Ad Code

Ticker

6/recent/ticker-posts

முசோலினியின் இதயத்தில் இடம் பிடித்த மங்கை


ல்லாயிரக்கணக்கானோரை பலிகொண்ட பயங்கரமான இரண்டாவது உலகப்போர் முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. 1945 ஏப்ரல் 27-ஆம் நாள் பெரும் தோல்விகளை சந்தித்து இருந்த இத்தாலிய கொடுங்கோலன் பெனிடோ முசோலினி, வட இத்தாலியின் டோங்கோ கிராமத்தில் பதுங்கி இருந்தான். எஞ்சி இருந்த சொற்ப ஆதரவாளர்களுடன் ஸ்பெயின் நாட்டுக்கு தப்பி ஓட திட்டமிட்டு புறப்பட்டான். அவர்கள் சென்ற வாகனத்தின் சக்கரத்தில் ஆணி ஒன்று குத்தியதால், பயணம் தடைபட்டது. திடீரென்று அவர்களை பார்டிஸான்கள் எனப்படும் உள்நாட்டு எதிரிப்படை சூழ்ந்தது. வாகனத்தில் முசோலினி உட்பட 11 ஆண்களும் ஒரு பெண்ணும் இருந்ததை கண்டு எதிரிப் படையினர் ஆச்சரியம் அடைந்தனர்.ஆண்கள் ஓரிடத்தில் அடைக்கப்பட்டனர். அந்த பெண் வேறு ஒரு இடத்தில் அடைக்கப்பட்டாள். முசோலினி அதிர்ந்தான் எதிரிபடை வீரன் ஒருவனிடம் தழுதழுத்த குரலில் "அந்தப் பெண்ணுக்கு எதுவும் நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கேட்டுக் கொண்டான். அவள்தான் முசோலினியின் காதலி க்ளாரெட்டா பெட்டாக்கி என்று அறிந்து கொண்டான் அந்த வீரன். முசோலினியின் செல்வத்திலும் பதவி அதிகாரத்திலும் ஆசை கொண்டு அவனுடன் ஒட்டிக்கொண்டவள் என்று நினைத்தவனுக்கு அவள் மீது மரியாதையோ, அனுதாபமோ, ஏற்படவில்லை. ஆனால், அவளை சந்தித்து பேசியதும் அவன் மனம் மாறியது. அவளது கண்ணீரைக் கண்டதும் அவன் மனம் கரைந்து. கவலைப்படாதே எங்கள் இலக்கு முசோலினிதான் உனக்கு துன்பம் எதுவும் நேராமல் பார்த்துக் கொள்கிறேன் என்றான். அருகில் வந்த க்ளாரெட்டா அவன் கையை பற்றிக்கொண்டு கெஞ்சும் குரலில் கேட்டாள் "எனக்கு ஏதாவது நன்மை செய்ய விரும்பினால், என்னை முசோலினியுடன் இருக்க அனுமதி. அது போதும்." முட்டாள்தனமாக பேசாதே என்றான் அந்த வீரன். "முசோலினிக்கு மோசமான முடிவு காத்திருக்கிறது. அவனுடன் நீ இருந்தால் அதே முடிவுதான் உனக்கும்". தெரியும் என்றால் க்ளாரெட்டா ஆனால் அவருக்குப் பின் என் வாழ்க்கை என்பதே இல்லை. என்னையும் அவரோடு சாக விடு. ஒரு கொடுங்கோலனைக் காதலித்து காதலுக்காகவே உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராக இருக்கும் இவள் மானிடப் பெண்ணா இல்லை தேவதையா என்று வியப்பில் உறைந்து போனான் வீரன்.

 1883 ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்த முசோலினி இளமையில் பத்திரிகையாளனாகவும் படை வீரனாகவும் பணியாற்றினான். விரைவிலேயே தேசிய பாசிசக் கட்சி தலைமை தாங்கி நடத்தும் நிலைக்கு உயர்ந்தான். வசீகரமான தோற்றமும் கவர்ச்சிகரமான பேச்சுத்திறனும் கொண்டிருந்த அவன் மக்களை தன் பக்கம் ஈர்த்தது 1922-ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றினான். காலப்போக்கில் மக்களாட்சி கொள்கைகளையும் வழிமுறைகளையும் கைகழுவி விட்டு. கொடுங்கோலனாக மாறினான். முசோலினியின் அரசியல் வாழ்க்கை உயர்வு தாழ்வுகள் நிறைந்தது. அதனிடையே அவனுக்கு காதல் போன்ற இனிமையான உணவுகளுக்கு நேரம் இருந்ததே இல்லை. ஆனால் அவனது கவர்ச்சியால் கவரப்பட்ட பல பெண்கள் அந்த நாட்டில் இருந்தனர். க்ளாரெட்டா பெடாக்கி நிச்சயமாக அந்தப் பெண்களில் ஒருத்தி இல்லை. உடல் ஈர்ப்பை தாண்டி காதல் என்னும் உணர்வை அவன் மேல் ஒரு தலையாக வளர்த்துக்கொண்டவள்.முசோலினி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு தவறாமல் செல்வாள். அவனது சொற்பொழிவுகளைக் கேட்பாள். அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டு இருந்தாலே போதும் என்று முசோலினி பைத்தியமாக அவள் மாறினாள். தன்னை அறியாமலேயே முசோலினியின் கவனத்தையும் கவர தொடங்கினாள். முசோலினி அவளிடம் பேசத்தொடங்கினான். தன் மீது அவள் கொண்டிருந்த பிரமிப்பையும் காதலையும் உணர்ந்தான். அவன் மீது பிரியம் கொண்டான் உறவு மலரத் தொடங்கியது. அப்போதுதான் அவனது அரசியல் வாழ்க்கை அஸ்தமிக்க ஆரம்பித்தது. முசோலினி ஹிட்லருடன் இணைந்தான் இரண்டாவது உலகப் போர் தொடங்கக் காரணமாக அமைந்தான். துவக்கத்தில் இத்தாலியும் ஜெர்மனியும் வெற்றி பெற்றன. அந்த வெற்றி அதிக நாட்கள் நீடிக்கவில்லை. எதிரி நாடுகளின் கை ஓங்க தொடங்கியது. 1943 ஆம் ஆண்டில் முசோலினியின் இத்தாலியப் படைகள் தோல்விகளை சந்தித்தன. இத்தாலியை காப்பாற்றுவதற்காக ஆளும் கட்சியில் இருந்த அவனது நண்பர்களை முசோலினியை ஆட்சியை விட்டு இறக்கினர். கைது செய்து வேறு வேறு இடங்களில் சிறை வைத்தனர். முசோலினியை ஹிட்லரின் படைகள் சாமர்த்தியமாக விடுவித்தனர் ஜெர்மானிய இராணுவத்தின் உதவியுடன் வடக்கு இத்தாலியின் ராணுவ முகாம் ஒன்றில் ரகசியமாக தங்க வைக்கப்பட்டான். அவன் சிறை வைக்கப்பட்டிருந்த இடங்களை எல்லாம் தேடி அலைந்த பெடாக்கி இறுதியில் அவன் தங்கியிருந்த ராணுவ முகாமுக்கு அருகிலேயே தன் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டாள். அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் அவன் தன் கண் பார்வையில் இருப்பதே அவளுக்கு பெரும் ஆனந்தத்தை அளித்தது. ஜெர்மனியும் போரில் தோல்வி கண்டது. உள்நாட்டு எதிரிப்படைகள் முசோலினியை வேட்டையாடத் தொடங்கின. உயிர் பிழைக்க தப்பி ஓட வேண்டிய நிலையிலிருந்த முசோலினி காதலி பெடாக்கியை பத்திரமாக ஒரிடத்தில் தங்க வைத்து விட்டுப்போக விரும்பினான்.ஆனால்,பெடாக்கி  பெண் வீராங்கனை போல் சீருடை அணிந்து காதலனுடன் இணைபிரியாமல் இருந்த அவள் வாழ்ந்தாலும் இறந்தாலும் முசோலினியுடன்தான் என்று தெளிவாக அறிவித்தாள். வேறு வழியின்றி முசோலினி அவளையும் அழைத்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றான் எதிரிகளிடம் பிடிபட்டான்.

 டைசி நாட்களை முசோலினியுடன் கழிக்க வேண்டும் என்ற பெடாக்கியின் வேண்டுகோளை ஏற்ற எதிரிப்படை வீரன் அவளை முசோலியின் அறைக்குள் அழைத்துச் சென்றான். காதலனுடன் மீண்டும் இணைந்த அவளுக்கு பேச்சே எழவில்லை. அவளைக் கண்டு உள்ளுக்குள் மகிழ்ந்தாலும். தன்னுடன் சேர்ந்திருந்தால் அவளுக்கு துன்பம்ந்தான் என்று உணர்ந்த முசோலினி ஈனஸ்வரத்தில் கேட்டான். நீ ஏன் என்னைத் தொடர்ந்து இங்கு வந்தாய். உன்னுடன் இருப்பதற்காகவே என்றாள் பெடாக்கி கண்ணீருடன். அன்று இரவு ஒருவர் அணைப்பில் ஒருவர் உலகையே மறந்து கட்டுண்டு கிடந்தனர். பெரும் காதலுடன் முழு வாழ்க்கையையும் வாழ்ந்து முடித்த ஆனந்தத்தை அந்த ஓர் இரவில் அவர்கள் பெற்றனர். மறுநாள் 1945 ஏப்ரல் 28 ஆம் நாள். மாலை 4 மணி. எதிரிப்படைத் தலைவன் வால்ட் அவ்டிஸியோ, அவர்கள் அறையில் நுழைந்தான்."ம்.. கிளம்புங்கள். சீக்கிரம் என்றான். தன் கையை இறுக்கிப் பற்றிக் கொண்டிருந்த பெடாக்கியுடன் வெளியே நடந்தான் முசோலினி. அவர்களை ஏற்றிக்கொண்ட கார் ஊருக்கு வெளியே சென்று நின்றது. உத்தரவுபடி அவர்கள் காரில் இருந்து வெளியே வந்தனர். முசோலினிக்கு மரண தண்டனை அளிக்கும் உத்தரவை படித்து முடித்தான் படைத்தலைவன். அமைதியாக அதை ஏற்றான் முசோலினி. ஆனால் துள்ளிப் பாய்ந்த பெடாக்கி, "இல்லை,இல்லை" என்று கதறிக்கொண்டே முசோலினி கட்டி தழுவினாள். "அவனை விட்டுவிடு இல்லாவிட்டால் குண்டு உன் மீது பாய்ந்து விடும் என்றான் படைத்தலைவன். காதலனை தன் ஆவியுடனேயும் சேர்த்துத் தழுவிக்கொண்டு விலக மறுத்தாள். அந்தக் காதலி. துப்பாக்கி வெடித்தது குண்டு பெடாக்கியின் மீது பாய்ந்து அவள் கீழே சாய்ந்தாள்!காதலி வீழ்ந்ததை கண்ட முசோலினி தன் சட்டையை கிழித்து மார்பை காட்டியபடி "நெஞ்சில் சுடு" என்றான். துப்பாக்கி மீண்டும் வெடித்தது. காதலி மீது விழுந்தான் முசோலினி. அவனது தலை பெடாக்கியின் இதயத்தின் மீது சரிந்திருக்க. அவர்களுடைய உயிர் ஒன்றாக உலகை விட்டுப் பறந்தது.

கருத்துரையிடுக

1 கருத்துகள்