Ad Code

Ticker

6/recent/ticker-posts

TNPSC குரூப்-1 தேர்வு


துணை ஆட்சியர் (டெபுடி கலெக்டர்), டெபுடி சூப்பிரெண்ட்டெண்ட் ஆஃப் போலீஸ் (டிஎஸ்பி பிரிவு-1), உதவி ஆணையர் (வணிக வரி), உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சித் துறை) ஆகிய பணிகளில் தகுதியுடையவர்களைச் சேர்ப்பதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குருப்-1 தேர்வுகளை நடத்துகிறது. மாநிலத்தில் ஆட்சிப் பணி, காவல் பணிகளுக்காக குரூப்-1 தேர்வு முக்கியமாக கருதப்படுகிறது. உதவி கமிஷனர், டி.எஸ்.பி, உதவி ஆட்சியர் என்பன போன்ற பணிக்காக குரூப்-1 தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவ்வாறு தேர்வு செய்யப்பட்டு ஆட்சிப்பணி காவல் பணியில் பணியாற்றும் இவர்கள் 15 ஆண்டுகளுக்குப் பின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரியாக பதவி உயர்த்தப்படுகின்றனர். ஆகவேவே மாநில அளவில் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-1 தேர்வு முக்கியமானதாக கருதப்படுகிறது. 

 இத்தேர்வை யார் எழுதலாம்? 

பத்தாம்வகுப்பு படித்து விட்டு, பிளஸ் டூ படித்து, அதன் பிறகு இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் இந்தப் பணியில் சேர விண்ணப்பிக்கலாம். பட்டப் படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் குரூப்-1 முதல்நிலைத் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். மெயின் தேர்வு எழுதும்போது, பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டியதிருக்கும். எம்பிபிஎஸ் படிப்பில் தேர்ச்சி பெற்று இன்டர்ன்ஷிப் முடிக்காத மாணவர்களும் இத்தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். ஆனால், மெயின் தேர்வு எழுதும்போது அதுகுறித்த ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். கிரிமினாலஜி அல்லது தடய அறிவியல் பாடத்தில் பட்டப் படிப்பு அல்லது டிப்ளமோ படித்தவர்களுக்கும் உடல் திறனில் தேசிய அளவில் விருது பெற்றவர்களுக்கும் டிஎஸ்பி (பிரிவு-1) பணியில் முன்னுரிமை அளிக்கப்படும். வணிகவியல் மற்றும் சட்டப் பட்டப் படிப்புகளைப் படித்து வரிச் சட்டங்களில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வணிக வரி உதவி ஆணையர் பணியில் முதல் முன்னுரிமை அளிக்கப்படும். வணிகவியல் மற்றும் சட்டப் பட்டப் படிப்புகளைப் படித்தவர்களுக்கு இரண்டாவது முன்னுரிமையும் வணிகவியல் அல்லது சட்டப் பட்டப் படிப்புகளில் ஏதாவது ஒன்றைப் படித்து வரிச் சட்டங்களில் டிப்ளமோ பெற்றவர்களுக்கு மூன்றாவது முன்னுரிமையும் வணிகவியல் அல்லது சட்டப் பட்டப் படிப்புகளில் ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றவர்களுக்கு நான்காவது முன்னுரிமையும் அளிக்கப்படும். காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் ஊரகச் சேவை முதுநிலைப் பட்டப் படிப்பில் படித்தவர்களுக்கும் முதுநிலை பட்டப் படிப்பு அல்லது விரிவாக்கத் துறையில் டிப்ளமோ படித்தவர்களுக்கும் முதுநிலைப் பட்டப் படிப்பு அல்லது சமூகவியலில் டிப்ளமோ படித்தவர்களுக்கும் ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பணியில் முன்னுரிமை அளிக்கப்படும். டிஎஸ்பி பணியில் சேர விரும்புவர்களுக்கு உடல் தகுதியும் கருத்தில் கொள்ளப்படும். அதற்காக மருத்துவ போர்டின் சோதனையும் இருக்கும். டெபுடி கலெக்டர் பணியில் சேர விரும்புபவர்களுக்கு தமிழ்நாடு மருத்துவ போர்டு வரையறுத்துள்ள உடல் தகுதியை பூர்த்தி செய்ய வேண்டும். இந்தப்பணிகளில் சேர விரும்புபவர்களுக்கு தமிழில் போதிய அறிவு இருக்க வேண்டும். வணிகவரித் துறை உதவி ஆணையர் பணி தவிர, மற்ற பணிகளில் சேர விரும்புபவர்களுக்கு குறைந்தபட்சம் 21 வயது ஆகி இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், சீர் மரபினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் அனைத்து சாதிகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 35. மற்றவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 30. வணிகவரித் துறை உதவி ஆணையில் பணியில் சேர விரும்பும் பட்டதாரிகளுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 21. தாழ்த்தப்பட்டோர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், சீர்மரபினர்,பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் அனைத்து சாதிகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 35. மற்றவர்களுக்கு வயது வரம்பு 30. பிஎல் படித்த விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகை அளிக்கப்படும்.தாழ்த்தப்பட்டோர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் போன்ற பிரிவுகளைத் தவிர மற்றவர்கள் மத்திய, மாநில அரசுப் பணிகளில் ஐந்து ஆண்டுக்கு மேல் பணிபுரிந்து வந்தால், அவர்கள் இந்த வயது வரம்புக்குள் இருந்தாலும் இந்தப் பணிகளில் சேர விண்ணப்பிக்க முடியாது.
  குரூப்-1 தேர்வு எப்படி இருக்கும்? இத்தேர்வு முதல் நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல்...என மூன்று கட்டங்களாக இருக்கும். முதல் நிலைத் தேர்வு மூன்று மணி நேரம் நடைபெறும் இத்தேர்வில் ஜெனரல் ஸ்டடீஸ் குறித்து 150 கேள்விகள் அப்ஜெக்ட்டிவ் முறையில் (பட்ட நிலையில்) கேட்கப்படும். ஆப்டிட்யூட் அண்ட் மெண்டல் எபிலிட்டி டெஸ்ட்டில் (எஸ்எஸ்எல்சி நிலையில்) 50 கேள்விகள் கேட்கப்படும். இதற்கு மொத்தம் 300 மதிப்பெண்கள். தாழ்த்தப்பட்டோர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தகுதி பெற குறைந்தது 90 மதிப்பெண்களும் மற்றவர்கள் 120 மதிப்பெண்களும் எடுக்க வேண்டும்.
மெயின் தேர்வில் மூன்று தாள்கள் உண்டு. முதல் தாளில் இந்திய தற்கால வரலாறு மற்றும் இந்தியக் கலாசாரம், ஜெனரல் ஆப்டிட்யூட் அண்ட் மெண்டல் எபிலிட்டி டெஸ்ட், இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் வளர்ச்சியில் அறிவியல் தொழில்நுட்பத்தின் தாக்கம் மற்றும் பங்கு குறித்து கேள்விகள் இருக்கும். இரண்டாவது தாளில் இந்திய அரசியல் மற்றும் இந்தியாவைப் பாதிக்கும் வகையில் உருவாகி வரும் உலக அரசியல் போக்குகள் மற்றும் இந்தியப் புவியியல், தமிழ் சமூகம், கலாசாரம், பாரம்பரியம், ஆங்கில மொழித் திறன், குறிப்பாக தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகம் ஆகியவை குறித்து கேள்விகள் கேட்கப்படும். மூன்றாவது தாளில், தேச மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நடப்பு நிகழ்வுகள், தற்போதைய பொருளாதாரப் போக்குகள் (இந்தியப் பொருளாதாரம், இந்தியா மீதான உலகப் பொருளாதாரத் தாக்கம்), இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் சமூகப் பொருளாதார பிரச்சினைகள் ஆகியவை குறித்த கேள்விகள் கேட்கப்படும்.
விடைகளை எழுத்து வடிவில் எழுத வேண்டியதிருக்கும். ஒவ்வொரு தாளுக்கும் விடையளிக்க மூன்று மணி நேரம் வழங்கப்படும். ஒவ்வொரு தாளுக்கும் மொத்த மதிப்பெண்கள் 300. தாழ்த்தப்பட்டோர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், சீர் மரபினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தகுதி பெற குறைந்தது 306 மதிப்பெண்களும் மற்றவர்கள் 408 மதிப்பெண்களும் எடுக்க வேண்டும். மெயின் தேர்வைத் தொடர்ந்து தகுதியுடையவர்களுக்கு நடத்தப்படும் நேர்காணலுக்கு 120 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதல்நிலைத் தேர்வு ஸ்கிரீனிங் டெஸ்ட் மட்டுமே. எனவே, முதல்நிலைத் தேர்வில் உரிய மதிப்பெண்களைப் பெற்று தகுதி பெறுபவர்கள் மட்டுமே, மெயின் தேர்வை எழுதுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். எத்தனை பேர் தேர்வு செய்யப்பட வேண்டுமோ அதைப்போல 50 மடங்கு அதிகமானவர்கள் மெயின் தேர்வு எழுத அழைக்கப்படுவார்கள்.

  விண்ணப்பிப்பது எப்படி? விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு முன்னதாக தங்களது புகைப்படத்தை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஹால்டிக்கெட் இ-மெயில் மூலம் அனுப்பப்படும் என்பதால் விண்ணப்பதாரர்களுக்கு இ-மெயில் முகவரி இருக்க வேண்டியதும் அவசியம். எஸ்எம்எஸ் மூலம் தகவல் பெற விரும்புபவர்கள், தங்களது மொபைல் எண்ணையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை விண்ணப்பதாரர்கள் பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளலாம் அல்லது பிடிஎஃப் முறையில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். முதல்நிலைத் தேர்வு எழுதக் கட்டணம் ரூ.125. மெயின் தேர்வு எழுதவும் அதே கட்டணம்தான். தேர்வுக் கட்டணம் எழுதுவதிலிருந்து விலக்கு பெறுபவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். ஏற்கெனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பதிவு செய்தவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். இந்தியன் வங்கி அல்லது தபால் நிலையம் மூலமாகவும் செலுத்தவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 
  தேர்வு எங்கே எழுதலாம்? 
அரியலூர், சென்னை, சிதம்பரம், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், காரைக்குடி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாகர்கோவில், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, தேனி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய நகரங்களில் முதல்நிலைத் தேர்வை எழுதலாம். மெயின் தேர்வை சென்னையில் மட்டுமே எழுத முடியும்.

1.Group-1 Services Preliminary Examination Question Paper pdf downloading-click here
2.Group -1 Services Main Examination Questions Paper-1 pdf downloading-click here
3.Group -1 Services Main Examination Questions Paper-2 pdf downloading-click here
4.Group -1 Services Main Examination Questions Paper-3 pdf downloading-click here
5.Group-1A Services Preliminary and Main Examination Syllabus pdf downloading-click here
6.Group-1B Services Preliminary and Main Examination Syllabus pdf downloading-click here
7.Group-1C Services Preliminary and Main Examination Syllabus pdf downloading-click here
8.Group-1 Services Main Examination Syllabus pdf downloading-click here

கருத்துரையிடுக

1 கருத்துகள்