நீர் மாசுபடுதலை தடுத்து, கட்டுப்படுத்தும் பொருட்டும் அதனை பாதுகாக்கும் பொருட்டும் 1974 ஆம் ஆண்டு நமது பாராளுமன்றத்தில் நீர் மாசுகட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இதில் 8 அத்தியாயம் மற்றும்64 பிரிவுகள் உள்ளன.
அத்தியாயம்-1
இதில் வாரியம், மைய மற்றும் மாநில வாரியம், உறுப்பினர், சாக்கடை, கழிவுநீர், வணிக கழிவுநீர், ஓடை மாசுபாடு பற்றி வரையறுக்கப்பட்டுள்ளது.
இது மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கமிட்டி, நிபந்தனைகள், வாரியத்தின் செயல் கூட்டம், தலைவர், செயலாளர் மற்றும் அலுவலர்களின் அதிகாரம் பற்றி விளக்குகிறது.
அத்தியாயம்-2
இது மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கமிட்டி, நிபந்தனைகள், வாரியத்தின் செயல் கூட்டம், தலைவர், செயலாளர் மற்றும் அலுவலர்களின் அதிகாரம் பற்றி விளக்குகிறது.
அத்தியாயம்-3
இது அமைப்பு, கூட்டமைப்பு மற்றும் சிறப்பு இணைப்பு வாரியம் பற்றி விளக்குகிறது. எடுத்துக்காட்டு காவிரி நதிநீர் இணைப்பு ஆணையம். கர்நாடகா தமிழ்நாடு பாண்டிச்சேரி மற்றும் மத்திய வாரிய உறுப்பினர்களை கொண்டுள்ளது.
அத்தியாயம்-4
இது மத்திய மாநில வாரியத்தின் பணிகள் குறித்தும், அதிகாரம் குறித்தும் கூறுகிறது.
அத்தியாயம்-5
இது மாநில அரசுக்கு மாதிரி எடுத்தல், சோதனைச்சாலையில் பரிசோதித்தல் மற்றும் முடிவுகளை வெளியிடுதல் ஆகிய அதிகாரங்களை பற்றி கூறுகிறது. இந்த முடிவுகளின் மூலம் கிணறு மற்றும் ஓடைகளில் வெளியிடப்படும் கழிவுநீரை தடை செய்யலாம்.
அத்தியாயம்-6
இது மாநில, மத்திய வாரியத்தின் நிதி, நிதி நிலை பட்டியல், வருடாந்திர அறிக்கை சமர்ப்பித்தல், கணக்குப் பதிவேடு மற்றும் தணிக்கை, பராமரிப்புப் பற்றி விளக்குகிறது.
இது தண்டனை பற்றி விளக்குகிறது. விதியை மீறுபவர்க்கு ஒரு வருடமோ அல்லது ஆறு மாதமோ சிறைத்தண்டனை. மேலும் இது ஆறு வருடத்திற்கு அபராதத்துடன் நீடிக்கலாம். இது தவறியபட்சத்தில் ஒரு நாளைக்கு ரூபாய் 5000 வசூலிக்கப்படும்.
அத்தியாயம்-8
விதிகளை கூறுவதற்கும், மைய மற்றும் மாநில நீர் பரிசோதனை கூடம், பரிசோதனை, பரிசோதிப்பரின் அறிக்கை, பாதுகாப்பான நடவடிக்கை போன்ற மைய, மாநில, அதிகாரத்தைப் பற்றி விளக்குகிறது.
0 கருத்துகள்