Ad Code

Ticker

6/recent/ticker-posts

பென்சன் உயர்வு

 *65 வயதில் இருந்து பென்சன் உயர்வு வேண்டும் - பாராளுமன்ற கமிட்டி பரிந்துரை.*



பாரளுமன்ற நிலைக்குழு ஓய்வூதியர்களுக்கான நலன்களைப் பற்றி பல முடிவுகளைப் பரிந்துரைத்துள்ளது.


1.ஓய்வூதியர்களின் குறைகள்  தீர்க்கப் பாடுவதில் காலதாமதம் நிகழ்வது ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களின் குறைகள் தீர்க்க என்றே கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அமைக்கப் படும் சமூக தணிக்கை குழு, ஓய்வூதியர்கள் எந்த பிரச்சினைகளில் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள், எந்தெந்தப் பகுதிகளில் பாதிக்கப் படுகிறார்கள் என்பதை எல்லாம் தீர்மானித்து, தீர்வுகள் காண வேண்டும்.


2. ஓய்வூதியர்களின் அடிப்படை பென்சன் 5 வருடங்களுக்கு ஒரு முறை உயர்த்தப்பட வேண்டும் என்ற அவர்களின் சங்கங்களின் வேண்டுகோளை கமிட்டி ஏற்கிறது. 

65 வயதில் 5 %

70 வயதில் 10%

75 வயதில் 15%

80 வயதில் 20 %

உயர்வு தரப்படலாம் என்று குழு பரிந்துரைக்கிறது. 


3. ஓய்வூதியர்களின் நிறைவேறா குறைகள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. இவற்றை உடனுக்குடன் தீர்ப்பதற்கான முயற்சிகள், குழு அமைத்துத் தீர்க்க முயலுதல் போன்றவை அதிகமாக்கப்பட வேண்டும். 


4.CPENGRAMS இணையதளத்தில் பாராளுமன்ற நிலைக்குழுவின், ஓய்வூதியர்களுக்கான பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன. 


4. இந்த இணையதளத்தில் ஓய்வூதியர்கள் தங்கள் குறைகளை ஆன்லைனில் பதிவு செய்யலாம். கடிதம் மூலமும் தெரிவிக்கலாம். 


5.தற்போது அமுலில் உள்ள, அடிப்படை ஓய்வூதித்தின் உயர்வுகள் விகிதத்தை, 

80 வயதானால் 20%

85 வயதானால் 30%

90 வயதானால் 40 %

95 வயதானால் 50% 

100 வயதானால் 100%


என்பதை ஏற்கிறது. அதே சமயம் ஓய்வூதியர்களின் வாழ்வு நிலை பேணப்படவேண்டும் என்பதில் அக்கறையும் கொண்டுள்ளது. வளர்ந்து வரும் குறு குடும்பங்கள், வெளிநாடுகளில் வசிக்க நேரும் இளைய தலைமுறை போன்றவை, அவர்களின் தன்மையையும், சார்பில்லாத வாழ்வியல் முறைகளையும் ஏற்படுத்தியுள்ளது. 

2050 ல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை உயரும் என்பது புள்ளிவிவரங்கள் கூறும் கணக்கு. 


6.இப்படிப்பட்ட சூழ்நிலைகளில், ஓய்வூதியர்கள் மனம் நிறைந்த வாழ்வை வாழ, ஒருங்கிணைக்கப்பட்ட, மேன்மைபடுத்தப்பட்ட பென்சன் விகிதங்களை அனுமதிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அவர்களுக்கு தைரியத்தையும், தனித்து வாழும் ஆற்றலையும் ஓய்வூதியம் மட்டுமே தரும். 


7. மேற்கண்ட முடிவுகளின் படி, சங்கங்களின் நீண்ட நாள் வேண்டுகோளுக்கு இணங்க, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அடிப்படை ஓய்வூதியம் மாற்றப்பட, இக்கமிட்டி பரிந்துரைக்கிறது. 65 வயதில் 5% என்று ஆரம்பிக்கலாம். 


8. இதை ஓய்வூதியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான அமைச்சகம் கணக்கில் கொண்டு, விரைவில் சாதகமான உத்தரவுகளை வெளியிட, இக்குழு ஆணையிடுகிறது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்