Ad Code

Ticker

6/recent/ticker-posts

பாறை ஓவியம் மற்றும் குகைக்கலை|book pdf

 


குரங்கிலிருந்து பிறந்த மனிதன் காடுகளில் வாழ்ந்தான். தான் இருந்ததற்கான அடையாளமாய் எழுத்து, சிற்பம்,ஓவியம் இப்படி ஏதாவது ஒன்றை பாறை, குன்று போல, கிடைத்த இடங்களில் வரைந்து வைத்துவிட்டுப் போனான்.

அப்படியான குகை ஓவியங்களில் மிகவும் பழைமையானது ஸ்பெயின் நாட்டில் கான்டபிரியா (Cantabria) என்ற ஊரில் உள்ள குகை ஓவியங்கள்தான். இவை சுமார் 40,000 வருடங்களுக்கு முன் வரையப்பட்டது.
அற்புதமாக வரையப்பட்டுள்ள அந்த ஓவியங்களில் மலையாடு, மான், பசு போன்ற விலங்குகள் இடம் பெற்றிருக்கின்றன. சுமார் இருநூறுக்கும் அதிகமான இடங்களில் அந்த ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இப்படி ஓர் இடம் இருப்பதே உலகிற்கு கி.பி. 1903ல்தான் தெரியவந்தது.
இந்த ஓவியங்களைப் பார்ப்பதற்காகச் சென்ற, உலகப் புகழ் பெற்ற ஓவியரான பிகாசோ, ''இத்தனை ஆண்டுகளில் நான் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை'' என்று வியந்து கூறினார். அவரது வார்த்தைகள் குகை ஓவியங்களின் சிறப்பை நமக்கு உணர்த்துகின்றன.
இந்தியாவில் அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல் போன்ற இடங்களில் குகை ஓவியங்கள் இருக்கின்றன. இந்திய ஓவியங்கள் 15,000 முதல் 30,000 ஆயிரம் வருடங்கள்வரை பழைமையானவை.
சித்தன்ன வாசல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள ஓவியங்கள் பாண்டியர் காலத்தைச் சார்ந்தவை . ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் (கி.பி.815- * 862) என்ற அரசரின் கல்வெட்டின் மூலம் இதனை அறியலாம்.
மீன், வாத்து, தாமரைப் பூக்கள் ஆகியவற்றின் நடுவே ஒரு மனிதர் குளத்தில் இருப்பது, நடனமாடும் பெண்கள் என சித்தன்ன வாசலில் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.
சுண்ணாம்புச் சாந்து மற்றும் காய்கறிச் சாறு ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
எழுத்து, ஓவியம், சிற்பங்கள்தான் நம் முன்னோரை நமக்கு அடையாளம் காட்டுகின்றன.


பாறை ஓவியம் மற்றும் குகைக்கலை book pdf- click here

கருத்துரையிடுக

0 கருத்துகள்