இயற்கை விவசாயம் ரொம்ப எளிமையானது சூரியனின் கதிர்கள் நேரடியாக நிலத்தில் படாத வண்ணம் எப்பொழுதும் மண்ணில் இலை தழை மூடாக்கு ஒரு குறிப்பிட்ட அடர்த்தியில் இருந்தால் போதும் . மண்ணின் வெப்பநிலை குறைந்து நுண்சூழல் ஏற்ப்படும்.இச்சூழலில் பலவகையான பேருயிர்களும், நுண்ணுயிர்களும் சேர்ந்து மூடாக்கில் உள்ள இலை தழைகளை சிதைத்து .இலை மக்கு உருவாகும்.இதையே மக்கு சத்து என்கிறோம்.இந்த மக்கு சத்து அதிகரிக்கும் போது மண்ணில் அங்கக கரிமம் அதிகமாகும்.
அங்கக கரிமத்தை நாம் அளவிடும் போது மண்ணில் எவ்வளவு மக்கு சத்து உள்ளது என்பதை அறியமுடியும்.மண்ணில் மக்கு சத்து எந்த அளவு உள்ளதோ அந்த அளவிற்கு அதை வளமான மண் என்கின்றோம்.வளமான மண்ணானது பயிர்களுக்குத் தேவையான பேரூட்டம் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களை மண்ணில் உள்ள ஈரப்பதம் ,இலை மக்கு, ,நுண்உயிர்கள் மூலமாக வேர்களுக்கு கொடுக்கும்.மக்கு உருவாவதை வேகப்படுத்தவே நாட்டு மாட்டு சாணம் மற்றும் கோமியம் பயன் படுத்துகின்றோம். ஏனெனில் இதில் கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் உள்ளன.
மூடாக்கை மட்டும் நாம் பராமரித்து வந்தோம் என்றாள் மண்ணில் நுண்ணுயிர் பெருக்கம் அதிகமாகி மக்கு உருவாவது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.இந்த சுழற்சி தொடர்ந்து நடக்கும் போது.இடுபொருள் செலவு பூஜ்ஜியமாகும் .இதைநோக்கி நகர்வதே இயற்கை விவசாயத்தின் வெற்றி பாதையாகும்.இதுதான் காடுகளில் இயல்பாக நடக்கின்றன.இப்பொழுது மூடாக்கின் அவசியம் நமக்கு புரிகிறது அல்லவா.மூடாக்கு போடுவதற்கு இலை தழைகள் அல்லது மக்கக்கூடிய ஏதாவது ஒரு பொருள் வேண்டும். மூடாக்காக பயன்படுத்தும் பொருளை வெளியில் இருந்து கொண்டுவந்தால் பணம் செலவாகும்.எனவே அதை நிலத்திலே தயார் செய்வது நல்லது.
மூடாக்கு செய்வதற்காக நடப்படும் பயிரானது கவாத்து செய்தால் உடனே வளரக் கூடியதாகவும் , அடிக்கடி கவாத்து செய்வதால் இறந்து விடாமலும் இருக்க வேண்டும். மேலும் அதிக தழைகளை கொடுக்கக் கூடிய தாவரமாகவும் இருக்க வேண்டும்.இதற்கு ஏற்ற முக்கியமான மரம் கிளைரிசிடியா.இதில் இன்னொரு சிறப்பு . கிளரிசிடியா என்பது ஒரு லெக்யூம் ( *Legume*) குடும்பத்தை சேர்ந்த தாவரம் இந்த குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்கள் காற்றிலுள்ள தழைச்சத்தை அவற்றின் வேர் முடிச்சுகளில் சேமித்து மண்ணில் நிலை நிறுத்தும் சக்தி கொண்டவை.எனவே பயிர்களுக்கு தேவையான தழை சத்தை போதுமான அளவிற்கு உருவாக்க கிளைரிசிடியா மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கிளைரிசெடியா வளமான மண் உருவாவதற்கு இரண்டு வகைகளில் உதவுகிறது. ஒன்று இலை தழைகள் மூடாக்காக பயன்படுகின்றது .இதில் பயிர் வளர்ச்சிக்கு மிகவும் தேவையான கார்பன் நைட்ரஜன் இரண்டும் உள்ளது. மேலும் வேர்கள் வழியாகவும் தழைச்சத்தை அளிக்கின்றது.கிளரிசெடியா வெப்பமண்டல தாவரம் எனவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வளரும் தன்மையுடையது.மேலும் இதன் வாசனைக்கு எந்த பூச்சிகளும் வருவதில்லை.வருடம் முழுவதும் பசுமையான இலைகளை வழங்குகின்றது.கிளைரிசெடியாவை நெல் விவசாயம் செய்யும் வயல்களில் வரப்புகளிலும் மற்ற தோட்டக்கலை பயிர்களில் குறிப்பிட்ட இடைவெளியில் நிலம் முழுவதும் நடவு செய்ய முடியும்.அதுமட்டுமல்லாமல் கிளைரிசெடியா இலைகளில் போதுமான அளவு ஊட்டச்சத்துகள் உள்ளன .குறிப்பாக புரதசத்து அதிகமாக உள்ளது. இதன் இலைகளை கால்நடைகளுக்குத் தீவனமாக கொடுக்கும்பொழுது அவற்றின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.இன்னொறு உபயோகமான தகவல் *கிளைரிசெடியா* என்றால் லத்தீன் மொழியில் *எலி கொல்லி* ( *Mouse killer*) என்பது பொருள்.இதன் *விதை* மற்றும் *பட்டைகள்* எலிபாஷானமாக பயன்படுகின்றது.மண்ணை வளமாக்கி நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்ய ,விவசாயிகள் லட்சாதிபதியாக
0 கருத்துகள்