தாக்குதலின் அறிகுறிகள்:
முதலில், அடிப்புற இலைகளில் குறிப்பாக இலை ஓரங்களில், மஞ்சள் நிற மாற்றம் மற்றும் வாடிக் காணப்படும். பின்பு இந்த மஞ்சள் நிறம், இலையின் மையப்பகுதி வரை பரவி, ஓரங்கள் காய்ந்து போகும்.பாதிக்கப்பட்ட மரத்தின் அடி இலைகள், இலைக்காம்புடன் ஒடிந்து தண்டைச் சுற்றி தொங்கும். இது மரத்திற்கு பாவாடை கட்டியது போல் தோற்றமளிக்கும்.அடிக்கிழங்கை குறுக்காக வெட்டிப் பார்க்கும் போது நிற மாற்றம் வட்டவடிவில் கிழங்கின் நடுப்பகுதியில் அதாவது சாற்றுக்குழாய் தொகுப்பில் தாக்கம் அதிகளவில் இருக்கும். தண்டினை நீளவாக்கில் பிளந்து பார்த்தாலும் இந்நிற மாற்றம் தெரியும்.இந்நோய் மண்ணின் முலம் பரவுகின்றது. பூஞ்சையானது மெல்லிய சல்லி வேர்களின் வழியே உட் புகுகிறது. அமில மற்றும் வண்டல் மண் வகைகளில் நோய்த் தாக்கம் அதிகம்.இப்பூஞ்சைகள், கன்றுகள், கிழுங்கு, வயலில் பயன்படுத்தும் கருவிகள், வாகனங்கள், பாசன நீர் போற்வற்றின் வழியே பரவுகின்றது.
நோய் வருமுன் எடுக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள்:
வாடல் நோய் அதிக அளவில் காணப்படும் நிலங்களில் இந்நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்ட பூவன், ரொபஸ்டா வாழைகளைப் பயிரிடலாம்நோய் கண்ட நிலங்களில் மாற்றுப் பயிராக நெற்பயிரைப் பயிர் செய்த பின் வாழை பயிரிடலாம்.வாழைக்கன்றுகளை நோய் தாக்காத தோட்டங்களிலிருந்து தேர்வு செய்ய வேண்டும்.விதைக் கிழங்குகளை செந்நிறக் குழிகள் நீங்கும் வரை சீவவேண்டும். கிழங்குகளை நடுவதற்கு முன் 2 சதவீத சூடோமோனஸ் , தண்ணீர் கரைசலில் நனைத்த கிழங்கின் மீது சீராகத் தூவவேண்டும்.சூடோமோனஸ் 2 சதக் கரைசலைக் கிழங்கில் துளையிட்டு ஊசி மூலம் செலுத்தவேண்டும்.
உழவியல் முறைகள்:
வயலில் களைகளின்றிச் சுத்தமாக வைக்கவும்.நோய் தாக்கிய கன்றுகளை நடுவதற்குப் பயன்படுத்தக் கூடாது.வயலில் பயிர் இல்லாத போதும், களைகளில், இப்பூஞ்சைகள் வளரும் என்பதால் அருகில் எந்த களையும் வளரா வண்ணம் பார்த்துக் கொள்ளவும்.பூசணி ,வெள்ளரி போன்ற பயிர்களை ஊடுப்பயிராகப் பயிரிடுவதைத் தவிர்க்கவும்.தினசரி கவனித்து, நோய்த் தாக்கம் இருப்பின், அவ்வாழையினை உடனடியாக அகற்றுதல் அவசியம்.10 கி.கி தொழு உரம், நடும்போதும், பின்பு 3 மாத இடை வெளிகளிலும் அளிக்க வேண்டும். 1 கி.கி வேப்பம் புண்ணாக்கு, 200 கி தழைச்சத்து, 40 கி மணிச்சத்து, 200 கி சாம்பல் சத்து என்ற அளவில் மரமொன்றுக்கு அளித்தல்,2 மாத இடைவெளிகளில் 4 முறை களையெடுத்தல் (8வது மாதம்வரை) போன்றவை பின்பற்றப் படவேண்டும்.நோய் தாக்கிய மரங்களை பிடுங்கி அழித்துவிடவேணடும்.குழியில் போதிய அளவு சுண்ணாம்பு (குழிக்கு 1-2 கிலோ) இடவேண்டும்.
கட்டுப்படுத்தும் முறை:
சூடோமோனாஸ் புளூரசன்ஸ் @ 1 கிலோ / ஏக்கர் + தொழு உரம் மற்றும் வேப்பம் புண்ணாக்கு கலந்து நடவின்போது இடலாம்.சூடோமோனாஸ் ஃபுளுரசன்ஸ்( 60 மில்லி கிராம்) கேப்சூலை கிழங்கில் 10 செ.மீ ஆழமான துளை இட்டு நடவிற்கு பின் 2, 4 மற்றும் 6வது மாதங்களில் இடவேண்டும்.
0 கருத்துகள்