கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கூட எவ்வித பிரச்சனையும் இல்லாமல் எளிதாக விளைவிக்கப்பட்ட மக்கா பயிர் இப்பருவத்தில் கடும் பிரச்சனைக்குரியதாகி விட்டதே?.குறுகிய காலத்திலேயே சுனாமியாக தாக்கி விவசாயிகளை நிலை குலைய செய்துள்ள இதனை கட்டுப்பாட்டில் வைக்க நல்ல பலன் அடைந்தோரின் அனுபவ அறிவு ஆலோசனைகளாக அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடைவது அவசர அவசியமாகிறது.அதன்படி விவசாயிகளின் சில வெற்றி /அனுபவ ஆலோசனைகள் கீழ்க்கண்டவாறு பகிரப்படுகின்றன.
அ. விளக்குப் பொறி:
மாலை 6.30 முதல் இரவு 10.00 மணி வரை வைக்கப்படுவதால் அதிக அளவு தாய் அந்துப் பூச்சிகள் சிக்குகின்றன. ஆனால் வயலைச் சுற்றி பண்ணை வீடுகளின் விளக்குகள் உள்ள இடத்தில் பலன் குறைவாகவே உள்ளது.
ஆ. படைப் புழுக்களின் உச்சகட்ட தாக்குதல் காலம் பயிரின்15 முதல் 45 நாட்கள் வரை மட்டுமே. அந்த காலகட்டத்தில் அதிக எச்சரிக்கை அவசியம்.
இ. விதைத்து 10 வது நாளில் குருத்துகளில் அதிக நாற்றம் தரும் போரேட் குருணைகள் சுமார் 10 துகள்கள் வீதம் குருத்துகளில் இட்டால் தாய் அந்துப் பூச்சி முட்டை யிட வருவதையே தவிர்த்து விடுகிறது. போரேட் உடன் பெருங்காயம் , பூண்டு , பொதினா கலவைகளும் அதிக பலன் தருகிறது.
ஈ. படைப் புழுக்கள் பகல். வேளைகளில் தாவரங்களின் இடுக்குகளில் சென்று பதுங்கி விடுவதால் அவை வெளிவரும் நேரமான மாலை 4 மணிக்கு மேல் பூச்சி மருந்தினை தாவரம் முழுவதும் தெளிக்காமல் குருத்தில் நனைந்து சிறிது தேங்கும் அளவிற்கு தெளித்தால் நல்ல பலன் கிடைக்கிறது. காலை மற்றும் மதிய வேளை தெளிப்பு மற்றும் தாவரம் முழுவதும் தெளிப்பு நல்ல பலன்களை அளித்திடவில்லை.
உ. குருத்துகளில் தேங்கும் அளவிற்கான பூச்சி மருந்து தேவை பரிந்துரைக்கப்படுவதில் பாதியளவே படைப்புழுக்களை முழுமையாக கொல்ல போதுமானதாக உள்ளது.
ஊ. இயல்பாகவே படைப்புழுக்கள் இனிப்பானவற்றை விரும்பி உண்ணும் குணம் கொண்டதால் பூச்சி மருந்து கரைசலுடன் நாட்டுச் சக்கரை சேர்ப்பது நலன் தருகிறது.
எ. பூச்சி மருந்து தெளிப்பிற்கு குருத்துப் பகுதியை மட்டுமே நனைக்க கைத்தெளிப்பான்/பாட்டரி தெளிப்பான் சிறப்பானதாக உள்ளது.விசைத் தெளிப்பானை குறைந்த வேகத்தில் வைத்து Doom போட்டு தெளித்தாலும் செடியை காற்றுவேகத்தில் தள்ளி விடுவதால் மருந்து சேதாரம் அதிகமாகி பலன் பெரிதாக இல்லை.
ஏ. எந்த ஒரு இயற்கை எதிரி பூச்சிகளும் தங்களது செயல்பாட்டை புதிய பூச்சியினத்திற்கு எதிராக துவக்க குறைந்தது ஒரு பருவமாவது தேவைப்படுவதால் அம்முறையை செயல்படுத்த கால அவகாசம் தேவைப்படுகிறது
ஏ. 45 நாட்களுக்கு மேற்ப்பட்ட மக்கா பயிரில் தாக்குதல் புதிதாகவும் | அதிகமாக உருவாகாமலும், அப்படியே அவை தென்பட்டாலும் பொருளாதார சேதம் பெரிதாக இதுவரை தென்படவில்லை.
மேற்கண்ட வழிமுறைகள் ஏதும் புதிது மற்றும் கடைபிடிக்க சிரமமானது அல்ல என்பதாலும் செயல்படுத்துவது எளிதானது என்பதால் அனைவரும் முயற்சிக்கலாம்..
0 கருத்துகள்