Ad Code

Ticker

6/recent/ticker-posts

அனிதாமேரி

சுனாமி என்றால் கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்வரை என்னவென்று தெரியாமல் இறந்தவர்களுக்கு, ராட்சத கடல் அலைகள் காட்டிக் கொடுத்த பின்பு தமிழக கடற்கரையில் பொழுதை கழிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது என்னமோ உண்மை. ஆனால் இதையும் பொருட்படுத்தாமல், கன்னியாகுமரி, முட்டம், நாகர்கோவில், லட்சத்தீவுகள், இலங்கை என கடல் பகுதிக்கு சென்று கடலுக்குள் இருக்கும் உயிரினங்கள், தாவரங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார் அனிதா மேரி. அனிதா மேரி நாகர்கோவிலில் உள்ள ஜெர்மன் நிறுவனமான ஐ.ஈ. ஆர் எஸ்.ஈ விஞ்ஞானியாக வேலை பார்த்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் மாநில அளவில் ரேங்க் பெற்று, நாகர்கோவிலில் பட்டப்படிப்பையும், கடல் உயிர் தொழில்நுட்பத் துறையில் எம்.பில் செய்து நெல்லை பல்கலைக்கழக அளவில் தங்கப் பதக்கமும் பெற்றார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதியில் செயல்பட்டுவரும் கடல் விஞ்ஞான தொழில்நுட்ப மையத்தில், இந்தியாவின் தென்மேற்கு, தென்கிழக்கு கடலோரப் பகுதியில் உள்ள கடல் பஞ்கள் குறித்து ஆராய்ச்சி செய்ததில் கடற்பஞ்சுகள் புற்றுநோய், எய்ட்ஸ் உட்பட பல்வேறு நோய்களை குணப்படுத்தும்  குணங்களை பெற்றுள்ளது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து கடல் விசிறி பவளப்பாறைகள் குறித்தும் அனிதாமேரி ஆய்வு செய்து வருகிறார்.
முட்டம் பகுதியில் கூடுதல் கடல் பஞ்சுகளும், மன்னார் வளைகுடா மற்றும் கேரள மாநிலம் விழிஞ்ஞம் பகுதியிலும் பல புதிய வகை உயிர் காக்கும் அரிய மருந்து வகைகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் சிலிண்டர், மாஸ்க்குடன் சென்று பயிற்சி முடித்த பிறகுதான் ஆராய்ச்சியில் ஈடுபட முடியும். இதற்கான முதுல் நிலை சான்றிதழ் பெறவேண்டும். இந்த சான்றிதழை ஆஸ்திரேலியாவை தலைமையிடமாகக் கொண்டு சர்வதேச அளவில் செயல்படும் 'போடி அவேர்' என்ற அமைப்பு வழங்குகிறது. இந்தியாவில் கோவாவில் இந்த அமைப்பு சார்பில் பயிற்சி வழங்கப்படுகிறது.

கேவ் டைவ், மெடிக்கல் டைவ் உட்பட ஆறு நிலைகளில் ஸ்கூபாடைவிங் கற்றுத்தரப்படுகிறது. இந்த சான்றிதழ் பெருபவர்கள் உலக நாடுகளில் உள்ள எந்த கடலிலும் ஆய்வு மேற்கொள்ள முடியும்.கடலுக்கு அடியில் அற்புதமான ஒரு உலகம் இருக்கிறது என்பதை அனிதாமேரி  போல அங்கு சென்று பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். ஒவ்வொரு முறை கடலுக்குப் போகும் போது புதுப்புது அனுபவங்களை பெறுகிறார். கடல் எந்த அளவுக்கு அழகானதாக இருக்கிறதோ? அந்த அளவுக்கு ஆபத்தானதாகவும் இருக்கிறதாம் கடலுக்கு அடியில் உயிர் வாழும் உயிரினங்கள் எதுவும் மனிதர்களுக்கு தொந்தரவு கொடுப்பது இல்லை அதுவும் இவர்கள் மாஸ்க், சிலிண்டர் கொண்டு செல்லும் போது தங்களை விட பயங்கரமான பிராணி ஏதோ வந்துள்ளது என்று நினைத்து பயந்து ஓடி விடுகின்றனவாம். கடல் வாழ் உயிரினங்களை விட திடீர் திடீரென மின்சாரம் வெளிப்படுவதும்,பாறை வெடிப்பதும், வெப்பம் அதிகரிப்பதும் அழுத்தம் கூடுவதும் நடக்குமாம். இவற்றால்தான் ஆபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாம்.

கடலில் 30 கிலோ மீட்டர் ஆழம் வரை சென்று ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. கோவாவில் ஸ்கூபாடைவிங் பயிற்சியை பத்திரிகையாளர் உட்பட பல பெண்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்தியாவிலேயே இந்த பயிற்சி முடித்து கடல் ஆய்வு செய்யும் முதல் பெண் விஞ்ஞானி என்ற பெருமை அனிதா மேரிக்கு கிடைத்துள்ளது. 1997 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து எட்டு ஆண்டுகள் கடல் ஆராய்ச்சி செய்ததால் இவருக்கு கிடைத்த பெருமை இது. எட்டு ஆண்டுகள் ஆராய்ச்சியில் 365 நாட்கள் முழுமையாக கடல் பயணத்தில் செலவிட்டுள்ளார் அதில் 100 நாட்கள் கடல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.மேலும் ,கடல் ஆராய்ச்சி குறித்து எம்.பில் பயின்று வரும் மூன்று இளைஞர்கள் ஸ்கூபாடைவிங் பெற இவரிடம் தான் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் கன்னியாகுமரி, முட்டம் கடல் பகுதியில் 30 கிலோ மீட்டர் ஆழம் வரை கடலில் மூழ்கிச் சென்று ஒரு மணி நேரம் கடலில் பார்த்தவற்றை கடலுக்குள்ளேயே எழுதி இருக்கின்றனர். இதற்கான விசேஷ பேப்பரும்,எழுதுபொருளும் வழங் கப்படுகிறது. ஒரு நாளைக்கு மூன்று முறை பயிற்சி பெறுகின்றனர். இளைய தலைமுறையினரின் 'ஒயிட் காலர் ஜாப்' விரும்புவதை விட்டுவிட்டு சாதனை வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே அனிதா மேரியின் கருத்து.

உயிர் காக்கும் மருந்துகள் அதிக அளவு கண்டுபிடிக்க கடல் ஆராய்ச்சி செய்ய இளைஞர்கள் அதிக அளவில் முன்வரவேண்டும். ஸ்கூபாடைவிங் சான்றிதழ் பெற ரூபாய் 25ஆயிரம் வரை செலவாகிறது. ஏழ்மை நிலையில் உள்ள இளைஞர்களுக்கு வெளிநாட்டு கடல் ஆராய்ச்சி நிறுவனங்கள் கடன் நிதி உதவி அளிக்கிறது. லட்சத் தீவு பகுதியில் உள்ள WWF இந்தியா நிறுவனத்தின் கடல் ஆராய்ச்சி விஞ்ஞானியாகவும்அனிதாமேரி பணியாற்றி வருகிறார்.'ஒரு பெண்ணாக இருந்துட்டு இப்படி ஒரு துறையை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்' என்று கேட்காதவர்களே இல்லையாம்.ஒரு கல்பனா சாவ்லாவை பார்த்த பிறகும், அவருடைய அரிய சாதனைகளை கேள்விப்பட்ட பிறகும் கூட இப்படி தன்னிடம் கேள்வி எழுப்புகிறார்களே என்பதுதான் இவர் வருத்தமாம். கடலுக்கு அடியில் 150 மீட்டர் ஆழம் வரை போய் ஆராய்ச்சி செய்து வந்திருக்கிறார். இவரது ஆர்வத்தைப் பாராட்டி அமெரிக்காவிலுள்ள கன்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த கடல் ஆராய்ச்சி குறித்த மாநாட்டில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் தரப்பட்டது. ஸ்கூபாடைவிங் முறையாகவும் பாதுகாப்பாகவும் கற்றால் கடலின் அற்புத உலகத்தை ரசிக்கலாம். வாழ்க்கையில் கடல் ஆராய்ச்சி செய்யாவிட்டாலும் கடலை ரசிக்கவாவது செய்யலாம். மனித உயிர்காக்கும் கடல் உயிரினங்கள் கண்டுபிடிக்கும் முயற்சிக்கு இவர் பெற்றோர் ஒத்துழைப்பு
நல்கின்னராம்.கடல் வளம் முழுமையாக மனிதகுலத்துக்கு கிடைக்க விஞ்ஞானி அனிதா மேரி போல பலரும் முன்வர வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்