Ad Code

Ticker

6/recent/ticker-posts

உழைப்பு

ரு வேலையை ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டால். அவர் அதை எத்தனை இடையூறுகள் வந்தாலும் பொருட்படுத்தாமல் ஆற்றி முடிப்பதே பணிப் பண்பாடு காரணங்கள் சொல்லி, தாமதங்களை நியாயப்படுத்தாமல். எல்லா தடைகளையும் உடைத்து எறிந்து. பணியை முடித்து, முடிவை மட்டும் கொண்டு செல்லும் ஆற்றல் பெற்றவர்களே ஒரு நிறுவனத்தை தூக்கி நிறுத்த முடியும்.குறித்த நேரத்தில் அலுவலகம் வருதல், தனக்கான இலக்கைத் தினமும் தானே நிர்ணயித்தல், இலக்கை நிர்ணக்கும்போது, எளிதான குறியீட்டை நிர்ணயிக்காமல், கடினமானதை கருதி பார்த்தல், இலக்கை நோக்கி இடைவிடாமல் பயணித்தல், சோர்வு ஏற்படுகின்றபோதெல்லாம் தன்னையே உற்சாகப்படுத்திக்கொண்டு முயற்சி செய்தல், நேரத்தை அடுத்தவர்களுடன் அரட்டையடித்து வீணடிக்காமல் இருத்தல், தேநீர் பருகவும், சிற்றுண்டி அருந்தவும், கணிசமான நேரத்தை செலவழிக்காமல் இருத்தல், கண்ணும் கருத்துமாய் பணியில் ஒவ்வொரு நிமிடத்தையும் ஈடுபடுத்திக் கொள்ளுதல், மேலதிகாரிகள் வரும்போது ஒரு மாதிரியும், மற்ற நேரங்களில் சாவகாசமாகவும் பணியாற்றாமல் இருத்தல், தனக்குகெனத் தானே நிர்ணயித்த பணியைத் தவறாமல் முடித்த பின்னே பணியிடம் விட்டு இல்லம் திரும்புதல் என்று பணியை வழிபாடாக மாற்றிக் கொள்ளுகிறவர்கள் தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் மட்டுமின்றி நம் நாடு வளைந்துவிடாமல் காப்பாற்றும் நெம்புகோலாக திகழ்கிறார்கள்.

உழைப்பில் ஒரு சுவை இருக்கிறது. அதை அனுபவித்து பார்த்தவர்கள் ஒருபோதும் சோம்பியிருப்பதில்லை. அவர்கள் இன்னும் ஏதேனும் கடினமான பணி தனக்கு ஒப்படைக்கப்படுமா என்ற ஆவலுடன் காத்திருக்கிறார்கள். பணி முடியும்போது உண்டாகிற அழகிய பொருள்களால் இதயம் நிரம்புகிறது. மனிதப் பிறவியின் நோக்கம் நிறைவேறியதாக உள்ளம் பரவசமடைகிறது. அந்த திருப்தியை சோம்பியிருப்பவர்களால் ஒருநாளும் அடைய முடியாது. சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருக்கும் பயணியர் அறை உலகத்திலேயே தலைசிறந்த பயணியர் அறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு. பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டிருக்கிறது. அங்கே பாத்திரங்களை கழுவி வைக்கும் பெண்ணொருவர் அவற்றை சுத்தம் செய்கிற பணியை காவியம் படைக்கும் நேர்த்தியுடன் மகிழ்ச்சியுடன் மேற்கொள்கிறார்.  முகச்சுளிப்பு இல்லாமல் அறுவறுப்பு இல்லாமல் அந்த பணியை செய்து முடித்தார். மனிதன் தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறி இறந்திருக்கிறான். ஆனால் வியர்வையில் மூழ்கி ஒருபோதும் மரித்ததில்லை.



கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. 'உழைப்பு' என்ற பதிவாக்கப் பயன்பட்ட
    தங்கள் உழைப்புக்குப் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு