அடியுரமாக ஒரு ஏக்கருக்கு நான்கு டிராக்டரில் லோடு மக்கிய தொழு உரம் , 2 கிலோ சூடோமோனஸ், 75 கிலோ சாம்பல் 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு கொடுப்பது நல்லது
*வளர்ச்சி ஊக்கி அளிப்பு அட்டவணை*
3 மூன்றாம் நாள்
உயிர் தண்ணீருடன் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் தரைவழி கொடுக்கலாம்.
5 ம் நாள்
நடவு செய்த 12 ம் நாள்
E.M 100 ml per 10 liter tank காலையில் spray செய்யவும். மாலையில் தரைவழி ஒரு ஏக்கருக்கு போதுமான அளவு தண்ணீரில் அரை லிட்டர் எம் கரைசல் கலந்து தரைவழி தரவும்.
நடவு செய்த 12 ம் நாள்
பஞ்சகாவியா 200 ml per 10 liter tank spray செய்யவும் . தரைவழி ஏக்கருக்கு 1 _2 லிட்டர் கொடுக்கலாம்.
நடவு செய்த 17 ம் நாள்
ஜீவாமிர்தம் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தரைவழி தரவும்.
20ம் நாள்
மீன் அமிலம் 60 ml per 10 liter tank spray செய்யவும் .மாலையில் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் மீன் அமிலம் தரைவழி தரவும்.
25ம் நாள்
கற்பூர கரைசல் spray செய்யவும் .
30ம் நாள்
பஞ்சகாவிய 200 ml per 10 liter tank spray செய்யவும் . தரைவழி ஏக்கருக்கு 2 _3 லிட்டர் கொடுக்கலாம்.
33 மூன்றாம் நாள் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் /வேம் தரைவழி கொடுக்கலாம்.
38 ம் நாள்
கற்பூர கரைசல் spray செய்யவும்
40ம் நாள்
E.M 300 ml per 10 liter tank spray செய்யவும்
45ம் நாள்
மீன் அமிலம் 75 ml per 10 liter tank spray செய்யவும் . தரைவழி ஒரு ஏக்கருக்கு 2 லிட்டர் கொடுக்கலாம்.
50ம் நாள்
ஜீவாமிர்தம் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தரைவழி தரவும்.
55ம் நாள்
கற்பூர கரைசல் spray செய்யவும்
60ம் நாள்
பஞ்சகாவியா 250 ml per 10 liter tank spray செய்யவும். அல்லது பத்து லிட்டருக்கு 50 மில்லி சூடோமோனஸ் கலந்து தெளிக்கலாம்.
70ம் நாள்
மீன் அமிலம் 75 ml per 10 liter tank spray செய்யவும. மாலையில் ஒரு ஏக்கருக்கு 2 முதல் 3 லிட்டர் தரைவழி தரவும்.
85ம் நாள்
கற்பூர கரைசல் spray செய்யவும் .
90ம் நாள்
பஞ்சகாவிய 200 ml per 10 liter tank spray செய்யவும் . தரைவழி ஏக்கருக்கு 2 _3 லிட்டர் கொடுக்கலாம்.
ஒவொரு முறை நீர் பாய்ச்சும் போதும் அமிர்தக்கரைசல் ஒரு ஏக்கருக்கு 100 லிட்டர், ஜீவாமிர்தம் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர், மீன் அமிலம் ஒரு ஏக்கருக்கு 2 லிட்டர், WDC ஒரு ஏக்கருக்கு 25 லிட்டர் என ஏதாவது ஒரு கரைசலை தண்ணீரோடு கலந்து விட்டு மண்ணை வளமாக்க வேண்டும்..
இயலுமானால் நிலக்கடலை சாகுபடிக்கு முன்பு பல தானிய விதைப்பு அல்லது பசுந்தாள் உரம் செய்து 40 to 45 கழித்து மடக்கி ஓட்டி உழவு செய்தால் இன்னும் சிறப்பு.. களை கட்டுப்படும்.
0 கருத்துகள்