் அனைத்தும் ஒன்றிணைந்து பூர்வாஞ்சல் மலைகள் என்று அழைக்கப்படுகின்றது.

இமயமலையின் முக்கியத்துவம்

  • தென்மேற்கு பருவக்காற்றைத் தடுத்து வட இந்திய பகுதிக்கு கனமழையைக் கொடுக்கிறது.
  • இந்திய துணைக்கண்டத்திற்கு இயற்கை அரணாக அமைந்துள்ளது.
  • வற்றாத நதிகளின் பிறப்பிடமாக உள்ளது. (எ.கா) சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் பிற ஆறுகள்.
  • இயற்கை அழகின் காரணமாக வடக்கு மலைகள் சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாகத் திகழ்கிறது.
  • பல கோடைவாழிடங்களும், புனித தலங்களான அமர்நாத், கேதர்நாத், பத்ரிநாத் மற்றும் வைஷ்ணவிதேவி கோயில்களும் இம்மலைத் தொடரில் அமைந்துள்ளன.
  • வனப்பொருட்கள் சார்ந்த தொழிலகங்களுக்கு மூலப்பொருட்களை அளிக்கிறது.
  • மத்திய ஆசியாவிலிருந்து வீசும் கடும் குளிர்காற்றை தடுத்து இந்தியாவை குளிரிலிருந்து பாதுகாக்கிறது.
  • இமயமலை பல்லுயிர் மண்டலத்திற்கு பெயர் பெற்றவை.
4. முதல் உலகப்போருக்கான முக்கியக் காரணங்களை விவாதி

ஐரோப்பிய நாடுகளின் அணி சேர்க்கைகளும் எதிர் அணி சேர்க்கைகளும்

  • 1900இல் ஐரோப்பிய வல்லரசுகளில் ஐந்து அரசுகள், இரண்டு ஆயுதமேந்திய முகாம்களாகப் பிரிந்தன.
  • ஒரு முகாம் மையநாடுகளான ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி ஆகியவற்றைக் கொண்டிருந்தது.
  • இரண்டாவது முகாம் நேச நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய மூவரைக் கொண்ட மூவர் கூட்டு ஊருவாக்கப்பட்டது.

வன்முறை சார்ந்த தேசியம்

  • தேசப்பற்றின் வளர்ச்சியோடு “எனது நாடு சரியோ தவறோ நான் அதை ஆதரிப்பேன்” என்ற மனப்பாங்கும் வளர்ந்தது.
  • இங்கிலாந்தின் ஆரவாரமான நாட்டுப்பற்று (jingoism), பிரான்சின் அதி தீவிரப்பற்று (chauvinism), ஜெர்மனியின் வெறிகொண்ட நாட்டுப்பற்று (kultur) ஆகிய அனைத்தும் தீவிர தேசியமாக போர் வெடிப்பதற்கு தீர்மானமாக பங்காற்றியது.

ஜெர்மன் பேரரசின் ஆக்கிரமிப்பு மனப்பாங்கு

  • ஜெர்மன் பேரரசரான இரண்டாம் கெய்சர் வில்லியம் ஜெர்மனியே
    உலகத்தின் தலைவன் எனப் பிரகடனம் செய்தார்.
  • ஜெர்மனியின் கப்பற்படை விரிவுபடுத்தப்பட்டது .
  • இங்கிலாந்தும் கப்பற்படை விரிவாக்கப் போட்டியில் இறங்கவே இரு நாடுகளுக்குமிடையிலான பதற்றம் மேலும் அதிகரித்தது.

பிரான்ஸ் ஜெர்மனியோடு கொண்ட பகை

  • பிரான்சும் ஜெர்மனியும் பழைய பகைவர்களாவர்.
  • 1871இல் ஜெர்மனியால் தோற்கடிக்கப்பட்ட பிரான்ஸ் அல்சேஸ், லொரைன் பகுதிகளை ஜெர்மனியிடம் இழக்க நேரிட்டது
  • ஜெர்மன் பேரரசர் இரண்டாம்கெய்சர்வில்லியம்மொராக்கோ சுல்தானின் சுதந்திரத்தை அங்கீகரித்ததோடு மொராக்கோவின் எதிர்காலம் குறித்து முடிவு செய்யப் பன்னாட்டு மாநாடு ஒன்றைக் கூட்டும்படி கோரினார்.

பால்கன் பகுதியில் ஏகாதிபத்திய அரசியல் அதிகாரத்திற்கான வாய்ப்பு

  • 1908இல் துருக்கியில் ஒரு வலுவான, நவீனஅரசை உருவாக்கும் முயற்சியாக இளம்துருக்கியர் புரட்சி நடைபெற்றது. இது ஆஸ்திரியாவுக்கும் ரஷ்யாவிற்கும் பால்கன் பகுதிகளில் தங்கள் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் வாய்ப்பினை வழங்கியது.
  • ஆஸ்திரியா செர்பியாவின் மீது படையெடுக்கும்போது அதன் விளைவாக செர்பியாவிற்கு ரஷ்யா உதவுமானால் ஆஸ்திரியாவிற்கு ஆதரவாக நான் களமிறங்கும் என ஜெர்மனி அறிவித்தது.

பால்கன் போர்கள்

  • பால்கன் நாடுகள் 1912-ல் துருக்கியை தாக்கி தோற்கடித்தது.
  • 1913-ல் இலண்டன் உடன்படிக்கையின்படி அல்பேனியா நாடு உருவாக்கப்பட்டது.
  • மாசிடோனியாவை பிரித்துக்கொள்வதில் பல்கேரியா, செல்பியாவையும், கீரிஸ்சையும் தாக்கியது.
  • இரண்டாம் பால்கன் போரில் பல்கேரியா எளிதில் தோற்கடிக்கபட்டு புகாரேஸ்ட் உடன்படிக்கை உடன் முடிவடைந்தது.

உடனடிக் காரணம்

  • 1914 ஜூன் 28ஆம் நாள் ஆஸ்திரியப் பேரரசரின் மகனும் வாரிசுமான பிரான்ஸ் பெர்டினாண்டு, பிரின்ஸப் என்ற
    பாஸ்னிய செர்பியனால் கொலை செய்யப்பட்டார்.
  • ஆஸ்திரியா இதனை செர்பியாவைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பாக எண்ணியது.
  • செர்பியாவிற்கு ஆதரவாகத் தலையிட ரஷ்யா படைகளைத் திரட்டுகிறது என்னும் வதந்தியால் ஜெர்மனி முதல் தாக்குதலைத் ரஷ்யா மீது போர் தொடுத்தது.
 

வேறுபடுத்துக

 
1. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள்

மேற்குத் தொடர்ச்சி மலைகள்

  • இம்மலைகள் தீபகற்ப பீடபூமியின் மேற்கு விளிம்பு பகுதியில் காணப்படுகிறது.
  • மேற்கு கடற்கரைக்கு இணையாகச் செல்கிறது
  • தொடர்ச்சியான மலைகள்
  • இம்மலையின் வடபகுதி சயாத்ரி என்று அழைக்கப்படுகிறது.

கிழக்கு தொடர்ச்சி மலைகள்

  • கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தென்மேற்கு பகுதியிலிருந்து வடகிழக்கு நோக்கி நீண்டு தீபகற்ப பீடபூமியின் கிழக்கு விளிம்பு பகுதியில் அமைந்துள்ளது.
  • கிழக்கு கடற்கரைக்கு இணையாகச் செல்கிறது
  • தொடர்ச்சியற்ற மலைகள்
 
2. வானிலை மற்றும் காலநிலை.

வானிலை

  • வானிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள வளி மண்டலத்தின் தன்மையைக் குறிப்பதாகும்.
  • வெப்பம், அழுத்தம், காற்று, ஈரப்பதம் மற்றும் மழை ஆகியன வானிலையின் முக்கிய கூறுகள் ஆகும்.
  • மாறக்கூடியது

காலநிலை

  • காலநிலை என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியின் சுமார் 30-35 ஆண்டு சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.
  • அட்சப்பரவல், கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு, கடல் மட்டத்திலிருந்து உயரம், பருவக்காற்று, நிலத்தோற்றம், ஜெட் காற்றுகள் போன்றவை காலநிலையை பாதிக்கும் காரணிகள்
  • மாறாதது
 
 
 

காரணம் கண்டறிக

1. மேற்கு கடற்கரைச் சமவெளி குறுகலானது.

அரபிக்கடலுக்கும், மேற்குத்தொடர்ச்சி மலைக்கும் இடைப்பட்ட இடைவெளி குறைவாக உள்ளதால் மேற்கு கடற்கரைச் சமவெளி குறுகலானது.

 2.இமயமலைகள் மடிப்புமலைகள் என அழைக்கப்படுகின்றன.

இமயமலைகள் புவிமேலோட்டு பேரியக்க விசைகள் காரணமாக புவி மேலோடு மடிக்கப்பட்டு மடிப்புமலை உருவாகின. எனவே இமயமலைகள் மடிப்பு மலைகள் என அழைக்கப்படுகின்றன.

 

 

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்