Ad Code

Ticker

6/recent/ticker-posts

10th Social science 1st Revision test Book back one mark Question and answers

 வரலாறு 

அலகு - 1 

முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

I சரியான விடையைத் தேர்வு செய்யவும் 

1. முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை? *


அ) ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, உதுமானியர்

ஆ)ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, ரஷ்யா

இ) ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி

ஈ) ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி

2. பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந்தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது? *


அ) சீனா

ஆ) ஜப்பான்

இ) கொரியா

ஈ) மங்கோலியா

3. “ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம்” எனக் கூறியவர் யார்? *


அ) லெனின்

ஆ) மார்க்ஸ்

இ) சன்யாட் சென்

ஈ) மா சேதுங்

4. மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது? *


அ) ஆகாயப் போர்முறை

ஆ) பதுங்குக் குழிப் போர்முறை

இ) நீர்மூழ்கிக்கப்பல் போர்முறை

ஈ) கடற்படைப் போர்முறை

5. பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச்செயலாளர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? *


அ) பிரிட்டன்

ஆ) பிரான்ஸ்

இ) டச்சு

ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

6. பின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது? *


அ) ஜெர்மனி

ஆ) ரஷ்யா

இ) இத்தாலி

ஈ) பிரான்ஸ்

II சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

1. i) துருக்கியப் பேரரசு, பால்கனில் துருக்கியரல்லாத பல இனமக்களைக் கொண்டிருந்தது.

 ii) துருக்கி மையநாடுகள் பக்கம் நின்று போரிட்டது. 

iii) பிரிட்டன் துருக்கியைத் தாக்கி கான்ஸ்டாண்டி நோபிளைக் கைப்பற்றியது. 

iv) சூயஸ் கால்வாயைத் தாக்க துருக்கி மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. *


அ) i), ii) ஆகியன சரி

ஆ) i), iii) ஆகியன சரி

இ) iv) சரி

ஈ) i), ii), iv) ஆகியன சரி

2. கூற்று: ஜெர்மனியும் அமெரிக்காவும் மலிவான தொழிற்சாலைப் பொருள்களை உற்பத்தி செய்து இங்கிலாந்தின் சந்தையைக் கைப்பற்றின. காரணம்: இரு நாடுகளும் தங்கள் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்களை உற்பத்தி செய்தன. *

அ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் சரி.

ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல.

இ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் தவறு

ஈ) காரணம் சரி, ஆனால் கூற்று தவறு.

3. கூற்று: ஆப்பிரிக்காவில் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட முதற்கட்ட முயற்சிகள் ரத்தக்களரியான போர்களில் முடிந்தன. காரணம் : சொந்தநாட்டு மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது. அ) காரணம், கூற்று ஆகிய இரண்டும் சரி. ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல. இ) கூற்று, காரணம் இரண்டுமேதவறு. ஈ) காரணம் சரி ஆனால் கூற்று தவறு. *


அ) காரணம், கூற்று ஆகிய இரண்டும் சரி.

ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல.

இ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு.

ஈ) காரணம் சரி ஆனால் கூற்று தவறு.


பொருத்துக

பிரெஸ்ட் லிடோவஸ்க் உடன்படிக்கை. - ரஷியாவும் ஜெர்மனியும்

ஜிங்கோயிசம்- இங்கிலாந்து

கமால் பாட்சா- துருக்கி

எம்டன்- சென்னை

கண்ணாடி மாளிகை- வெர்செய்ல்ஸ் 


அலகு - 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

சரியான கூற்றைத் தேர்வு செய்யவும் 

1. கூற்று: தற்காப்புப் பொருளாதாரக் கொள்கையை முன்னிறுத்தியப் பொருளாதார தேசியம் எனும் புதிய அலையால் உலகவணிகம் பாதிக்கப்பட்டது. காரணம்: அமெரிக்கா, கடன்பட்ட நாடுகளுக்குப் பொருளாதார உதவி செய்ய விருப்பமில்லாமல் இருந்ததனால் இந்நிலை உண்டானது. *


அ) கூற்று, காரணம் இரண்டுமே சரி

ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல

இ) கூற்று, காரணம் ஆகிய இரண்டுமே தவறு

ஈ) காரணம் சரி ஆனால் கூற்றுக்குப் பொருந்தவில்லை.


புவியியல் அலகு – 1 இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

I சரியான விடையைத் தேர்வு 

1. இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல். *


அ) 2500

ஆ) 2933 கி.மீ

இ) 3214 கி.மீ

ஈ) 2814 கி.மீ

2. பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு *


அ) நர்மதா

ஆ) கோதாவரி

இ) கோசி

ஈ) தாமோதர்

3. மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி ___________ என அழைக்கப்படுகிறது. *


அ) கடற்கரை

ஆ) தீபகற்பம்

இ) தீவு

ஈ) நீர்ச்சந்தி

4. பாக் நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா _____________ ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது. *


அ) கோவா

ஆ) மேற்கு வங்காளம்

இ) இலங்கை

ஈ) மாலத்தீவு

5. தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம் ___________. 


அ) ஊட்டி

ஆ) ஆனை முடி

இ) கொடைக்கானல்

ஈ) ஜின்டா கடா

6. பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி ___________ *


அ) பாபர்

ஆ) தராய்

இ) பாங்கர்

ஈ) காதர்

7. பழவேற்காடு ஏரி ___________________ மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது. *


அ) மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா

ஆ) கர்நாடகா மற்றும் கேரளா

இ) ஒடிசா மற்றும் ஆந்திரப்பிரதேசம்

ஈ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம்


பொருத்துக

புதிய வண்டல் படிவுகள்-  காதர்

காட்வின் ஆஸ்டின் (K2)- இந்தியாவின் உயர்ந்த சிகரம்

சோழ மண்டலக் கடற்கரை-  தென்கிழக்கு கடற்கரைச் சமவெளி


அலகு – 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

1. மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி *


அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) பஞ்சாப்

ஈ) மத்தியப் பிரதேசம்

2. கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு காற்றுகள் உதவுகின்றன. *


அ) லூ

ஆ) நார்வெஸ்டர்ஸ்

இ) மாஞ்சாரல்

ஈ) ஜெட் காற்றோட்டம்

3. ஒரே அளவு மழைபெறும் இடங்களை இணைக்கும் கோடு ஆகும். *


அ) சமவெப்ப கோடுகள்

ஆ) சம மழைக்கோடுகள்

இ) சம அழுத்தக்கோடுகள்

ஈ) அட்சக் கோடுகள்

4. இந்தியாவின் காலநிலை ....................ஆக பெயரிடப்பட்டுள்ளது. *


அ) அயன மண்டல ஈரக்காலநிலை

ஆ) நிலநடுக்கோட்டுக் காலநிலை

இ) அயனமண்டல பருவக்காற்றுக் காலநிலை

ஈ) மித அயனமண்டலக் காலநிலை

சரியான விடையைத் தேர்வு செய்யவும்

1. கூற்று: இமய மலையானது ஒரு காலநிலை அரணாகச் செயல்படுகிறது. காரணம்: இமயமலை மத்திய ஆசியாவிலிருந்து வீசும் குளிர்க்காற்றை தடுத்து இந்தியத் துணைக்கண்டத்தை மிதவெப்பமாக வைத்திருக்கிறது. *


அ) A மற்றும் R இரண்டும் சரி, கூற்றுக்கான காரணம் சரி.

ஆ) A மற்றும் R இரண்டும் சரி, கூற்றுக்கான காரணம் தவறு.

இ) கூற்று சரி காரணம் தவறு.

ஈ) கூற்று தவறு காரணம் சரி

பொருந்தாத விடையைத் தேர்வு செய்க.

1. ஓதக்காடுகள் இதனைச் சுற்றி காணப்படுகிறது. *


அ) பாலைவனம்

ஆ) கங்கை பிரம்மபுத்ரா டெல்டா

இ) கோதாவரி டெல்டா

ஈ) மகாநதி டெல்டா

2. இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் காரணிகள் *


அ) அட்ச பரவல்

ஆ) உயரம்

இ) கடலிலிருந்து அமைந்துள்ள தூரம்

ஈ) மண்


குடிமையியல் அலகு – 1


 இந்திய அரசியலமைப்பு


I சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் 
1. கீழ்காணும் வரிசையில் ’முகவுரை’ பற்றிய சரியான தொடர் எது? *

அ) குடியரசு, ஜனநாயக, சமயச் சார்பற்ற, சமதர்ம, இறையாண்மை.
ஆ) இறையாண்மை, சமதர்ம, சமயச் சார்பற்ற, குடியரசு, ஜனநாயக
இ) இறையாண்மை, குடியரசு, சமயச் சார்பற்ற, சமதர்ம, ஜனநாயக.
ஈ) இறையாண்மை, சமதர்ம, சமயச் சார்பற்ற, ஜனநாயக, குடியரசு.
 
2. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது? *

அ) ஒரு முறை
ஆ) இரு முறை
இ) மூன்று முறை
ஈ) எப்பொழும் இல்லை
 
3. ஒரு வெளிநாட்டவர், கீழ்க்காணும் எதன் மூலம் இந்திய குடியுரிமை பெறமுடியும்? *

அ) வம்சாவளி
ஆ) பதிவு
இ) இயல்புரிமை
ஈ) மேற்கண்ட அனைத்தும்
 
4. மாறுபட்ட ஒன்றைக்கண்டுபிடி. *

அ) சமத்துவ உரிமை
ஆ) சுரண்டலுக்கெதிரான உரிமை
இ) சொத்துரிமை
ஈ) கல்வி மற்றும் கலாச்சார உரிமை
 
5. கீழ்க்காண்பவற்றில் ஒன்று, அடிப்படை உரிமையைப் பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை.

அ) கர்நாடகாவிலிருந்து, கேரளா பண்ணைகளில் வேலையாட்கள் பணிசெய்தல்
ஆ) கிறித்துவ சமயக்குழு, தொடர்ச்சியாக, பள்ளிகளை அமைத்தல்
இ) ஆண், பெண் இருபாலரும் அரசுப்பணிகளுக்கு சமஊதியம் பெறுதல்
ஈ) பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள் அவர்களது பிள்ளைகளுக்குச் செல்லுதல்
 
6. பின்வருவனவற்றுள் எந்தஉரிமை டாக்டர். B.R. அம்பேத்கர் அவர்களால் 'இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா' என விவரிக்கப்பட்டது? அ *

அ) சமய உரிமை
ஆ) சமத்துவ உரிமை
இ) அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
ஈ) சொத்துரிமை
 
7. அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்திவைக்கப்பட முடியும்? *

அ) உச்சநீதி மன்றம் விரும்பினால்
ஆ) பிரதம மந்திரியின் ஆணையினால்
இ) தேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின் ஆணையினால்
ஈ) மேற்கண்ட அனைத்தும்
 
8. நமது அடிப்படை கடமைகளை .......................இடமிருந்து பெற்றோம். *

அ) அமெரிக்க அரசியலமைப்பு
ஆ) கனடா அரசியலமைப்பு
இ) ரஷ்யா அரசியலமைப்பு
ஈ) ஐரிஷ் அரசியலமைப்பு
 
9. எந்த பிரிவின் கீழ் நிதிநிலை அவசரநிலையை அறிவிக்க முடியும்? அ *

அ) சட்டப்பிரிவு 352
ஆ) சட்டப்பிரிவு 356
இ) சட்டப்பிரிவு 360
ஈ) சட்டப்பிரிவு 368
 
10. எந்தக்குழுக்கள் / கமிஷன்கள் மத்திய-மாநில உறவுகள் பற்றி பரிந்துரை செய்தன? 
1. சர்க்காரியாகுழு 2. ராஜமன்னார் குழு 3. M.N. வெங்கடாசலையா குழு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு
 

அ) 1, 2 & 3
ஆ) 1 & 2
இ) 1 & 3
ஈ) 2 & 3

10. பொருத்துக *

குடியுரிமைச் சட்டம்- 1955
முகவுரை- ஜவகர்லால்நேரு
குறு அரசியலமைப்பு-  42வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் செம்மொழி-தமிழ்
தேசிய அவசரநிலை- 1962


அலகு – 2 நடுவண் அரசு


1. நடுவண் அரசின் அரசியலமைப்புத் தலைவர் ஆவார். *

அ) குடியரசுத் தலைவர்
ஆ) தலைமை நீதிபதி
இ) பிரதம அமைச்சர்
ஈ) அமைச்சர்கள் குழு

2. ஒரு மசோதாவை நிதிமசோதாவா அல்லது இதர மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர். *

அ) குடியரசுத் தலைவர்
ஆ) இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
இ) நாடாளுமன்ற விவகார அமைச்சர்
ஈ) லோக் சபாவின் சபாநாயகர்

3. அமைச்சர்கள் குழு ஒட்டு மொத்தமாக இதற்குப் பொறுப்புடையவர்களாவர். *

அ) குடியரசுத் தலைவர்
ஆ) மக்களவை
இ) பிரதமஅமைச்சர்
ஈ) மாநிலங்களவை

4. லோக்சபா தேர்தலில் போட்டியிடதேவையான குறைந்தபட்ச வயது *

அ) 18 வயது
ஆ) 21 வயது
இ) 25 வயது
ஈ) 30 வயது

5. இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்றவர்/ பெற்ற அமைப்பு. *

அ) குடியரசுத் தலைவர்
ஆ) பிரதமஅமைச்சர்
இ) மாநிலஅரசாங்கம்
ஈ) நாடாளுமன்றம்

6. கீழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்?

அ) சட்டப்பிரிவு 352
ஆ) சட்டப்பிரிவு 360
இ) சட்டப்பிரிவு 356
ஈ) சட்டப்பிரிவு 365

7. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளைநியமிப்பவர். *

அ) குடியரசுத் தலைவர்
ஆ) இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
இ) ஆளுநர்
ஈ) பிரதமஅமைச்சர்

III சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்
1. (i) மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 250. 
(ii) இலக்கியம், அறிவியல், கலை, சமூகசேவை ஆகிய துறைகளில் சிறந்த அறிவு மற்றும் அனுபவம் பெற்ற 12 நபர்களை மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். 
(iii) மாநிலங்களவை உறுப்பினராவதற்கு 30 வயதுக்குக் குறைவாக இருத்தல் கூடாது. 
(iv) மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். *

அ) ii & iv சரியானவை
ஆ) iii & iv சரியானவை
இ) i & iv சரியானவை
ஈ) i, ii & iii சரியானவை

2. (i) உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62. 
(ii) நடுவண் அரசின் மூன்றாவது அங்கம் நீதிதுறை ஆகும். 
(iii) அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்களுக்கு உட்பட்டது. 
(iv) உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும். *

அ) ii & iv சரியானவை
ஆ) iii & iv சரியானவை
இ) i & iv சரியானவை
ஈ) i & ii சரியானவை

பொருத்துக *

சட்டப்பிரிவு 53- குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரங்கள்
சட்டப்பிரிவு 63 - துணைக் குடியரசுத் தலைவரின் அலுவலகம்
சட்டப்பிரிவு 356- மாநில நெருக்கடிநிலை
சட்டப்பிரிவு 76 - இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்அலுவலகம்
சட்டப்பிரிவு 352 - உள்நாட்டு நெருக்கடிநிலை

பொருளியல் அலகு – 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

 
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் 
1. GNP யின் சமம் *

அ) பணவீக்கத்திற்காக சரி செய்யப்பட்ட NNP
ஆ) பணவீக்கத்திற்காக சரி செய்யப்பட்ட GDP
இ) GDP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்
ஈ) NNP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்
 
2. நாட்டு வருமானம் அளவிடுவது *

அ) பணத்தின் மொத்த மதிப்பு
ஆ) உற்பத்தியாளர் பண்டத்தின் மொத்த மதிப்பு
இ) நுகர்வு பண்டத்தின் மொத்த மதிப்பு
ஈ) பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்தமதிப்பு
 
3. முதன்மைதுறை இதனை உள்ளடக்கியது *

அ) வேளாண்மை
ஆ) தானியங்கிகள்
இ) வர்த்தகம்
ஈ) வங்கி
 
4. ________ முறையில் ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பை கூட்டும்போது, இறுதி பண்டத்தின் மதிப்பை கணக்கிடலாம். *

அ) செலவு முறை
ஆ) மதிப்பு கூட்டு முறை
இ) வருமானமுறை
ஈ) நாட்டு வருமானம்
 
5. GDP யில் எந்த துறை மூலம் அதிகமான வேலைவாய்ப்பு ஏற்படுகிறது? *

ஆ) தொழில்துறை
அ) வேளாண் துறை
இ) பணிகள் துறை
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
 
6. பணிகள் துறையில் நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதல் 2018 – 19 இல் ________ லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. *

இ) 80.07
ஈ) 98.29
ஆ) 92.26
அ) 91.06
 
7. வேளாண் பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா ________ அதிகமாக உற்பத்தியாளர் ஆகும். *

அ) 1 வது
இ) 4 வது
ஈ) 2வது
ஆ) 3 வது

பொருத்துக

மின்சாரம் / எரிவாயு மற்றும் நீர் - தொழில்துறை
தலா வருமானம் - நாட்டு வருமானம் / மக்கள் தொகை
C+I+G+(X-M) - மொத்த உள்நாட்டு உற்பத்தி
GST - பண்டம் மற்றும் பணிகள் மீதான வரி
விலைக் கொள்கை - வேளாண்மை



முதல் திருப்புதல் தேர்வு இந்திய வரைபடம் ஆன்லைன் தேர்வு- click here




கருத்துரையிடுக

0 கருத்துகள்