Ad Code

Ticker

6/recent/ticker-posts

விக்ரம் சாராபாய்

"உலக நாடுகளில் சில சந்திரனையோ அல்லது வேறு கிரகங்களையோ சென்றடைவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.அந்நாடுகளுடன் போட்டியிட்டு மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதில்லை நம் கனவு. ஆயினும், உலக சமுதாயத்தில் பாரதம் தனி பெரும் இடம் வகிக்க, தனிமனித சமுதாய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கவே இந்த செயற்கைக்கோள் அனுப்பும் முயற்சி" என்று பாரத விண்வெளி கோட்பாட்டை விவரித்தவர் விக்ரம் சாராபாய். அகமதுபாத்தில் பெரும் பண வசதி படைத்த அம்பாலால்- சரளாதேவி தம்பதிக்கு மகனாக 1919ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி பிறந்தார் விக்ரம் சாராபாய். சிறுவயதிலிருந்தே பாடங்களை கற்றுக் கொள்வதில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தவர் விக்ரம் சாராபாய். தங்கள் மகன் படித்து கெட்டிக்காரனாக விளங்க வேண்டும் என்ற விருப்பம் கொண்ட பெற்றோருக்கு அவன் நன்றாக படித்து வருவது மகிழ்ச்சியை தந்தது. உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது அறிவியல் பாடத்தில் நடைபெறும் சிறு சிறு சோதனைகளை மிகவும் ஆர்வமுடன் கவனிப்பார். ஆசிரியர் செய்து முடித்தும் தானும் அதே மாதிரி சோதனைகளை செய்து மகிழ்வார். அறிவியலில் ஆர்வம் கொண்டிருந்த விக்ரமுக்கு அதில் சிறந்து விளங்க தேவையானவற்றை வாங்கித் தந்தார் தந்தை. அறிவியல் செய்திகள் அடங்கிய புத்தகங்கள் சோதனை கருவிகள் வாங்கி தந்து அவரை ஊக்குவித்தார்.

விக்ரம் சாராபாய் குஜராத்தில் கல்லூரிப் படிப்பு முடித்தவுடன் அறிவியல் மேற்படிப்புக்காக லண்டனில் கேம்பிரிட்ஜ் கல்லூரியில் சேர்ந்து படித்தார். தனது 20 வயதில் பௌதிக இரவிலும், கணிதத்திலும் படித்து பட்டம் வாங்கினார். அறிவியல் முன்னேற்றம் பற்றி நாளிதழ்களிலும் புத்தகங்களிலும் வந்த செய்திகளைப் படித்து தன் அறிவை வளர்த்துக்கொண்டார். இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது லண்டனிலிருந்து விக்ரம் சாராபாய் இந்தியாவுக்குத் திரும்பினார். இந்திய அறிவியல் கழகம் பெங்களூரில் அப்போது புகழுடன் இருந்தது. அது ஆராய்ச்சிக்கு மிகவும் சிறந்த இடமாக விளங்கியது. 1930 அதன் தலைவராக விளங்கிய சர்.சி.வி.ராமன் நோபல் பரிசு பெற்ற சிறப்பிக்கப்பட்டார். அதனால் இந்திய அறிவியல் கழகம் அறிவியலில் ஈடுபடும் மாணவர்களின் கவனத்தை ஈர்த்தது. விக்ரம் சாராபாய் பெங்களூர் சென்று அறிவியல் கழகத்தில் சேர்ந்தார். ராமனிடம் கேட்டு பல ஆராய்ச்சிகளை செய்தார். அவர் தலைமையில் "காஸ்மிக் கதிர்கள்" பற்றிய இயற்பியல் துறையில்  முதலில் ஆராய்ச்சிப் பணியை மேற்கொண்டார். டாக்டர் ஹோமி பாபா அறிவியல் கழகத்தில் பணி செய்து கொண்டிருந்தார். சர்.சி.வி.ராமனும் டாக்டர் ஹோமி பாபாவும் விக்ரம் சாராபாய் கவர்ந்னர்.விக்ரமும் அவர்களை போலவே நவீன இந்தியாவில் ஏதாவது ஒரு சாதனை செய்ய வேண்டும் என்று விரும்பினார். அப்போதுதான் இந்திய அணுவாற்றல் அறிஞர் டாக்டர் ஹோமி பாபாவுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.

டாக்டர் ஹோமி பாபா பிற்காலத்தில் இந்தியாவில் முதன் முதலாக அணுமின் நிலையம் ஏற்படச் செய்தவர். அவரைப் போலவே விக்ரம் சாராபாய் "காஸ்மிக் கதிர்கள்" பற்றி ஆராய்ச்சி செய்ய விஞ்ஞான ஆய்வுக்கூடம் நிறுவ வேண்டும் என்று கனவு காண ஆரம்பித்தார். 1943 விக்ரம் சாராபாய் இமயமலைப் பகுதிக்குச் சென்றார். காஸ்மிக் கதிர்கள் பற்றிய ஆராய்ச்சியை அங்கே அவர் செய்ய விரும்பினார். மலைகளின் கம்பீரமான தோற்றமும், விண்ணில் பல வண்ணங்கள் வீசும் அழகையும் அங்கே கண்டு மகிழ்ந்தார். இயற்கையான சூழ்நிலையில் காஸ்மிக் கதிர்கள் பற்றி ஆராய உறுதி பூண்டார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் "போட்டோ மிஷின்"குறித்து 1946-இல் ஆராய்ச்சி துவங்கினார். அங்கே அவர் செய்த நியூக்ளியர் பிசிக்ஸ் பற்றிய ஆராய்ச்சிக்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1947 அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. அறிவியல் ஆய்வுக்கூடம் ஏற்படுத்த வேண்டும் என்பது விக்ரம் சாராபாய் எண்ணமாக இருந்தது. ஆரம்ப காலத்தில் பணவசதி இல்லாமல் தவித்தாலும் தேவையான உதவிகள் சிறிது சிறிதாக வரத் தொடங்கின. அவருடைய பெரும் முயற்சி காரணமாக 1952 அறிவியல் ஆய்வுக்கூடம் கட்டடப் பணி அகமதாபாத்தில் ஆரம்பிக்கப்பட்டது. விக்ரம் சாராபாயின் முயற்சிக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக சர்.சி.வி.ராமன் அடிக்கல் நாட்டினார்.

இந்தியாவில் காஸ்மிக் கதிர்கள் ஆராய்வதற்காக ஏற்பட்ட முதல் ஆய்வுக் கூடம் என்ற பெருமை பெற்ற இதனை 1954 பண்டித ஜவகர்லால் நேரு திறந்து வைத்தார். அகமதாபாத் தவிர காஷ்மீரில் குல்மார்க் என்ற இடத்தில் ஒரு கிளை ஆராய்ச்சி நிலையத்தையும் தோற்றுவித்தார். விண்வெளி பற்றிய ஆராய்ச்சியை இந்தியாவில் முதன்முதலாக செய்ய முயன்றவர் விக்ரம் சாராபாய் தான்.தன் ஆய்வுக் கூடத்தில் இருந்த பல அறிவியல் நிபுணர்களைக் விண்வெளி பற்றிய செய்திகளை அறிந்து வர வெளிநாட்டிற்கு அனுப்பி தகவல் சேகரித்தார். அதனால் விக்ரம் சாராபாயின் ஆராய்ச்சிக் கூடத்தின் பெருமை இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பல உலக நாடுகளில் பரவியது. உலக அறிவியல் அறிஞர்கள் இவரிடம் ஆலோசனை கேட்க ஆரம்பித்து விட்டனர். விண்வெளி ஆராய்ச்சி, காஸ்மிக் கதிர்கள் ஆகியவை பற்றி ஆராயும் குழுக்களில் டாக்டர் விக்ரம் சாராபாய் சேர்ந்து பணி செய்தார். விக்ரம் சாராபாய் சிறந்த விஞ்ஞானியாக மட்டுமல்லாமல் சிறந்த வியாபாரியாக, திகழ்ந்தார் வியாபாரம் செய்து பணம் சம்பாதித்தால் அதில் ஒரு பகுதியை ஆராய்ச்சிக்கு செலவிட முடியும் என்று உணர்ந்தார். அதனால்தான் தான் ஆரம்பித்த சாராபாய் மருந்து கம்பெனி விற்பனையும் நன்கு கவனித்துக் கொண்டார். ஜப்பானின் நாகசாகி, ஹிரோஷிமா குண்டு வெடிப்புக்குப் பின் இந்தியா அணு ஆற்றலை அமைதி பணிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. அந்த சமயத்தில் உலக நாடுகளிடையே அணுவாற்றல் பற்றிய நமது கொள்கையை உருவாக்கி இந்தியாவின் செல்வாக்கை உலக அரங்கில் உயர்த்தினார்.
அணுகருவிகளைப் பற்றிய உலகளாவிய அறிக்கை தயாரிப்பில் ஐநா பொதுச் செயலாளருக்கு உதவும் குழுவில் இருந்து பணியாற்றினார் சாராபாய். டாக்டர் ஹோமி பாபா உதவியுடன் அன்றைய பாரதப் பிரதமர் நேரு முன்னிலையில் 1962-இல் இந்திய தேசிய விண்வெளி ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. சாராபாய் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அனைவரும் அறிவியல் அறிவு பெறுவதற்காக அகமதாபாத்தில் "சமூக அறிவியல் நிலையம்" ஒன்றை நிறுவினார். அறிவியலை மக்களின் நல்வாழ்வுக்கு உதவிட அவர் தீட்டிய திட்டம் தான் வானில் செயற்கைக்கோளை ஏவும் திட்டம். அதற்காக 1963 கேரளா மாநிலம் தும்பா ராக்கெட் ஏவுதளத்தை நிறுவினார்.இந்திய அணுசக்தித் துறையின்கீழ் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் உருவானது. வானிலை ஆராய்ச்சி, தொலைத்தகவல் தொடர்பு, இயற்கைவள உறைவிடங்கள் உணர்தல் என நம் விண்வெளி ஆய்வின் முப்பெரும் கொள்கையை மனதில் கொண்டு புவி காற்று புலம் வளையம்மிட்டுச் செல்லும் கேரள பகுதியான திருவனந்தபுரத்துக்கு அருகில் தும்பா என்னுமிடத்தில் கடற்கரையோரம் தும்பா நிலநடுக்கோட்டு விண்கணை ஏழு நிலையம் அமைத்தனர். வானிலை ஆய்வுக்காக முதன் முதல் விண்கலம் 1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் தேதி செலுத்தப்பட்டது.' நைசி அப்பாச்சி'என்ற அமெரிக்க ஏவுகணையே இந்திய மண்ணிலிருந்து செலுத்தப்பட்ட முதல் விண்கணை.பின் இந்த ஏவுதளம் 1968-இல் ஐக்கிய நாடுகளுக்காக  அர்ப்பணிக்கப்பட்டது.

1969 இல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ஒன்றை விக்ரம் சாராபாய் ஏற்படுத்தினார். உலக நாடுகளுக்கு சமமாக இந்தியாவும் விண்வெளி ஆராய்ச்சியில் முன்னேற வேண்டும் என்பதே அவருடைய விருப்பமாக இருந்தது. தமிழ்நாட்டில் கொடைக்கானலில் விண்வெளி ஆராய்ச்சி செய்யும் சோதனை சாலையை விக்கிரம் சாராபாய் தொடங்கினார். இந்தியா விடுதலை பெற்ற பிறகு உலக சமாதானத்திற்கும் மக்கள் நல்வாழ்வுக்கும் பயன்பட அணு சக்தியை நாம் பயன்படுத்த வேண்டும் என்ற கொள்கை உறுதி பெற்றது. அதனால் 1948-இல் அடாமிக் எனர்ஜி கமிஷன் ஏற்படுத்தப்பட்டது.1966-இல் ஹோமிபாபா இறந்தார்.அவருக்குப் பிறகு அணுசக்தித் துறையில் அவர் செய்த பணியை டாக்டர் விக்ரம் சாராபாய்  தொடர்ந்தார்.இந்திய அணுவாற்றல் குழுவின் தலைமை பொறுப்பு.விக்ரம் சாராபாயிடம் வந்தது. இயற்பியல் துறைக்கான எஸ்.எஸ்.பட்நாகர் நினைவுப் பரிசை பெற்றார். 1966-இல் இந்திய அரசு விக்ரம் சாராபாய்க்கு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்தது..அணுசக்தியின் ஆற்றல் பற்றியும் அதை எவ்வாறு சமாதான சுகவாழ்விற்கு பயன்படுத்தலாம் என்பதை வல்லுனர்களுடன் கலந்து பேசி விரைவில் அத்துறையில் இந்தியா முன்னேற டாக்டர் விக்ரம் சாராபாய் பாடுபட்டார். கேரளத்தில் தும்பா என்ற இடத்தில் ராக்கெட் ஏவுதளம் நிறுவ 1968 ஆம் ஆண்டு உதவிகள் செய்ய ஆரம்பித்தார். விண்வெளிக் கோள் செலுத்தும் நிலையம் ஒன்றை ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் உருவாக்க உதவினார்.

1975-இல் விண்வெளிக்கு முதன் முதலாக இந்தியா செலுத்திய  விண்வெளி ராக்கெட் ஆரியபட்டா. இதனை உருவாக்க திட்டமிட்டவர் விக்ரம் சாராபாய். ஆனால் அது வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தப்பட்ட போது அவர் இவ்வுலகில் இல்லை.ஆயினும் விண்வெளியில் நமது சாதனையை காண்பவர்கள் விக்ரம் சாராபாயை நினைத்து பாராட்டாமல் இருக்க மாட்டார்கள். 1956-இல் நெசவுத்துறை வல்லுனர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர். ஐ.நா.வின் விண்வெளி மாநாட்டின் அறிவியல் தலைவராகவும் பதவி வகித்தவர். அகில உலக விண்வெளி சங்கம் சந்திரனில் காணப்பட்ட ஒரு அமைதி கடலுக்கு விக்ரம் சாராபாயின் பெயரைச் சூட்டி கவுரவித்திருக்கிறது. இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன் பட்டங்களைப் பெற்றவர். 1970-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வியன்னாவில் நடைபெற்ற உலக அணுவாற்றல் மாநாட்டில் விக்ரம் சாராபாய் தலைவராய் தேர்வு செய்யப்பட்டார்.1971-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி தன் 52வது வயதில் திருவனந்தபுரத்தில் மாரடைப்பால் காலமானார்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்