Ad Code

Ticker

6/recent/ticker-posts

ஆசைகளைச் சீரமைத்தல்

சை என்பதற்கு "பற்று" என்று பொருள் உண்டு. ஆசைகள் பெருகப் பெருக மனிதனின் தேவைகளும் தேடல்களும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வாழ்வில் நிறைவு என்பதே மறைந்து விடுகின்றது. தேவைகளுக்கும் ஆசைகளுக்கும் எல்லைகள் இல்லை. ஆனால் நிஜங்கள் உண்டு.
"முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப் பட்டது போல்"என்ற ஒரு பழமொழி உண்டு. இது சற்றுக் கடினமான பழமொழியாக இருந்தாலும் உண்மையை எடுத்துரைக்கும் பழமொழியாகும்.  உன்னால் உன் தகுதிக்கு அப்பாற்பட்டதை அடைய வேண்டும் என்று எண்ணும் பொழுது அது பேராசையாக மாறிவிடுகின்றது. வாழ்க்கையின் உண்மையை அறிய வேண்டித் தன் அரண்மனை வாழ்வையே உதறித் தள்ளினார் புத்தர். அவர் தம் வாழ்வில் கண்ட உண்மை யாதெனில். "ஆசையே துன்பத்திற்குக் காரணம், ஆசையை நீக்கினால் துன்பமின்றி வாழலாம்" என்பதாகும். பகவத்கீதையும் 'பற்று' மற்றும்'சுயநலத்தை' ஒழிக்க வேண்டும் என்று கூறுகின்றது. மேலும் கீதையில் பகவான் தன்னிலே பற்றும் வைக்கும்படியும், செய்யும் செயல்களின் பயன் அனைத்தையும் 'தனக்கு அர்ப்பணிக்கும் படியும் அர்ஜுனனுக்கு கூறுகின்றார். இதனையே வள்ளுவர் கூறுகையில்,
"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" என்று கூறுகின்றார். அதாவது நாம் நீலையற்ற துன்பம் தரும் பொருளில் பற்று வைக்காது நிலையானதும் இன்பமே தரக்கூடியதுமான பரம்பொருள் மீது பற்று வைக்க வேண்டும் என்பது பொருளாகும்.


 ஆசை நீத்தவர்க்கே இறைவன் வீடுபேறு தருகின்றான். எல்லா ஆசைகளும் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்ற மூன்றில் அடங்கும்.இத்தகைய ஆசைகளை வெல்லும் தன்மை கொண்டவன் இறைத்தன்மையை அடைகின்றான். இன்னும் கூறப் போனால் நமது முனிவர்கள்.
"ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்" என்று கூறுகின்றனர். ஆசை அறுவது நமது முயற்சியாலும், அறிவுத்திறனாலும் செயல்பாடுகளாலும் மட்டுமே முடியும். ஆசை நீக்கும் வழியாக திருஞானசம்பந்தர் கூறும் பாடலை தினமும் ஓதினால் பற்றிலிருந்து விடுபடலாம் என்று கூறுகின்றார். அப்பாடல் வருமாறு
"வந்த பொருளாசை மண்ணாசை பெண்ணாசை இந்த வகை ஆசையெல்லாம் என் மனதில் வந்து இனிச் சேராமல் வாழ நினை கண்டாய் தென்கூடல் பேராத சொக்கநாத வெண்பா".
எனவே அற்ப ஆசைகளையும் தகுதிக்கு மீறிய ஆசைகளையும் ஒழித்தால் வாழ்வில் முன்னேற்றம் காணலாம்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்