Ad Code

Ticker

6/recent/ticker-posts

science project in tamil

 


காற்றில்  மிதக்கும்  பந்து

காற்றின் வேகம் எப்படி விமானத்தை பறக்க வைக்கிறது? இதைப் பற்றிதான் இப்போது எளிய பரிசோதனையில் கண்டறியலாம்.

தேவைப்படும் பொருள்கள்

1)ஒரு சிறிய புனல்

2) டேபிள் டென்னிஸ் பந்து

செய்முறை

புனலை தலைகீழாகப் பிடித்துக் கொள்ளுங்கள். பந்தை புனலின் உள்ளே அடியில் பிடித்துக் கொள்ளவும். அதை ஒரு விரலால் அழுத்தி நிறுத்தவும். புனல் துவாரத்தின் வழியே ஊதுங்கள். இப்பொழுது ஊதிக்கொண்டே உங்கள் விரலையும் பந்திலிருந்து எடுத்து விடுங்கள்.என்ன நடக்கிறது?

இதுதான் நடக்கிறது 

டென்னிஸ் பந்து தானாகவே புனலுக்குள் மிதக்கிறது.

விஞ்ஞான உண்மை

வேகமாக காற்று பந்தின் மேல் அழுத்தும் போது அங்கே குறைந்த காற்றழுத்தம் உண்டாகிறது. பந்தின்  மேற்புறத்தில் வீசும் காற்றுழுத்தம் பந்தின் அடிப்பாகத்தில் உள்ள அழுத்தத்தை விட குறைவாக உள்ளது. அதனால் பந்து தானாக உந்தி மேலே எழும்புகிறது. இந்த கொள்கையினால்தான் விமானமும் பறக்கிறது. விமான இறக்கைகளின் மேல் காற்று வேகமாக வீசப்படும் பொழுது அவற்றின் கீழே காற்று குறைவாகவே உள்ளது. அதனால் அழுத்தம் அதிகமாகி அது விமானத்தை உயர எழுப்பி விடுகிறது. இப்படித்தான் விமானமும் மேலே உந்தித் தள்ளப்பட்டு உயரப் பறக்கிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்