1. குறுகிய கால ரகங்கள்
வயது : 80 நாட்கள் முதல் 110 நாட்கள் வரை
2. மத்திய கால ரகங்கள்
வயது : 120 நாட்கள் முதல் 135 நாட்கள் வரை
3. நீண்டகால கால ரகங்கள்
வயது : 140 நாட்களுக்கு மேல்
இது நம்முடைய நடைமுறையில் உள்ள நெல் ராகங்களில் உள்ள வயதுக்கு ஏற்ற பகுப்பு.. ஒரு சில ரகங்கள் சற்று மாறுபடலாம்...
அனைத்து பயிர்களுக்கும் நிலம் தயாரிப்பு முறை, நாற்றங்கால் தயாரிப்பு முறை ஒன்றுதான்.. அதில் எந்த வேறுபாடும் இல்லை
அனைத்து பயிர்களையும் 10ம் நாள் தொடங்கி 15ம் நாளுக்குள் நட்டால் தூர்கள் நன்றாக பிடிக்கும்... அதிலும் வித்யாசம் இல்லை
பின்பு மாறுபாடுகள் எங்கே வருகிறது என்று யோசிக்க வேண்டும்...
1. பயிர்களின் வளர்ச்சி பருவம்... கதிர் வருவதற்கு முன் உள்ள பருவம்..
2. கதிர் வந்ததிலிருந்து அறுவடை வரை உள்ள பருவம்...
மேல் சொன்ன 2 பருவங்களும் பயிருக்கு பயிர் மாறுபடும்..
மண்ணின் வளத்தை பொறுத்து பயிரின் வயது கூட குறைய செய்கிறது..
+ or - 5 days.
நெல் விவசாயத்தில் நல்ல மகசூல் பெற கடை பிடிக்க பட வேண்டிய விஷயங்கள்
1. மண் வளம் பராமரிப்பு
2. விதை தேர்வு
3. களை கட்டுப்பாடு
4. பூச்சி / நோய் மேலாண்மை
5. இடுபொருட்கள் நிர்வாகம்.
1. மண் வளம் பராமரிப்பு
● பல தானிய விதைப்பு
● பசுந்தாள் பயிர் செய்தல்
● ஊட்டமேற்றிய தொழு உரம்
● மண் வளத்தை கூட்டும் ஊக்கிகளை உபயோகித்தல்
2. விதை தேர்வு & நாற்றங்கால்
● கலப்படம் இல்லாத விதைகள்
● உப்பு நீர் கரைசலில் முளைப்பு திறன் குறைந்த நெல்லை நீக்குதல்
● உயிர் உரங்கள் கொண்டு விதை நேர்த்தி
● விதைகள் ஒன்றோடு ஒன்று கலக்காமல் இடைவெளி கொடுத்து நாற்று விடுதல்
● 5ம் நாள் பஞ்சகாவிய தெளிப்பு
● 7ம் நாள் கற்பூர கரைசல் தெளிப்பு
● 10ம் நாள் பஞ்சகாவிய தெளிப்பு
3. களை கட்டுப்பாடு
● குறுகிய கால ரகங்களுக்கு 3 முறை ( எதிர் எதிர் திசை ) கோனோவீடர் ஓட்ட வேண்டும். 7 நாட்கள் இடைவெளியில்.
● மத்திய கால ரகங்களுக்கு 4 முறை ( எதிர் எதிர் திசை ) கோனோவீடர் ஓட்ட வேண்டும். 7 நாட்கள் இடைவெளியில்
● நீண்ட கால ரகங்களுக்கு 5 முறை ( எதிர் எதிர் திசை ) கோனோவீடர் ஓட்ட வேண்டும். 7 நாட்கள் இடைவெளியில்
● ஒரு முறை கை களை எடுக்க வேண்டும்
4. பூச்சி / நோய் மேலாண்மை
● நடவு செய்த 20ம் நாள் கற்பூர கரைசல் spray
● நடவு செய்த 35ம் நாள் கற்பூர கரைசல் spray
● நடவு செய்த 60ம் நாள் கற்பூர கரைசல் spray
● நடவு செய்த 80ம் நாள் கற்பூர கரைசல் spray
● பயிர்களின் வயதை பொறுத்து, நோய்கள் அறிகுறி பொறுத்து மேலே உள்ள தெளிப்புகளின் எண்ணிக்கையை கூட / குறைத்து கொள்ளவேண்டும்.
● தேவைக்கு ஏற்றார் போல உயிர் உர பூச்சி / பூஞ்சாண கொல்லிகளை பயன் படுத்தி கொள்ளுங்கள்
5. இடுபொருட்கள் நிர்வாகம்.
● மண் வளத்தை கூட்டினால் தான் மகசூலில் நிறைவு கிடைக்கும்
● கடைசி உழவுக்கு முன் 1000 kg ஊட்டமேற்றிய தொழு உரம் + 50 kg கரித்தூள் கலந்து இடவும்
● ஒவ்வொரு முறை கோனோவீடர் ஓட்டுவதற்கு முன் நாள் ஏக்கருக்கு 100 to 150 kg ஊட்டமேற்றிய தொழு உரம் + 10 kg கரித்தூள் கலந்து இடவேண்டும்
● பாசன நீர் வழியாக 15 நாட்களுக்கு ஒரு முறை 200 liter ஜீவாமிர்தம் / அமிர்த கரைசல் விடவேண்டும்
● பாசன நீர் வழியாக 15 நாட்களுக்கு ஒரு முறை 3 liter EM கரைசல் விடவேண்டும்
● பாசன நீர் வழியாக 30 நாட்களுக்கு ஒரு முறை 3 liter மீன் அமிலம் கரைசல் விடவேண்டும்
● பாசன நீர் வழியாக 30 நாட்களுக்கு ஒரு முறை 3 liter Humic acid கரைசல் விடவேண்டும்.
குறுகிய கால பயிர்களுக்கு 2 முறை
மத்திய கால பயிர்களுக்கு 3 முறை
நீண்ட கால பயிர்களுக்கு 4 முறை
● பஞ்சகாவியா 3 liter + தேவையான அளவு ஓடை மண்ணில் கலந்து வயலில் 30 நாட்களுக்கு ஒரு முறை உரம் இடுவது போல இடவேண்டும்
குறுகிய கால பயிர்களுக்கு 2 முறை
மத்திய கால பயிர்களுக்கு 3 முறை
நீண்ட கால பயிர்களுக்கு 4 முறை
● நடவு செய்த 25ம் நாள், 35ம் நாள், 45ம் நாள் 200 liter ஜீவாமிர்தம் / அமிர்தக்கரைசல் உடன் 25 kg சாம்பல் + புளிக்க செய்த 5kg புண்ணாக்கு கரைசலையும் கலந்து நீரில் விடவேண்டும்.. நெல் மணிகளின் எண்ணிக்கை கூடுவதற்கு உதவும்
தெளிப்பு வளர்ச்சி ஊக்கிகள்
● ஒவ்வொரு வளர்ச்சி ஊகிக்கும் இடைவெளி 7 நாட்கள் என கருத்தில் கொண்டு தெளிக்க வேண்டும்
● 1st EM கரைசல் 150 ml / tank
● 2nd மீன் அமிலம் 50 ml / tank
● 3rd EM கரைசல் 150 ml / tank
● 4th பஞ்சகாவியா 150 ml / tank
● 5th 15 நாட்கள் புளித்த மோர் உரம் 500ml/ tank
● 6th EM கரைசல் 150 ml / tank
● 7th மீன் அமிலம் 50 ml / tank
● 8th EM கரைசல் 150 ml / tank
● 9th பஞ்சகாவியா 150 ml / tank
● 10th 15 நாட்கள் புளித்த மோர் 500ml/ tank
● மேலே உள்ள கரைசல்களை பயிரின் வயதுக்கு ஏற்ப குறைத்து கொள்ளலாம்
● இந்த தெளிப்புகள் பயிரின் வளர்ச்சிக்கு ஏற்ப கவனித்து தெளிக்கவேண்டும்
● அதிகப்படியான தெளிப்பும் பயிரை அதிகம் வளர செய்து சாய்ந்துவிட வாய்ப்பாக அமையும்.
● மண்ணின் வளத்தை பொறுத்து பயிரின் வளர்ச்சி அமையும்..
● ஆகவே பயிரின் வளர்ச்சிக்கு ஏற்பவே தெளிப்புகள் அமைய வேண்டும்
● இந்த தெளிப்பு முறையை வயலில் ஒன்று இரண்டு கதிர்கள் வரும் வரை தெளிக்க வேண்டும்
● ஒரு சில கதிர்கள் வெளி வந்தவுடன் தேமோர் கரைசல் 500 ml / tank.
● 3 நாள் இடைவெளியில் 3 முறை spray செய்யவும்
● பூக்கள் polination முடிந்து பால் பிடிக்கும் வரை பூச்சி விரட்டி தவிர்த்து எதையும் தெளிக்க கூடாது..
● பூ இருக்கும் காலங்களில் sprayer நேரடியாக பயிரின் மீது படுமாறு தெளிப்பதை தவிர்க்க வேண்டும்..
● பால் பிடிக்கும் தருணத்தில் தேங்காய் பால் + மீன் அமிலம் 1:1 அளவில் கலந்து 5 நாட்களுக்கு ஒரு முறை என 3 தெளிப்பு..
● அதை தொடர்ந்து 7 to 10 days once மீன் அமிலம் 70ml/tank spray செய்யவும்..
● கதிர்கள் வெளி வந்ததில் இருந்து பால் பிடித்து முற்றும் வரை ஜீவாமிர்தம் / அமிர்தக்கரைசல் உடன் 25 kg சாம்பல் கலந்து பாசனம் வழியாக நிலத்துக்கு விடவும்..
● இதனால் நல்ல எடையுள்ள நெல் மணிகள் கிடைக்கும்
நீர் மேலாண்மை
● ஆரம்ப காலங்களில் நீர் மறைய நீர் கட்ட வேண்டும்
● ஒவொரு முறை நீர் விடும் போதும் மேலே சொன்ன ஏதாவது ஒரு இடு பொருளோடு சேர்த்து விடவேண்டும்
● கதிர் வெளிவந்து பால் பிடித்து முற்றும் வரை நீர் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்
● அதிகப்படியான நீரும் பயிருக்கு நோயை உண்டாக்கும்
வளமான மகசூல் பெற மண்ணின் வளத்தை கூடுவது.. மண்ணுக்கு சத்தை வழங்குவது மிகவும் முக்கியம்..
லோ.ஜெயக்குமார்
மறைமலை நகர்
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
0 கருத்துகள்