Ad Code

Ticker

6/recent/ticker-posts

ஆரஞ்சு தோல் பூச்சிக்கொல்லி


மலர் சாகுபடியைப் பொருத்தவரை, பூச்சிகள் தொல்லைதான் மிகவும் சவாலானது. மற்றொரு பிரச்னை பூக்கள் பூக்காதிருத்தல்.இந்த 2 பிரச்னைகளுக்கும் தீர்வு காண, சந்தையில் கிடைக்கும் பொருட்களைவிட, நாம் சாப்பிட்டுவிட்டுத் தூக்கி எறியும் ஆரஞ்சுத் தோல்கள் மட்டுமே போதும். பூச்சிகளுக்கு குட்பை சொல்வதுடன், பூக்காதச் செடிகளிலும் மலர்களைப் பூத்துக்குலுங்க வைக்க முடியும்.

ஆரஞ்சுப்பழத்தோல் பூச்சிக்கொல்லி (Orange peel insecticide)

செடிகளில் ஏற்படும் பூக்கள் பூக்காமைப் பிரச்னை தீர உதவும் ஆரஞ்சுப்பழத்தோல் பூச்சிக்கொல்லியைத் தயாரிக்க குறைந்த அளவு செலவு செய்தாலே போதும்.மிகக் குறைந்த நேரத்தில் இதனைத் தயாரிக்க முடியும்.ஆரஞ்சு தோலில் ஆயிரம் நன்மைகள் அடங்கியுள்ளன. இது தெரியாமல் நாம் அதனைத் தூக்கி எறிகிறோம்.இந்த தோல், தாவரங்களில் காணப்படும் பூச்சிகளைத் தடுக்கவும், அதனை விரைவாகப் பூக்கச் செய்யவும் போதுமானது. நம்மில் பெரும்பாலோருக்கு இது தெரியாது என்பது தான் உண்மை.


ஆரஞ்சுத் தோலின் பயன்கள் (The benefits of orange peel)

இந்தத் தோல்களை சிறுசிறுத் துண்டுகளாக வெட்டிச் செடிகளுக்கு உரமாகப் போட்டால், அதிலிருந்து வெளியேறும் வாசனை, அஃபிட்ஸ் மற்றும் எறும்புகள் போன்ற பல பூச்சிகளை விரட்டியடித்துவிடும்.ஆரஞ்சு தோலில் காணப்படும் லிமோனீன், பூச்சியின் உடலைப் பாதுகாக்கும் கவசமான, மெழுகுப் பூச்சை அழிக்கிறது.இவ்வாறு செடிகளுக்குத் தொல்லை தரும் பூச்சிகளை அதிரடியாக விரட்டுவதுடன், இதன் வாசனை மூலம், அழகான பட்டாம்பூச்சிகளை ஈர்க்கவும் பயன்படுகிறது.

பட்டாம்பூச்சிகள் வந்துவிட்டால், மகரந்தச்சேர்க்கைக்கும் பஞ்சம் இருக்காது. செடியும் பூத்துக்குலுங்கத் தொடங்கிவிடும்.எனவே உரம் தயாரிப்பில், ஆரஞ்சு பழத்தோலைப் பயன்படுத்துவது,நொதித்தல் செயல்முறையை விரைவுபடுத்தும்.ஆரஞ்சுபழத்தோலை மண்ணில் அடியில் லேசாகப் புதைப்பதன் மூலமும் நைட்ரஜன், மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் ஆகியவற்றையும் செடிகளுக்குத் தேவையான அளவு கொடுக்கிறது.இவை செடிகளை விரைவில் பூக்கவைக்கிறது. தக்காளிச் செடியில் இதனைக் கண்கூடாகக் காண முடிகிறது.

ஆரஞ்சு பூச்சிக்கொல்லி தயாரிப்பு (Orange pesticide product)

இரண்டு ஆரஞ்சுகளை நன்கு சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கு,அரை லிட்டர் தண்ணீரில் ஊற வைக்கவும்.இந்த கலவை உள்ள பானை காற்றுபுகாதவாறு மூடப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.3ம் நாள் இந்தக் கலவையை நன்கு வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.இதனை தண்ணீரில் கலந்து செடிகளுக்கு அடிக்கும் போது, எறும்புகள், ஆப்பிட்ஸ்(Aphids)ஆகியவை விரட்டியடிக்கப்படும்.இந்த கலவையில், வேரில் படாதபடி, செடிகளை முக்கி எடுத்தும் மண்ணில் ஊன்றலாம். இதன்மூலம் இதுவரை பூக்காதச் செடிகளும் பூக்கும் வாய்ப்பைப் பெற்றுவிடும்.எலுமிச்சை தோலைக்கொண்டும், இதுபோன்று பூச்சிக்கொல்லியை வீட்டிலேயேத் தயாரிக்கலாம்.இது ஒரு சிறந்த ஹார்மோனாகவும் செயல்படுகிறது.


ஒரு டீஸ்பூன் எலுமிச்சை பூச்சிக்கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீரில் அரைப்பது நல்லது.மாலையில், வேர்களைத் தொடாமல் கலவையை தாவரத்தில் ஊற்றவும்.இதை வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதும்.அவ்வாறு செய்வது மண்ணை அதிக வளமாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல், சில வாரங்களுக்குள் தாவரங்களுக்கு நல்ல விளைச்சலையும் தரும். பல தாவரங்களுக்கு பெண் பூ பூக்காத பிரச்சினை உள்ளது.எலுமிச்சை பூச்சிக்கொல்லி இதற்கு ஒரு சிறந்த தீர்வாகும். தாவரங்களை தெளிப்பதும் நன்மை பயக்கும்.ஆரஞ்சுபழத்தோலை எப்போதும் நிழலில் உலர வேண்டும், அப்போதுதான் அதன் ஊட்டச்சத்துக்களை பாதிக்காது

கருத்துரையிடுக

0 கருத்துகள்