சமூக அறிவியல்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 12
வினாக்களும் விடைகளும்
மதிப்பீடு
1. ஸ்ரீநகரையும், கார்கிலையும் இணைக்கும் கணவாய் ------
விடை : ஜொஷிலா
2. பன்னாட்டு வணிக முனையங்களாகத் திகழ்ந்த கேரளக் கடற்கரைத் துறைமுகம்
விடை: கொச்சி
3. இந்தியாவின் மேற்குக் கடந்கரைக்கு வந்த ஐரோப்பியர் -------
விடை : போர்ச்சுகீசியர்கள்
4. கூற்று: கிழக்கே சீனா முதல் மேற்கே ஆப்பிரிக்கா வரை நீண்டிருந்த கடல் வணிகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்தியா இருந்தது.
காரணம்: இந்தியாவின் நிலவியல் அமைப்பு இந்தியப் பெருங்கடலின் மையத்தில் அமைந்துள்ளது.
அ) கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
ஆ) கூற்று தவறு. காரணம் சரி
இ) கூற்றும் காரணமும் தவறானவை
ஈ) கூற்று சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.
விடை : அ ) கூற்று சரி.காரணம் கூற்றை விளக்குகிறது.
5. சிந்தித்து விடையளிக்கவும்.
i) அனைத்துப் பகுதியிலுமான கடல் வணிகத்தை போர்ச்சுகீசியர்களால் கட்டுப்படுத்த முடிந்தது எவ்வாறு?
போர்ச்சுக்கல் இளவரசர் ஹென்றி கடற்பயணங்களுக்கான அடித்தளத்தை உருவாக்கினார்.
கடற்பயணப் பள்ளியை நிறுவினார்.
* ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரையில் வர்த்தகச் சாவடிகள் நிறுவினார்.
* நிலநடுக்கோட்டை முதலில் கடந்து பயணித்தனர்.
* இந்தியாவிற்கான கடல்வழிப் பயணத்தை மேற்கொண்டனர்.
* கடல்வழிக் கண்டுபிடிப்பின் மூலம் கிழக்கில் போர்ச்சுகீசியப் பேரரசின் அடித்தளம் அமைக்கப்பட்டது.
ii) உயர்சிந்தனை வினா-
தற்கால இந்தியாவில் வணிகத்திற்கு துறைமுகங்களின்பங்கினையும் துறைமுகங்களின் செயல்பாட்டினையும் விவாதித்து எழுதுக.
* தற்கால இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு துறைமுகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
* மலிவான போக்குவரத்தாக உள்ளதால் மக்கள் அதிக அளவில் வணிகத்திற்கு இதைப் பயன்படுத்துகின்றனர்.
* பல நாடுகளுடனான வணிகத்திற்கு வழி வகுக்கிறது.
0 கருத்துகள்