Ad Code

Ticker

6/recent/ticker-posts

உண்மையின் தத்துவம்

பேக்கன் என்னும் 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த உரையாசிரியர் உண்மையின் தத்துவத்தை இவ்வாறு விளக்குகிறார். உண்மை எது என விசாரிக்க தூங்குவது உண்மையை நேசிப்பதாகவும். உண்மையை பற்றிய அறிவே அதனது இருப்பு. மனித இயல்பில் மிகவும் நல்லது என்பது களிப்பூட்டும் உண்மையை நம்புவதே என்று கவிஞர் கூறுகிறார். கடற்கரையில் நின்று கடலையும் கப்பலையும் பார்ப்பது ஆனந்தம், கோட்டையின் சாளரம் வழியாக கீழே நடக்கும் போர் சாகசங்களை பார்ப்பது இன்பம். ஆனால் உண்மை என்னும் குன்றின் மீது நிற்பதற்கு இணையான ஆனந்தம் எதுவும் கிடையாது. அக்குன்றின் மீது ஏறி கீழே இருக்கும் பள்ளத்தாக்கில் இருப்பவரது தவறுகள் பொய்கள் இவைகளை பார்த்தால் அவர்கள் மீது பரிதாபம் பிறக்குமே தவிர கர்வம் வராது. ஒரு மனிதன் மனம் தர்மத்தில் உழன்று கடவுளின் மீது உறைந்து உண்மை என்னும் துருவங்கள் பக்கம் திரும்பியது என்றால் அதுவே  இப்பூமியின் சொர்க்கம். மத உண்மை, தத்துவ உண்மையிலிருந்து கடந்துவந்த அன்றாட வாழ்க்கையில் உண்மையை கடைப்பிடிப்பவனை. அதைக் கடைபிடிக்காப் பொய்யனும் மதிப்பான். மண்டேகு என்னும் பிரெஞ்ச் உரையாசிரியர் கூறுவதாக பேக்கன் கூறுகிறார். பொய் பேசுபவன் ஆண்டவனை பார்த்து பயப்படுவதில்லை, மனிதனைப் பார்த்து பயந்து அவனை மகிழ்விக்க பொய் பேசுகிறான் ஆண்டவனை பார்த்து மறைந்திருந்தால் உண்மை பேசியிருப்பான்.

இத்தகைய பூமியில் சொர்க்கத்தை உருவாக்கும் உண்மையை மனிதனின் லட்சியமாக கொள்ளுதல் Truth is Beauty,Beauty is Truth என கீட்ஸ் என்னும் ஆங்கிலக் கவிஞர் கூறுகிறார். அதாவது உண்மையே உண்மையான அழகு, அழகே உண்மையான உண்மை. உண்மையை வாழ்க்கையில் கடைப்பிடிப்பவர்க்கே அதனது அழகையும், இன்பதையும் உணர முடியும். உண்மையை கடைபிடிக்க ஆரம்பித்தால் உண்மையின் தத்துவங்கள் நமக்கு விளங்கும்.பிளேட்டோ என்னும் கிரேக்க தத்துவ ஞானி உண்மையின் தத்துவத்தை விளக்குகிறார். இந்த உலகம் உண்மையான உலகத்தின் பிரதிபலிப்பு. இந்த உலகத்தில் இருக்கும் பொருள்கள், உயிரினங்கள் அனைத்தின் மூலம் எந்தவித குறைபாடுமின்றி முழுமை பெற்றதாக உண்மை உலகத்தில் உள்ளது. அதன் பிரதிபலிப்பான இந்த உலகப் பொருட்கள், மக்கள் உயிரினங்கள் தமது மூலத்தை அடைய முயற்சித்து அதை அடைய வேண்டும். இதுவே உண்மையின் தத்துவம்.இந்திய தத்துவம் கூறுவதும் இதையே. இந்த உலகம் மாயை ஆண்டவனின் இருப்பிடமாகிய மேலுகமே உண்மை. அந்த  மேலுலக உலகத்தை அடைவதேயே ஒரு மனிதன் இலட்சியமாக கொள்ளவேண்டும். ஆண்டவனே உண்மையான உண்மை என்னும் தத்துவத்தை புரிந்து கொண்டு இந்த உலக மாயையில் விழுந்துவிடாது. பொய், பித்தலாட்டத்தில் ஈடுபட்டு இவ்வுலக இன்பத்தில் மூழ்கிவிடாது. ஆண்டவனின் உறைவிடமான நிரந்தரமான. உண்மையான அந்த வீடு பேற்றை நாம் அடையவேண்டுமென நம் நாட்டுத் தத்துவங்கள் கூறுகின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்