தமிழகத்தில் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2021-22-ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் உயர்கல்வி படிப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
பள்ளிப் படிப்பு வரையிலான கல்வி உதவித்தொகை பெற நவ.15-ம் தேதி வரையிலும், உயர்கல்விக்கான உதவித் தொகைக்கு நவ.30-ம் தேதி வரையிலும்
www.scholarships.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
0 கருத்துகள்