இந்தியாவில் காலங்காலமாகப் பயிர் செய்யப்பட்டு வரும் பாரம்பரிய நெல் வகைகள் பலவும் மருத்துவக் குணம் மிகுந்தவை. அவற்றிலும் மாப்பிள்ளை சம்பா தனித்தன்மைமிக்கது. அதற்குக் காரணம், மாப்பிள்ளை சம்பாவின் நோய் எதிர்ப்பு சக்தி. இதன் அரிசியை வேகவைக்கும்போது வடிக்கும் கஞ்சியில் மிளகு, சீரகம், உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் கிடைக்கும் ருசியே தனிதான். ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் வழங்கப்படும் சூப் வகைகளிலும்கூட இந்தச் சுவை கிடைக்காது என்று சொல்லலாம். கஞ்சியே இவ்வளவு ருசி என்றால், சோறு எவ்வளவு சுவையாக இருக்கும்?.தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்வதற்கு ஏற்ற நெல் ரகம் இது.
வயது 160 நாட்கள். நேரடி விதைப்பு செய்தால் 150 நாளில் அறுவடைக்குத் தயாராகிவிடும். நிலத்தில் தண்ணீரே இல்லாமல், ஒரு மாதக் காலத்துக்கு நிலம் காய்ந்தாலும்கூட மாப்பிள்ளை சம்பா பயிர் வாடாது. சீற்றம் தாங்கும் அதேபோல கனமழைக் காலங்களில் நெற்பயிர் பல நாட்கள் நீரில் மூழ்கிக் கிடந்தாலும்கூட மாப்பிள்ளை சம்பா பயிர் அழுகாது.இப்படி இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளரக்கூடிய இந்த நெல் ரகம், பூச்சி தாக்குதல்களாலும் எளிதில் பாதிக்கப்படாது.
பெயர் காரணம்
பழங்காலத்தில் தங்கள் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதற்கு முன்னர் மாப்பிள்ளை பலசாலியா என்பதை சோதிப்பதற்காக அதிக எடை கொண்ட இளவட்டக் கல்லைத் தூக்க வைப்பர். அந்த கல்லை தூக்கம் நபருக்கு தங்கள் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பர். இந்த ரக அரிசியை சாப்பிடுவர்கள் எளிதில் இளவட்டக் கல்லை தூக்கும் பலம் உடையவர்களாக இருப்பார்கள். இதனால், இதற்கு மாப்பிள்ளை சம்பா என்று பெயர் வந்தது.
மாப்பிள்ளை சம்பா நெல் பயிரின் பராமரிப்பு அட்டவணை

(வயது : 145 லிருந்து 155 நாள் வரை)
நாற்றுக்களை குறைந்த நாள் வயதில்(16 லிருந்து 24 நாள்) நடவு செய்வதால் பக்க கிளைப்புகள் மிக அதிகமான எண்ணிக்கையில் உருவாகும்.
ஒருங்கிணைந்த உரம், களை, தெளிப்பு, பாசன நிர்வாக முறைகளை திறம்பட கையாளுவதன் மூலம் நெல்லின் வளர்இளம் பருவத்தில் ஒத்த வயதுடைய பக்க கிளைப்புகள் உருவாகுவதற்கு ஏதுவாகும். இதன் மூலம் தாமதமாக, பின்வரும் கிளைப்புகளில் நெற்கதிர்கள் இல்லாமல் போவதை தடுக்கலாம் .
ஒருங்கிணைந்த பயிர் வளர்ச்சி முறையால் தோன்றும் பக்ககிளைப்புகள் அனைத்திலும் நெற்கதிர்கள் உருவாகி நிறைந்த மகசூலை அடையலாம்.
ஓருங்கிணைந்த, பயிர்பாதுகாப்பு மற்றும் பயிர்வளர்ச்சி அட்டவணையை செயல்படுத்துவதால், பயிரின் வளர்ச்சியை சிறப்பாக முறைபடுத்தலாம்.
நடவு நிலத்தில் அடியுரமாக ஏக்கருக்கு 200 கிலோ ஊட்டமேற்றிய தொழு உரம், 200 லிட்டர் ஜீவாமிர்தம், 2 கிலோ சூடோமோனாஸ் பாசனநீரில் கலந்து விட்டு பறம்பு ஓட்டி நிலத்தை சமன்படுத்த வேண்டும்.
நாற்றுக்களை நடவு போட்ட பின்னர், நிலத்தில் லேசான இறுக்கம் வந்த பின்னர் தண்ணீர் பாய்ச்சுவதால், நாற்றின் வேர்பிடிப்புதிறன் சிறப்பாக இருக்கும்.
நடவிலிருந்து 3 ம் நாள் உயிர்தண்ணீர் விட வேண்டும், பாசன நீரில் ஜீவாமிர்தம் 200 லிட் கொடுக்கலாம்.
10 வது நாள் -- மீன்அமிலம் தரைவழி ஏக்கருக்கு 750 ml
18வது நாள் -- கோனோவீடர்
20 வது நாள் -- காலையில் பஞ்சகாவியா பத்து லிட்டருக்கு 200 மில்லி கலந்து தெளிக்கலாம் மாலையில் இஎம் கரைசல் தரைவழி ஒரு லிட்டர் கொடுக்கலாம்.
25 வது நாள் --மீன்அமிலம் தரைவழி ஏக்கருக்கு 750 ml
30 வது நாள் -- ஜீவாமிர்தம் ஏக்கருக்கு 200 லிட்டர் கலந்து தரைவழி கொடுக்கலாம்.
32 வது நாள் -- கோனோவீடர்(கோனோவீடர் போடும்போது பயிர்களின் இடைவெளியில் உள்ள களைகளை ஆட்களை வைத்து கைகளை எடுக்க வேண்டும்
35 வது நாள் காலையில் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் தரைவழி தரலாம். மாலையில் பொன்னீம் கரைசல் தெளிக்கலாம்.
37 வது நாள் -- காலையில் பஞ்சகாவியா 10 லிட்டருக்கு 200 மில்லி கலந்து கொடுக்கலாம்.
மாலையில் மீன்அமிலம் தரைவழி ஏக்கருக்கு 750 ml
43 வது நாள் -- ஜீவாமிர்தம் ஏக்கருக்கு 200 லிட்டர் கலந்து தரைவழி கொடுக்கலாம்.
48வது நாள் -- இ.எம் கரைசல் தரைவழி ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் கொடுக்கலாம்.
55 வது நாள் பொன்னீம் ஸ்பிரே
60 வது நாள் -- காலையில் பஞ்சகாவியா 10 லிட்டருக்கு 100 மில்லி கலந்து தெளிக்கலாம். மாலையில் ஜீவாமிர்தம் ஏக்கருக்கு 200 லிட்டர் கலந்து தரைவழி கொடுக்கலாம்.
70 வது நாள்-- மீன்அமிலம் தரைவழி ஏக்கருக்கு 750 ml
75 வது நாள் -- அக்னிஅஸ்திரம் ஸ்பிரே.
80 வது நாள் -- காலை 10 லிட்டருக்கு 50 மில்லி சூடோமோனஸ் தெளிப்பாக தரலாம். மாலையில் இ.எம் கரைசல் தரைவழி ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் கொடுக்கலாம்.
85வது நாள் -- ஜீவாமிர்தம் ஏக்கருக்கு 200 லிட்டர் கலந்து தரைவழி கொடுக்கலாம்.
91 வது நாள் -- தேமோர் கரைசல் ஸ்பிரே
94 வது நாள் -- மீன்அமிலம் தரைவழி ஏக்கருக்கு 750 ml.
102 வது நாள் -- காலையில் வசம்பு கரைசல் பத்து லிட்டருக்கு ஒரு லிட்டர் கலந்து தெளிக்கலாம்
மாலையில் மீன்அமிலம் தரைவழி ஏக்கருக்கு 750 ml.
110 வது நாள் -- கற்பூர கரைசல் அல்லது பவேரியா பேஸியாநா (10 லிட்டருக்கு 50 மில்லி) கலந்து தெளிக்கலாம்
120 வது நாள் -- இஎம் கரைசல் தரைவழி ஏக்கருக்கு இரண்டு லிட்டர் கலந்து கொடுக்கலாம்.
130 வது நாள் -- காலை சூடோமோனஸ் ஐ பத்து லிட்டருக்கு 50 மில்லி கலந்து தெளிக்கலாம். மாலையில் மீன்அமிலம் தரைவழி ஏக்கருக்கு 750 ml.
இது போன்ற திட்டமிட்ட பயிர் வளர்ப்பு நமக்கு இரசாயன விவசாயத்தின் விளைச்சலை காட்டிலும் இன் இருமடங்கு இலாபத்தையும், விளைச்சலையும் அள்ளி தரும்.
பாரம்பரிய அரிசிகளில் சிறப்பு வாய்ந்த ஒன்று மாப்பிள்ளை சம்பா. இளவயதினர்க்கு தேவைப்படுகின்ற அனைத்து சத்துக்களும் நிறைந்த அரிசி மாப்பிள்ளை சம்பா. அதனாலேயே அப்பெயர் பெற்றது. மாப்பிள்ளை சம்பா மருத்துவ குணம் உடையது. மாப்பிள்ளை சம்பா சிகப்பு அரிசி வகைகளில் ஒன்று.
மாப்பிள்ளை சம்பா அரிசியின் சத்துக்கள் மற்றும் அதன் பயன்கள் (Nutrients and Health Benefits):
மாப்பிள்ளை சம்பா அரிசியில் புரத சத்து(Protein), நார்சத்து(Fiber), தாதுசத்து(Minerals) மற்றும் உப்புச்சத்தும் நிறைந்துள்ளது.அது மட்டுமல்லாமல் உடலுக்கு வலுவைத் தரக்கூடிய ஏராளமான சத்துகளும் நிறைந்துள்ளது.
மருத்துவ பயன்கள்(Health Benefits):
1. மாப்பிள்ளை சம்பாவில் நோய் எதிர்ப்பு சக்தி(Immune power) அதிகம் உண்டு.அதனால் அடிக்கடி உடல்நல குறைபாடு ஏற்படாமல் தடுக்கும்
2. நீரிழிவு நோயாளிகளுக்கு(Diabetics) நன்மை தரும்
3. எளிதில் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக(Increase Activeness) இருக்க வைக்கும்.
4. நரம்புகளுக்கு நல்ல வலுகுடுக்கும்.
உணவு வழிகள் (Recipe ideas):
மாப்பிள்ளை சம்பா அரிசியை தினமும் நம் உணவில் சேர்த்து கொண்டால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும் இந்த அரிசியை சாதம்(Rice), இட்லி(Idli), தோசை(Dosa) செய்து உண்ணலாம் நல்ல ருசியுடனும் ஊட்டத்துடனும் இருக்கும்

0 கருத்துகள்