Ad Code

Ticker

6/recent/ticker-posts

இரும்பை கண்டுபிடித்தவன் தமிழன்

 


 இரும்பை கண்டுபிடித்தவர் யார் என கேட்டால் விடையாக Henry Bessmer, Engaland - 1856.என்று தானே சொல்வோம் ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்துள்ள முதுமக்கள் தாழி, எலும்பு கூடுகள், இரும்பு மற்றும் பித்தளை பொருட்கள், கலைப்பொருட்கள், ஆயுதங்கள், தங்க ஆபரணங்கள் போன்றவை கிறிஸ்து பிறப்பிற்கு முந்தைய காலத்தை சேர்ந்தவை. அதில் ஒரு பொருளின் (AGE) அகவை கி.மு.905, மற்றொரு பொருளின் அகவை கி.மு.791 என்றும் தெரியவந்துள்ளது. அதாவது கி.மு 10 – ஆம் நூற்றாண்டு மற்றும் கி.மு.8 – ஆம் நூற்றாண்டு என்கிறது (CARBON -14. TEST) ஆய்வறிக்கை. கி.மு. 8 - ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழன் நாகரீகத்தோடு வாழ்ந்திருகின்றான். உலோக பொருட்களையெல்லாம் கையாண்டு இருக்கின்றான். அதிலும் குறிப்பாக ‘இரும்பு’ அவன் வாழ்வியலோடு ஒன்றர கலந்திருக்கிறது என்பதெல்லாம் நமக்கு வியப்பான செய்திகள். 



 ‘இரும்பு வடித்தன்ன கருங்கைக் கானவன்’ ‘இரும்பு வடித்தன்ன மடியா மென்தோல் கருங்கை வினைஞர் காதலம் சிறாஅர்.’ - என பழந்தமிழர்களுக்கும் இரும்புக்குமான உறவை எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் பறைச்சாற்றுகிறது. ‘அதியமான் நெடுமான் அஞ்சி’ அவரது தலைநகர் - தகடூர். இரும்பை வெட்டியெடுத்து அதை தகடாக்கும் தொழில் செய்யும் ஊர் என்பதால் அதற்கு தகடூர் என்று பெயர். இரும்பு வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த அதியமான், கடல் கடந்து பல்வேறு தேசங்களில் தனது இரும்பு வணிகத்தை நிலை நாட்டினார். அதிலொன்று துருக்கி நாடு. உருக்கி என்பது தான் துருக்கி என்று விளங்கியிருக்க கூடும். அந்த துருக்கியில் இன்றும் அதியமான் பெயரில் நகரம் இருக்கிறது. ஆனால், பதினெட்டாம் நூற்றாண்டின் பாதியில் வந்த அந்த வெள்ளக்கார வெண்ணை தான் இரும்பை கண்டுப்பிடித்தான் என்று திரித்து எழுதப்படுகிறது வரலாறு. ஆதிச்சநல்லூர் வரலாறு மட்டுமல்ல ; ஆதிதமிழர்களின் வரலாறுகளிலும் இந்த திரிபுவாத கும்பலில் கைங்கர்யம் நிறைய உண்டெனும் புரிதல் ப்ரியனுக்கு உண்டு. தாழி பானை ஓடுகளில் காணப்படும் எழுத்துக் கீறல்களெல்லாம் விட்டுத்தள்ளுங்கள், இந்த தாளிப்பனைகள் பெற்றெடுத்த ஓலைச்சுவடிகளில் உழுத எழுத்தாணி ஒன்றுபோதுமே, தமிழர் இருப்பின் வரலாற்றுக்கு சாட்சியாக, இரும்பின் வரலாற்றுக்கு சாட்சியாக. ரிக் வேதத்தின் உண்மையான பெயரே உருக்கு வேதம் என்பது தான். அதாவது உலோகங்களை உருக்கும் தொழில் நுட்ப ரகசியம் தான். ஆதிச்சநல்லூர் என்கிற ஆதி ‘எச்ச’ நல்லூர் மட்டுமல்ல; அதையும் தாண்டி, நமது கவனத்தை திருவள்ளூர் மாவட்டம் வடமதுரை மீதும் வைத்தாக வேண்டியது வரலாற்றின் தேவையாகும். பலநூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பழைய கற்காலக் கல் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டது அங்குதான். ....


கருத்துரையிடுக

0 கருத்துகள்