அலகுத்தேர்வு –2
10 ஆம் வகுப்பு – சமூக அறிவியல் மதிப்பெண்கள் 50 - நேரம்:1.30 மணி
I. சரியான விடையைத் தேர்வு செய்க 5x1=5
1) மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவை பெரும்பகுதி_______
அ)தமிழ்நாடு ஆ) கேரளா
இ)பஞ்சாப் ஈ)மத்திய பிரதேசம்
2) ஒரே அளவு மழை பெறும் இடங்களை இணைக்கும் கோடு______ஆகும்
அ)சமவெப்ப கோடுகள்
ஆ)சம மழைகோடுகள்
இ)சம அழுத்தக் கோடுகள் ஈ)அட்சக்கோடுகள்
3)லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது____
அ)18 வயது ஆ) 21 வயது
இ)25 வயது ஈ)30 வயது
4)உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர்____
அ)குடியரசுத் தலைவர்
ஆ)ஆளுநர்
இ)பிரதம அமைச்சர்
ஈ)இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர்
5) இந்தியா எப்போது டங்கள் திட்டத்தில் கையெழுத்திட்டது_____
அ)1984 ஆ)1976 இ)1950 ஈ) 1994
II. கோடிட்ட இடங்களை நிரப்புக: 2x1=2
6)இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலன் ______ஆகும்
7)) ஒரு நல்ல பொருளாதாரம்______ன் விரிவான வளர்ச்சிக்காக அறிமுகப்படுத்தப்படுகிறது
II. பொருத்துக: 3x1=3
8) வியட்நாம் தேசிய வாதிகள் கட்சி - அக்டோபர்-டிசம்பர்
9) வடகிழக்கு பருவக்காற்று-பிரிவு 356
10) மாநில அவசர நிலை-1927
IV. ஏதேனும் ஐந்திற்கு மட்டும்ம் சுருக்கமாக விடையளிக்க: 5x2=10
11) ஒட்டாவா பொருளாதார உச்சி மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கவும்?
12) பொருளாதார பெருமந்தம் இந்திய வேளாண்மையின் மீது எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தியது?
13) பருவமழை வெடிப்பு என்றால் என்ன?
14) ஜெட் காற்றோட்டங்கள் என்றால் என்ன?
15) நிதி மசோதா குறிப்பு வரைக?
16) உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை?
17) உலகமயமாக்கல் என்றால் என்ன?
V. ஏதேனும் மூன்று வினாவிற்கு மட்டும் விடையளி 3x5=15
18)அ)வேறுபடுத்தும்
I) வானிலை மற்றும் காலநிலை
II) வடகிழக்குப் பருவக்காற்று மற்றும் தென்மேற்கு பருவக்காற்று
ஆ) காரணம் கூறுக
I) மேற்கு கடற்கரை சமவெளி குறுகலானது.
19)உலகப்போருக்கு இடைப்பட்ட காலத்தில் (1919-39)இந்தியாவில் காலனிய நீக்க செயல்பாடுகள் எவ்வாறு நடைபெற்றன என்பதை குறித்து வரிசையாக விவரிக்க முயற்சி செய்யவும்?
20) தென்மேற்கு பருவக்காற்று குறித்து எழுதுக?
21)இந்திய குடியரசுத் தலைவரின் சட்டமன்ற மற்றும் நீதி அதிகாரங்களை விவரி?
22)உலகமயமாக்கலின் சவால்களை எழுதுக?
23)காலக்கோடு வரைக . 5x1=5
1920 முதல் 1940 வரையிலான ஐந்து முக்கிய உலக நிகழ்வுகளை காலக்கோட்டில் எழுதுக;-
24) உலக வரைபடத்தில் குறிக்கவும் 5×1=5
மாஸ்கோ, நாகசாகி, ருமேனியா, போலந்து, பெல்ஜியம்
25) இந்திய வரைபடத்தில் குறிக்கவும் 5×1=5
தென்மேற்கு பருவக்காற்று வீசும் திசை, மலைக்காடுகள், குறைவான மழை பெறும் பகுதி, அதிக மழை பெறும் பகுதி, வடகிழக்கு பருவக்காற்று வீசும் திசை.
0 கருத்துகள்