Ad Code

Ticker

6/recent/ticker-posts

எர்லகட்டா சுப்பாராவ்(Yellapragada Subbarow)

எர்லகட்டா சுப்பாராவ் 12-01-1895இல் பழைய சென்னை மாநிலத்தில் பீமாவரத்தில் வெங்கம்மா- ஜெகநாதன் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிப்படிப்பை ராஜமுந்திரியில் வறுமை நிலையில் படிக்க வேண்டியதாயிற்று. பள்ளி இறுதி வகுப்பில் இரண்டு முறை தவறினார். எப்படியும் வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற தீர்மானத்துடன் வாரணாசியில் யாத்திரிகர்ளுக்கு வாழைப் பழங்களை விற்று பணம் சேர்த்தார். அந்த நிலையில் தாய் மாமா அவரை சென்னைக்கு அழைத்து வந்து, இந்து உயர்நிலைப் பள்ளியில் படிக்க வைத்தார். கஷ்டப்பட்டு படித்து பள்ளி இறுதி வகுப்பில் மூன்றாம் முறை தேறினார்.எர்லகட்டா சுப்பாராவ் சென்னை மாநிலக் கல்லூரியில் இன்டர்மீடியட் தேர்வு பெற்றார்.பின் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். மருத்துவக் கல்லூரியில் நண்பர்களின் உதவியினாலும்  கஸ்தூரி சூரிய நாராயண மூர்த்தியின் ஆதரவிலும் படித்தார்.உதவியளித்த கஸ்தூரி நாராயணமூர்த்தி பெண்ணான சேஷகிரியை 1922 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது காந்திஜி அன்னிய நாட்டுப் பொருள்களை புறக்கணிக்கும்படி கேட்டுக்கொண்டதை ஏற்று கொண்டு, அன்னிய நாட்டு பொருட்களை வாங்க மறுத்து கதர் துணியை அணிய ஆரம்பித்தார். அதன் விளைவாக மருத்துவக் கல்லூரியில் ரண சிகிச்சை பிரிவு பேரரசர் பிராட்பீல்டுவின் கோபத்தையும்,அதிர்ச்சியையும் சந்திக்க வேண்டியிருந்தது. அதனால் சுப்பாராவ் மருத்துவக் கல்லூரி தேர்வில் நன்றாக எழுதிருந்தபோதிலும் மருத்துவப் பட்டபடிப்புப்பிற்குப் பதிலாக எம்.பி.பி.எஸ் குறைந்த பட்டப் படிப்பின் சான்றிதழ் பெற வேண்டியதாயிற்று(L.M.S).மருத்துவ கல்லூரி படிப்பு முடிந்தவுடன் சென்னை மருத்துவ பணியில் சேர முயற்சித்து, முடியாது போயிற்று, அதன்பின் சென்னையிலே டாக்டர் லட்சுமி தீபன் ஆயுர்வேதிக் கல்லூரியில் உடற்கூற்று பாடம் சொல்லிக்கொடுப்பாராக பணியில் சேர்ந்தார். ஆயுர்வேத மருந்துகளால் வியாதிகளைக் குணப்படுத்த முடியும் எனக்கூறி மக்களைக் கவர்ந்தார். ஆயுர்வேத மருந்துகளைக் கொண்டு தற்காலத்திற்கு ஏற்றவாறு ஒரு ஆய்வு மேற்கொண்டார். அவர் நடத்திய ஆய்வில் யானைக்கால் வியாதிக்கும், மலேரியா காய்ச்சலுக்கும்  தீர்வு காணும் வகையில் அபூர்வ மருந்து கண்டுபிடிக்கப்பட்ட விவரம் கல்லூரியிலிருந்து பிரசுரம் ஆன தன்வந்திரி புத்தகத்தில் வெளிவந்தது. ஒரு அமெரிக்க டாக்டர், ராக்பெல்லர் நிறுவனத்தின் உதவியால் இந்தியாவில் தேயிலைத் தோட்டங்களில் கொக்கிப் புழுக்களை கட்டுப்படுத்துவதற்கு நிதி உதவி செய்ய வந்தவரை சுப்பாராவ் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் அறிவுரை சுப்பாராவின் மனதில் ஒரு  திருப்புமுனையாக அமைந்தது. அமெரிக்க டாக்டர் சுப்பாராவை மேற்கொண்டு படிக்க அமெரிக்கா அழைத்தார்.

காக்கிநாடாவிலிருந்து சத்தியலிங்க நாய்க்கர் தர்ம மடத்திலிருந்து ஆதிரிக்கிறோம்  என்ற உறுதிமொழியும், சத்தியலிங்கம் நாயக்கரான மாமனார் சேகரித்து கொடுத்த நிதி உதவியின் பேரிலும் சுப்பாராவ் அமெரிக்க ஐக்கிய நாடு செல்ல முடிந்தது. லட்சுமிபதி ஏற்படுத்திய சென்னை ஆயுர்வேத கல்லூரியில் பாடம் நடத்தி அதன் மூலம் மாதம் ரூ 100 ஊதியமாக கிடைத்த வருமானத்தை வைத்து சிக்கனமாக வாழ்க்கை நடத்தினார். அவர் சென்னை ராயப்பேட்டை முத்து முதலியார் தெருவில் ஒரு வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.சுப்பாராவ் ஏற்கனவே முடிவு செய்திருந்தபடி 26 /10 /1923 -இல்அமெரிக்காவிற்கு புறப்பட்டு பாஸ்டன் நகரைச் சென்றடைந்தார். அதன் பின் வாழ்க்கையில் சில இன்னல்கள் ஏற்பட்டன. அந்த நிலையில் பரந்த குணம் நிறைந்த மருத்துவரான ஸ்ட்ராங் என்பவர் சுப்பாராவின் உடனடி செலவுகளை ஈடுகட்ட முன்வந்தார். அவருடைய மருத்துவ படிப்பிற்கு உபகாரப் பணம் பெற முடியாததால் பாஸ்டன் மருத்துவமனையில் நிராயுதபாணியாக இருப்பதாக உணர்ந்தார். அந்த நிலைமையை மேம்படுத்த அவர் சிறுசிறு பணிகள் செய்து சமாளித்தார்.1924 ஆம் ஆண்டு ஹார்வேர்ட் பள்ளியில் உடம்பின் உஷ்ணம் தொடர்பான மருத்துவ படிப்பில் பட்டம் பெற்றார். அதன்பின் அவர் உயிரியல் துறையில் சேர்ந்தார். கிரைரஸ்விஸ்கி என்பவரின் வழிகாட்டுதலின் கீழ் பணியாற்றினார். அவர் மனித உடலில் பாஸ்பர அமிலம் சல்லடை போன்ற நீர்த் தன்மையானதாகவும் திரவ பதார்த்தமாகவும் இருக்கலாம் என்ற மதிப்பீட்டில் அபிவிருத்தி செய்தார். இந்த விவரம் 1930-ஆம் ஆண்டு பாடப் புத்தகத்தில் இடம்பெற்றது. இக்கண்டுபிடிப்பிற்காக "ராக்பெல்லர்"விருது கிடைத்தது. அதே ஆண்டான1930-இல் சுப்பாராவ் உயிரியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார்.

சுப்பாராவ் பத்தாண்டு காலம் ஹார்வார்டில் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். அவருடன் பணியாற்றிய நண்பர்கள் இவருடைய கண்டுபிடிப்பை பற்றி பாராட்டு தெரிவித்தார்கள். அவர் நோய்களின் எதிர்ப்பு மருந்து கண்டுபிடித்தன் விளைவாக 1995 ஆம் ஆண்டில் குஜராத்திலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட பிளேக் எனும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற முடிந்தது. அதன் காரணமாக நமது நாடு சுப்பையாவின் சேவையை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறது.சுப்பாராவின் ஆய்வில் உடன் பணியாற்றியர்களான  ஜார்ஜ் ஹிட்சிங்ஸ் மற்றும் ஜெர்ட்ருடு ஏழியன்   ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு கிடைத்தது. அவர்கள் சுப்பாராவ் கண்டுபிடிப்பை மறைத்துவிட்டு சில வருடங்களுக்கு பின் அவர்கள் கண்டுபிடித்ததாக அவர் மீது வைத்திருந்த பொறாமையினால் சுப்பராவின் பெயரை வெளிக்கொணராமலேயே மறைத்து விட்டனர் என சொல்லப்படுகிறது. எப்படி இருந்தபோதிலும் சுகாதார ஆய்வில் கண்டுபிடித்த அரிய மருந்துகள் அவருக்குப் பின்னும் பல வகைகளில் நாட்டில் பயன்பாட்டில் இருந்துவருகின்றன. அவரை நினைவு கூறும் பொருட்டு அவர் படத்துடன் ஒரு ரூபாய் மதிப்புள்ள தபால்தலையை இந்திய அரசு வெளியிட்டு கௌரவப்படுத்தியது. ஹைதராபாத் தொழிற்கல்லூரி வளாகத்தில் சுப்பராவின் உருவ சிலை நிறுவப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க ராணுவ வீரர்கள் பசிபிக் பிராந்தியத்தில்லிருக்கும் போது மலேரியா காய்ச்சலாலும், யானைக்கால் வியாதியாலும் அவதிப்பட்டனர். இவர் கண்டுபிடித்த ஹெட்ரஜான் என்னும் நோய் எதிர்ப்பு மருந்துகளின் உதவியினால் அவர்கள் காப்பாற்றப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பயனாக இவரை கௌரவப்படுத்தும் நோக்கில் அமெரிக்க சினாமிட் ஆய்வுக்கூடத்தில் இவர் பெயரில் ஒரு நூலகம் திறக்கப்பட்டது. அதே ஆய்வு கூடத்தில் ஒரு டானிக் பெயரை சுப்பாராவின் பெயரிலேயே வைத்து விற்பனைக்கு விட்டார்கள் என்பதே மேலும் பெருமைக்குரியது. அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க் மாநிலத்தில் முத்து நதிக்கரையில் சுப்பாராவின் பெயரில் ஆராய்ச்சி கூடம் நிறுவப்பட்டு அங்கு பல தொற்று வியாதிகளை கட்டுப்படுத்தும் மருந்தான டெட்ரா  சைக்கிளின் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அம்மருந்து உலக சுகாதார இயக்கத்தின் மூலமாக உலக அளவில் தொத்துநோய்க்கும், மலேரியா வியாதிக்கும் எதிர்ப்பு  மருந்தாக பயன்படுவதற்கு முக்கிய மருந்தாக கருதப்படுகிறது. மனிதன் வாழ்க்கையில் ஏழையாகப் பிறந்தாலும் அது ஒரு தடைக்கல்லாக இருக்கிறது. தோல்வியில் மனம் தளராது விடாமுயற்சியினால் தான் மேற்கொண்ட குறியினை அடைவதற்கு சுப்ராவின் வாழ்க்கை சரித்திரம் ஒரு முன் உதாரணமாக அமைகிறது. சுப்பாராவ் ஓய்வு இல்லாமல் ஆய்வு செய்ததின் பேரில் 1948 ஆம் ஆண்டில் 52-ஆம் வயதில் காலமானார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்